போனஸ் டேட்டா வழங்கும் ஜியோ… அசத்தல் பிளான்கள் பற்றி தெரியுமா?
உங்கள் பணத்திற்கான மதிப்பை அதிகரிப்பதற்கு ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஒரு சில ப்ரீபெய்ட் பிளான்களுக்கு போனஸ் டேட்டாவை தற்போது சேர்த்து வருகிறது. எப்பொழுதும் நீங்கள் அதிக டேட்டா கொண்ட பிளான்களை தேடிக் கொண்டிருக்கக் கூடிய ஒரு நபர் என்றால் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய சில விஷயங்கள் இதோ.
இரண்டு பிளான்களுக்கு டேட்டா பூஸ்டர்கள் :
1. 399 ரூபாய் பிளானில் வழக்கமாக அன்லிமிடெட் போன் கால்கள், ஒரு நாளைக்கு 100 SMS மற்றும் தினசரி 3GB டேட்டா கொடுக்கப்படும். ஆனால் தற்போது எந்த ஒரு கூடுதல் செலவு இல்லாமல் எக்ஸ்ட்ராவாக 6GB இலவச டேட்டா கொடுக்கப்படுகிறது. சொல்லப்போனால் இது கிட்டத்தட்ட 61 ரூபாய்க்கான டேட்டா வவுச்சர் இலவசமாக வழங்கப்படுவதை போல உள்ளது. இது தவிர நீங்கள் JioTV, JioCinema, JioCloud, மற்றும் அன்லிமிடெட் 5G டேட்டா போன்ற கூடுதல் சலுகைகளையும் அனுபவித்துக் கொள்ளலாம். இந்த பிளான் 28 நாட்கள் வேலிடிட்டி உடன் வருவதால் ஒரு மாதம் முழுக்க நீங்கள் இந்த பலன்களை பெற்று மகிழலாம்.
2. 219 பிளான் ஒரு குறுகிய ரீசார்ஜ் காலத்தை விரும்பும் நபர்களுக்கு ஏற்றது. இந்த பிளானில் தற்போது கூடுதலாக டேட்டா பூஸ்டர் கொடுக்கப்படுகிறது. இந்த பிளானில் தினமும் 3GB டேட்டா அன்லிமிடெட் போன் கால்கள் மற்றும் ஒரு நாளைக்கு 100 SMS கொடுக்கப்படுவது வழக்கம். ஆனால் தற்போது ஜியோ நிறுவனம் இந்த பிளான் உடன் போனஸ் ஆக 25 ரூபாய் மதிப்பிலான 2GB டேட்டாவை சேர்க்கிறது. இந்த பிளான் 14 நாட்கள் வேலிடிட்டி கொண்டது. மேலும் 399 ரூபாய் பிளான்களில் வரக்கூடிய அனைத்து பலன்களும் இந்த பிளானிலும் உள்ளது, அதில் JioTV, JioCinema, JioCloud மற்றும் அன்லிமிடெட் 5G டேட்டா போன்றவையும் அடங்கும்.
இந்த பிளான்கள் பிற பிளான்களுடன் ஒப்பிடுகையில் சற்று விலை அதிகமானதாக இருக்கலாம், ஆனால் கூடுதல் டேட்டாவிற்காக ஏங்கக்கூடிய யூசர்களுக்கு இந்த பிளான் ஒரு நல்ல தேர்வாக இருக்கும். மேலும் ஏற்கனவே நீங்கள் 5G வாழ்க்கையை வாழ்ந்து வருகிறீர்கள் என்றால் உங்களுக்கு அன்லிமிடெட் 5G டேட்டாவும் வழங்கப்படுகிறது.
அதிக டேட்டாவிற்கு ஆசைப்படுபவராக இருந்தாலும் சரி அல்லது ஒரு நல்ல டீலை எதிர்பார்த்து காத்திருக்கக்கூடிய நபராக இருந்தாலும் சரி ஜியோவின் இந்த கூடுதல் டேட்டா ஆஃபர் நிச்சயமாக நீங்கள் முயற்சி செய்து பார்க்க வேண்டியது. சிறந்த பிளான் என்பது தனிநபரின் தேவைகள் மற்றும் பட்ஜெட்டின் அடிப்படையில் அமையும்.