நடிகை ராகுல் ப்ரீத் சிங் செய்யும் குளுட் பிரிட்ஜ் பயிற்சி பற்றி தெரியுமா..?
குளுட்என்றால் நம் இடுப்புக்கு கீழே பின்பக்கத்தில் மொத்தமாக உள்ள தசைப்பகுதியை குறிப்பதாகும். இந்தப் பகுதியை வலுப்படுத்தும் வகையில் செய்யப்படுகின்ற பயிற்சிக்கு பெயர் க்ளூட் பிரிட்ஜ் பயிற்சி ஆகும். நடிகை ராகுல் ப்ரீத் சிங், அண்மையில் 55 கிலோ குளுட் பிரிட்ஜ் பயிற்சியை செய்து, அதுகுறித்த படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டார். இதைத் தொடர்ந்து, அந்தப் பயிற்சி தொடர்பாக உடற்பயிற்சி நிபுணர்கள் பலரும் விளக்கம் அளித்து வருகின்றனர்.
முன்னதாக, இன்ஸ்டாகிராமில் ராகுல் ப்ரீதி சிங் வெளியிட்ட பதிவில், “உடல் எடையை அதிகரிப்பது மிக எளிமையாகவும், குறைப்பது மிகக் கடுமையானதாகவும் இருப்பது குறித்து நான் ஆச்சரியம் அடைகிறேன். விடுமுறைக் காலத்தில் அதிகரித்த கலோரிகளை குறைக்க முயற்சி செய்து வருகிறேன். ஒரு நாளைக்கு ஒருமுறை இதைச் செய்கிறேன். என் உடலின் சமநிலை மற்றும் இணக்கத்தை மெதுவாகவும், உறுதியாகவும் மீட்டுக் கொண்டு வருகிறேன்’’ என்று குறிப்பிட்டிருந்தார்.
55 குளுட் பயிற்சியின் முக்கியத்துவம் :
ஒட்டுமொத்தமாக நம் உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பது, பின்பக்க தசைகளை வலுப்படுத்துவது, ஒட்டுமொத்த உடலுக்கு வலுவூட்டுவது போன்ற அம்சங்களை மையமாக வைத்து இத்தகைய பயிற்சி மேற்கொள்ளப்படுகின்றது.
நாம் சாதாரணமாக கால்களை நீட்டியபடி தரையில் மல்லாந்து படுத்திருக்கும் நிலையில், தலை மற்றும் கழுத்துப் பகுதியை தரையில் அழுத்தியபடி, கைகள் இரண்டையும் ஒரே நேர்கோட்டில் நீட்டியபடி முழங்கால்களை மடித்து பாதங்களை தரையில் ஊன்றி, முதுகு மற்றும் இடுப்பு ஆகிய பகுதியை மேல்நோக்கியும், கீழ்நோக்கியும் அசைக்கும் வகையில் செய்கின்ற பயிற்சிக்கு பெயர் குளுட் பிரிட்ஜ் பயிற்சி ஆகும்.
அதுவே, தலை மற்றும் கழுத்து பகுதியை சற்று உயரமான சீட்டின் மீது வைத்தபடி, முழங்கால்களை மடித்து மேலும், கீழுமாக உடலை நகர்த்தும்போது இடுப்புப் பகுதியில் குறிப்பிட்ட எடையை வைத்துக் கொண்டு மேலும், கீழும் அசைத்தாவறு பயிற்சி செய்யலாம்.
இவ்வாறு 55 கிலோ எடையை தூக்கி வைத்துக் கொண்டு ராகுல் ப்ரீத் பயிற்சி செய்த படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து உடற்பயிற்சி நிபுணர் கரீமா கோயல் கூறுகையில், “நம் பின்பக்க தசைகளுக்கு புத்துணர்ச்சி கொடுக்கவும், அவற்றை வலுவானதாக மாற்றவும் இந்தப் பயிற்சி மிகவும் உதவியாக இருக்கும். இடுப்பு பலமடையும் மற்றும் ஒட்டுமொத்தமாக கீழ்பகுதி உடலின் செயல்பாடு மேம்படும்.
இது மட்டுமல்லாமல் பின்பக்க தசைகள் வலுவடைவதால் நாம் அமரும் பொசிஷன் சிறப்பாக அமையும் மற்றும் அத்லெட்டிக் செயல்பாடு அதிகரிக்கும். அதேபோல பயிற்சிகளின்போது காயம் ஏற்படுவது தவிர்க்கப்படும்.
நாம் நடப்பதற்கு, ஓட்டப்பயிற்சி செய்வதற்கு, குதிப்பதற்கு என பல பயிற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பது பின்பக்க தசைகள் ஆகும். ஆக, 55 கிலோ எடையுடன் குளுட் பயிற்சி செய்தால் நமக்கு வலு கிடைப்பதோடு தினசரி செயல்பாடு மற்றும் போட்டித் திறன் மேம்படும்.
இந்தப் பயிற்சிக்கு எத்தனை கிலோ எடையை பயன்படுத்துவது என்பது தனிநபர் திறன் மற்றும் விருப்பத்திற்கு உட்பட்டது. எனினும் 55 கிலோ பயன்படுத்துவது சவாலான விஷயம் தான். அது மிக வலுவான பலன்களை தரும்’’ என்று தெரிவித்தார்.