உடனடியாக அப்ரூவ் செய்யப்படும் இந்த பர்சனல் லோன் பற்றி உங்களுக்கு தெரியுமா?

ஒரு காலத்தில் லோன் வாங்க வேண்டும் என்றால் பல்வேறு விதமான டாக்குமெண்ட்களை கையில் சுமந்து கொண்டு, நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியம் இருந்து வந்தது. ஆனால் தற்போது தொழில்நுட்பத்தின் உதவியுடன் டாக்குமெண்ட்களின் தேவை பல மடங்கு குறைந்துள்ளது.

அதே நேரத்தில் எல்லாம் ஆன்லைனில் கிடைத்து விடுவதால் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய கட்டாயமும் இல்லை. எந்த ஒரு டாக்குமெண்ட்டும் இல்லாமல் பர்சனல் லோன் அறிமுகமானது கடன் பெறுபவர்களுக்கு பெரிய நிவாரணத்தை அளித்துள்ளது. டிஜிட்டல் லெண்டிங் பிளாட்ஃபார்ம்கள் மூலமாக குறைந்தபட்ச டாக்குமென்டேஷனுடன் உடனடி அப்ரூவல் வழங்கப்பட்டு, பர்சனல் லோன் பெறுவதை டிஜிட்டைசேஷன் சாத்தியமாக்கி உள்ளது.

விண்ணப்பதாரர்கள் லோன் விண்ணப்பங்களை ஆன்லைன் மூலமாக சமர்ப்பித்து தேவையான டிஜிட்டல் நகல்களை அப்லோட் செய்வதன் மூலமாக எளிதாக லோன்களை பெறலாம். சிரமம் இல்லாத மற்றும் ஆவணங்கள் இல்லாத செயல்முறை மூலமாக உடனடி பர்சனல் லோன் வழங்குதல் தொழில்நுட்பம் முன்னேற்றங்கள் காரணமாக நிகழ்த்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக லோன் விண்ணப்பம் மற்றும் ப்ராசசிங் வழக்கத்தை விட விரைவாக நடைபெறுகிறது.

பேப்பர்லெஸ் பர்சனல் லோன்கள் என்றால் என்ன?

பேப்பர்லெஸ் என்பது எந்த ஒரு டாக்குமென்ட்டும் அவசியமே இல்லை என்பதை குறிக்கவில்லை, மாறாக விண்ணப்பதாரர்கள் பர்சனல் லோன் அப்ளிகேஷன்களை ஆன்லைனில் துவங்கி தேவையான டாக்குமென்ட்களின் டிஜிட்டல் நகல்களை சமர்ப்பித்து நேரடியாக டாக்குமென்ட்களை சமர்ப்பிக்கும் தேவையை நீக்குகிறது.

இந்த வசதி மூலமாக விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் விண்ணப்ப செயல்முறையின்போது ஸ்கேன் செய்யப்பட்ட டாக்குமென்ட்களை எங்கிருந்து வேண்டுமானாலும் அப்லோடு செய்யலாம். பேப்பர்லெஸ் அணுகுமுறை மூலமாக உடனடி லோன் பெறுவதற்கான செயல்முறைக்கு ஒருவர் ஒரு சில முக்கியமான விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.

1) அத்தியாவசிய டாக்குமென்ட்கள் கட்டாயமாக தேவை

இது பேப்பர்லெஸ் செயல்முறை என்றாலும் கூட, லோன் விண்ணப்பத்தை ஆதரிப்பதற்கு அடிப்படையாக சில டாக்குமென்ட்களை நீங்கள் நிச்சயமாக சமர்ப்பிக்க வேண்டும். அதில் பேங்க் ஸ்டேட்மெண்ட், சேலரி ஸ்லிப் மற்றும் பிற தேவையான டாக்குமென்ட்கள் அடங்கும்.

2) மாற்று ப்ரூஃப்கள்

யுட்டிலிட்டி பில்கள் மற்றும் ஆதார் அட்டை போன்ற கூடுதல் டாக்குமென்ட்கள் மூலமாக உங்களது லோன் அப்ளிகேஷன் செயல் முறையை இன்னும் சுமூகமானதாக மாற்றலாம்.

3) டிஜிட்டல் டாக்குமென்டிற்கான தேவைகள்

வருமான சான்றிதழ், PAN கார்டு மற்றும் ஆதார் கார்டு போன்ற சில டிஜிட்டல் டாக்குமென்ட்களை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும். நீங்கள் எந்தவிதமான காகித நகல்களையும் சமர்ப்பிக்க வேண்டியதில்லை என்பதால் இது மிகவும் சௌகரியமான ஒரு செயல்முறையாக அமைகிறது.

4) நல்ல கிரெடிட் ஸ்கோர்

ஒரு தனி நபரின் கடந்த கால பொருளாதார செயல்பாடுகளை வெளிப்படுத்தக்கூடிய கிரெடிட் ஸ்கோர் லோன் விண்ணப்பங்களை அங்கீகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *