மஹிந்திரா தயாரித்து இந்தியா ராணுவத்தில் பயன்படுத்தும் இந்த ரகசிய கார் பற்றி தெரியுமா?
குடியரசு தின விழா அணிவகுப்பில் இந்தியாவில் நடந்த பல்வேறு சாதனைகள் குறித்த அறிவிப்புகள் நடந்தன. இதில் இந்திய ராணுவத்தின் அணி வகுப்புகளும் இடம் பெற்றன. இந்திய ராணுவத்தில் பயன்படுத்தும் வாகனங்கள் ஆயுதங்கள் உள்ளிட்ட பல்வேறு விதமான பொருட்கள் அணிவகுப்பில் பங்கேற்றன. இப்படியாக கவனிக்கத்தக்க வகையில் ஒரு வாகனம் ஒன்று இந்த அணிவகுப்பில் பங்கேற்றது. இது குறித்த விரிவான விவரங்களை தான் காணப்போகிறோம்.
ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழா அணிவகுப்பில் ஒவ்வொரு மாநிலங்களில் இருந்தும் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பாக எடுத்துச் செல்லப்படும் அதை தொடர்ந்து ராணுவ வாகனங்களும் அடிவகுப்பில் ஈடுபடும் இப்படியாக நேற்று நடந்த குடியரசு தின விழா அணிவகுப்பிலும் ராணுவ வாகனங்கள் எல்லாம் இடம்பெற்றன. இதில் முக்கியமாக மஹிந்திரா நிறுவனம் தயாரித்த ஆர்மடோ என்ற வாகனம் முதல் முறையாக இந்த அணி வகுப்பில் காட்சிப்படுத்தப்பட்டது.
இந்த வாகனம் ஆயுதம் தாங்கிய விலகுரக சிறப்பு வாகனமாகும். இது இந்திய ராணுவத்திற்கே பிரத்தியேகமாக தயாரிக்கப்படும் வாகனமாக இருக்கிறது. இந்திய ராணுவம் இந்த ரக வாகனத்தை கடந்த 2012-ம் ஆண்டு முதல் பயன்படுத்தி வருகிறது. இதை தற்போது அப்டேட் செய்து மஹிந்திரா நிறுவனம் புதிதாக வாகனத்தை இந்திய ராணுவத்திற்கு விற்பனை செய்துள்ளது. அந்த வாகனம் தான் தற்போது குடியரசு தின விழா அணிவகுப்பில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வாகனத்தின் முக்கிய அம்சமாக இந்த வாகனம் துப்பாக்கி குண்டுகளை தாங்கும் அளவிற்கு பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட வாகனமாக இருக்கிறது. இந்த வாகனத்தை எங்கிருந்து துப்பாக்கி மூலம் தாக்கினாலும் லெவல் 2 பாதுகாப்பு வழங்கும் வகையில் இந்த வாகனம் உருவாக்கப்பட்டுள்ளது. இது ஏஎல்எஸ்வி எனப்படும் ஆயுதம் தாங்கிய இலகு ரக சிறப்பு வாகனம் ஆகும். இது ராணுவத்தில் பல்வேறு விதமான பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்படுகிறது.
திடீரென ராணுவ வீரர்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு அவசரமாக செல்ல வேண்டும் என்றால் இந்த வாகனத்தை பயன்படுத்துவார்கள். இதுபோக சிறப்பு படை, தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல்கள், நாட்டின் எல்லைகளில் பாதுகாப்பு பேட்ரோல் பணியில் ஈடுபடுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக இந்த வாகனங்கள் பயன்படுத்தப்படுகிறது.
இது மட்டுமல்லாமல் இது மல்டி ஃபியூயல் வாகனமாகவும் இருக்கிறது. இந்த வாகனம் அதிகபட்சமாக 215 எச்பி பவரையும் 500 என்எம் டார்க் திறனையும் கொண்ட வாகனமாக இருக்கிறது. இது 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் மூலம் நான்கு வீல்களுக்கும் பவரை செலுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த வாகனம் அனைத்து விதமான நிலப்பரப்பிலும் பயணிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இது வாகனம் அதிகபட்சமாக மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டதாக இருக்கிறது. இந்த 120 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும்போது இந்த வாகனத்தில் உள்ளே சுமார் 1000 கிலோ வரை எடையை ஏற்றிச் செல்ல முடியும். அது மட்டுமல்ல இந்த வாகனத்தின் டயர் பஞ்சரானாலும் இது 50 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டதாக இருக்கிறது. இதற்கு 318/80 R17 டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த வாகனம் மிக மோசமான பருவநிலையிலும் சிறப்பாக செயல்படுவதற்காக இதில் தானாகவே கிளீன் செய்யும் சிஸ்டம் ஆகியன வழங்கப்பட்டுள்ளன. இந்த வாகனம் முதல் முதலாக நேற்று நடந்த குடியரசு தின விழா அணிவகுப்பில் தான் காட்சிப்படுத்தப்பட்டது. இது எல்எஸ்வி மற்றும் விஎம்ஐஎம்எஸ் என இரண்டு விதமான அவதாரங்களில் காட்சிப்படுத்தப்பட்டது. இந்த இரண்டும் வேறு வேறு அம்சங்கள் கொண்ட வாகனங்களாக உள்ளன.
மஹிந்திரா நிறுவனம் தான் இந்த வாகனத்தை தயாரித்து இந்திய ராணுவத்திற்கு வழங்கியுள்ளது. நிச்சயம் இது இந்திய ராணுவத்திற்கு மிகவும் பலனுள்ளதாக இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்திய ராணுவத்தினருக்கு இந்த வாகனத்தின் தேவை அதிகமாக இருப்பதால் நிச்சயம் அவர்கள் இதை பயன்படுத்தி நம் நாட்டை பாதுகாப்பார்கள் என்பதில் எந்த விதமான அச்சமும் தேவையில்லை.