சலார் படத்தில் நடிக்க நடிகர்கள் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் சலார் திரைப்படம் நாளை உலகமெங்கும் வெளியாகவுள்ளது.
கேஜிஎஃப் 2 படத்துக்குப் பிறகு பிரசாந்த் நீல் இயக்கியுள்ள படம் சலார். ஹோம்பாளே பிலிம்ஸ் சார்பில் விஜய் கிரகந்தூர் பெரும் பொருட்செலவில் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.
இதில் ஸ்ருதிஹாசன், பிரித்விராஜ், ஜெகபதி பாபு உட்பட பலர் நடித்துள்ளனர். சுமார் ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாள மொழிகளில் வெளியாகிறது.
இப்படம் கேஜிஎஃப் யுனிவர்ஸின் ஓர் அங்கமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இப்படத்தின் டீசர் கடந்த ஜூலை 6-ஆம் தேதி வெளியாகி வரவேற்பை பெற்றது. பட ரிலீஸுக்கு ஒரு நாளே உள்ள நிலையில், படத்தில் நடித்த நடிகர்களின் சம்பளம் எவ்வளவு என்பது குறித்து பார்க்கலாம்.
பிரபாஸ் சம்பளம்: பிரபாஸ் தற்போது இந்திய சினிமாவின் மிகப்பெரிய நடிகர்களில் ஒருவர் என்பதில் சந்தேகமில்லை. எனவே அவர் சலாரிலேயே அதிக சம்பளம் வாங்கும் நபர் என்று குறிப்பிடப்பட்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை. பாகுபலி நடிகர் பிரபாஸின் அதிரடி பொழுதுபோக்குக்காக 100 கோடி வசூலித்ததாக பைனான்சியல் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது. ஆனால் அவரது ஊதியம் அங்கு முடிவாகவில்லை. படத்தின் லாபத்தில் 10% பிரபாஸ் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரசாந்த் நீல் சம்பளம்: பிரசாந்த் நீல் தற்போது நாடு முழுவதும் அதிகம் தேவைப்படும் திரைப்பட இயக்குனர்களில் ஒருவர். சலார் படத்தை எழுதி இயக்கியதற்காக பிரசாந்த் நீல் 50 கோடி ரூபாய் பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரித்விராஜ் சம்பளம்: பிரபாஸின் கேரக்டருக்கு நிகராக பிருத்விராஜ் சுகுமாரன் நடிக்கிறதால் 4 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றதாக கூறப்படுகிற்றது. பிரபாஸின் கேரக்டர் தேவாவின் சிறந்த நண்பரான வரதராஜா மன்னாராக ப்ரோ டாடி நடிகர் நடித்துள்ளார்.
ஸ்ருதிஹாசன் சம்பளம்: சலார் படத்தில் கதாநாயகியாக நடிக்கும் ஸ்ருதிஹாசன் 8 கோடி சம்பளம் பெற்றதாக தெரிகிறது.
ஜெகபதி பாபு சம்பளம்: தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் வில்லன் கதாபாத்திரத்தில் அசத்தி வரும் ஜெகபதி பாபு சலார் படத்திற்காக 4 கோடி ரூபாய் சம்பளம் பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.