30ஆவது திருமண நாளில் பிரித்தானிய தம்பதியருக்கு அடித்த ஜாக்பாட்… பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?

தங்களது 30ஆவது திருமண நாளைக் கொண்டாடிக்கொண்டிருந்த ஒரு பிரித்தானிய தம்பதியருக்கு ஜாக்பாட் அடித்துள்ளது.
சுற்றுலா சென்றிருந்த தம்பதியருக்கு வந்த மின்னஞ்சல்
இங்கிலாந்திலுள்ள லங்காஷையரைச் சேர்ந்த ரிச்சர்டு (Richard, 54), டெபி (Debbie Nuttall, 54) தம்பதியர், தங்கள் 30ஆவது திருமண நாளைக் கொண்டாடுவதற்காக Fuerteventura என்னும் ஸ்பெயின் தீவுக்குச் சென்றுள்ளார்கள்.
அப்போது, ரிச்சர்டுக்கு ஒரு மின்னஞ்சல் வந்துள்ளது. அந்த மின்னஞ்சலில் தம்பதியரின் வாழ்வையே மாற்றும் ஒரு செய்தி வந்துள்ளது.
ஆம், தம்பதியர் வாங்கிய லொட்டரிச்சீட்டுக்கு 61 மில்லியன் பவுண்டுகள் பரிசு விழுந்துள்ளது!
அதிர்ஷ்டசாலிகள்
விடயம் என்னவென்றால், 80 முதல் 100 மில்லியன்பேர் லொட்டரிச்சீட்டு வாங்கியதில், ரிச்சர்டு டெபி தம்பதியருக்கு இந்த பரிசு விழுந்துள்ளதானால், நிச்சயம் அவர்களை அதிர்ஷ்டசாலிகள் என்றுதான் கூறவேண்டும்.
சமீபத்தில், சொந்தமாக ஒரு சிறிய வீடாவது வாங்கவேண்டும் என முடிவு செய்து வீடு தேடிக்கொண்டிருந்தார்களாம் தம்பதியர். இப்போது சிறிய வீடென்ன, பிரம்மாண்டமான பங்களாவே வாங்கலாம். ஆக, இப்போது சுற்றில் நிறைய புல்வெளி இருக்கும் பெரிய வீடொன்றை வாங்க இருப்பதாக தெரிவிக்கும் ரிச்சர்டு, டெபி தன் செல்லப்பிராணியை அழைத்துக்கொண்டு ஜாலியாக வாக்கிங் போகலாம் என்கிறார்.
இன்னொரு விடயம் என்னவென்றால், இப்போதே தம்பதியர் பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்கு உதவிக்கொண்டிருக்கிறார்கள். அது இன்னும் தொடரும் என்கிறார் ரிச்சர்ட்.