பனிமூட்டம் நிலவும் சூழலில் பாதுகாப்பாக வாகனம் ஓட்டுவது எப்படி தெரியுமா? முக்கிய டிப்ஸ்!
நாட்டின் பல பகுதிகளில் பனிமூட்டம் மற்றும் பனிப்பொழிவு அதிகம் காணப்படுகிறது. குறிப்பாக நாட்டின் வட மாநிலங்களில் எதிரில் வரும் வாகனங்கள் கூட தெரியாத அளவிற்கு இரவு முதல் காலை வரை கடும் பனிப்பொழிவு இருக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
குறிப்பாக டெல்லி, ஹரியானா மற்றும் பஞ்சாப் முதல் ஹிமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் மலையடிவாரங்கள் என வட இந்தியாவின் பல பகுதிகளை அடர்ந்த மூடுபனி சூழ்ந்துள்ளது. நாட்டின் வட மாநிலங்களில் நீங்கள் வசித்தாலும் சரி அல்லது நீங்கள் வசிக்கும் பகுதியில் காலை நேரங்களில் அதிக பனிமூட்டம் இருந்தாலும் சரி, இந்த சூழலில் வாகனங்களை இயக்குவது என்பது சில நேரங்களில் மிகவும் ஆபத்தானதாக இருக்க கூடும். ஒருவேளை நீங்கள் பனிமூட்டம் நிலவும் சூழலில் கார் உள்ளிட்ட வாகனங்களை இயக்க நேரிட்டால் பாதுகாப்பாக வாகனம் ஓட்டுவதற்கான சில முக்கிய டிப்ஸ்களை இங்கே பார்க்கலாம்.
அடர்ந்த பனிமூட்டம் நிலவும் சூழலில் பாதுகாப்பாக வாகனம் ஓட்டுவதற்கான ஐந்து முக்கிய டிப்ஸ்கள் இங்கே:
ஒதுக்கப்பட்ட லேன்களில் சரியாக இயக்குங்கள் :
பனிமூட்டமாக இல்லாவிட்டாலும் கூட நகர எல்லை உட்பட அனைத்து இடங்களிலும் எப்போதுமே எல்லா வாகன ஓட்டிகளும் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான ஒன்று லேன் டிஸிப்ளின். சாலையை சரியாக பார்க்க முடியாத அளவிற்கும், எதிரில் வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கும் பனிமூட்டம் இருந்தால் கூட சிலர் வாகனங்களை முந்தி செல்ல தாங்கள் செல்லும் லேனில் இருந்து வேறு லேனுக்கு சட்டென்று மாறுவது செய்ய கூடாத ஒன்று, பலரும் இந்த தவறை செய்கிறார்கள்.