தளபதி 68 படத்தின் பெயர் Boss (or) Puzzle எதுனு தெரியுமா? – தயாரிப்பாளர் விளக்கம்!

லியோ திரைப்படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கம் புதிய திரைப்படத்தில் விஜய் நடிக்கிறார். இதற்கான படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் படத்தின் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் நேற்று வெளியிட்டது.

இந்த நிலையில் விஜய் 68 திரைப்படம் டைம் டிராவல் கதையை மயமாகக் கொண்டு எடுப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் தகவல் வெளியாகி உள்ளது. அதற்காகத்தான் விஜய் இரண்டு தோற்றங்களில் நடிக்க இருக்கிறார். அதில் டைம் டிராவல் மூலம் காலம் கடந்து செல்லும்போது இளமையான விஜய் தோன்றுவதற்காக அதிநவீன ஏ.ஐ தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

இதற்காக அமெரிக்கா சென்று ஸ்கேனிங் ப்ராசஸில் விஜய் ஈடுபட்டு சென்னை திரும்பினார். அதற்குப் பிறகுதான் அந்த படப்பிடிப்பு தொடங்கியது. மேலும் இளமையாக தோன்றும் விஜய் பாடலை முதலில் படமாக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் அந்த படத்தில் நடிகர் விஜய் உடன் மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், பிரபுதேவா, ஜெயராம், மோகன் யோகி பாபு, பிரேம்ஜி, சினேகா உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். அதேபோல் வெங்கட் பிரபுவின் நண்பர்களான வைபவ், அரவிந்த் உள்ளிடவர்களும் நடிக்கின்றனர். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பட குழு பூஜை வீடியோவுடன் வெளியிட்டது.

இந்த திரைப்படத்தில் பிரசாந்திற்கு ஜோடியாக லைலா நடிக்கிறார். வெங்கட் பிரபு ஏற்கனவே சிம்புவை வைத்து டைம் லூப் முறையில் மாநாடு திரைப்படத்தை எடுத்திருந்தார். அந்த திரைப்படம் பெரும் வெற்றியடைந்தது இந்த நிலையில் டைம் ட்ராவலை மையமாக வைத்து தற்போது படத்தை இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே விஜயின் 68 வது படத்திற்கு Boss (or) Puzzle என டைட்டில் வைத்திருப்பதாக செய்திகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி ட்வீட் ஒன்றை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார். அந்த பதிவில், “எல்லா அப்டேட்டுகளையும் பார்த்தேன். உங்கள் அன்புக்கு நன்றி. வெங்கட் பிரபு ஸ்பெஷலான ஒன்றை தயார் செய்திருக்கிறார்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருங்கள். ஆனால் தளபதி 68 படத்தின் டைட்டில் Boss (or) Puzzle கிடையாது” என்றுப் பதிவிட்டிருக்கிறார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *