முகேஷ் அம்பானியை திருமணம் செய்ய நீதா அம்பானி வைத்த ஒற்றை நிபந்தனை தெரியுமா?

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியை(Mukesh Ambani) திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு நீதா அம்பானி நிபந்தனை ஒன்றை விதித்துள்ளார் உங்களுக்கு தெரியுமா?

பள்ளி ஆசிரியராக நீதா அம்பானி
மிகவும் பிரபலமான மற்றும் அம்பானி குடும்பத்தின் முக்கிய அங்கமாக மாறியுள்ள குஜராத்தி பெண்ணான நீதா அம்பானி(Nita Ambani), தனது திருமணத்துக்கு முன்பு பள்ளி ஆசிரியராக பணியாற்றியுள்ளார்.

Narsee Monjee College கல்லூரியில் வணிகவியல் மற்றும் பொருளாதார துறையில் பட்டம் பெற்றிருந்த நீதா அம்பானி, தனது ஆசிரியர் பணியை தொடங்கினார்.

இந்தியாவின் அதிகப்படியான பள்ளிகள் திறப்பில் நீதா அம்பானியின் பங்கு முக்கியமானதாக உள்ளது. கடந்த நவம்பர் 2023ல் மும்பையில் Nita Mukesh Ambani Junior School (NMAJS) திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் மாணவர்களுக்கு சிறந்த கல்வியை வழங்கும் நோக்கில் ஜாம்நகர், சூரத், வதோதரா, ஆகிய பல இடங்களில் 14 Reliance Foundation Schools நீதா அம்பானி திறந்துள்ளார்.

நீதா அம்பானியின் திருமணத்துக்கு முந்தைய மாத சம்பளம்
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானி கலந்து கொண்ட தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில், விரைவில் திருமணம் நடைபெற இருக்கும் நிலையில் Sunflower Nursery School-லில் ஆசிரியராக பணியாற்றியதாவும், அங்கு தன்னுடைய மாதம் சம்பளம் ரூ.800 என்றும் நீதா அம்பானி தெரிவித்துள்ளார்.

திருமணத்திற்கு முன் நிபந்தனை
இந்த நேர்காணலில் மிக முக்கிய அம்சமாக நீதா அம்பானி திருமணத்திற்கு முன் முகேஷ் அம்பானியிடம் முன்வைத்த அந்த ஒற்றை நிபந்தனை குறித்து பகிர்ந்துள்ளனர்.

அதில், நீதா அம்பானி முகேஷ் அம்பானியிடம் “தனது விருப்பமான ஆசிரியர்(teacher) பணியை திருமணத்திற்கு பிறகும் தொடர அனுமதிக்க வேண்டும்” என்ற ஒற்றை நிபந்தனையை முன்வைத்து தான் திருமணத்திற்கு சம்மதித்தேன் என தெரிவித்துள்ளார்.

நீதா அம்பானி திருமணத்திற்கு(Marriage) பிறகும் பல ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *