கால்பந்து வீரர் மெஸ்ஸி தெரியுமா? ஹமாஸ் வீரர்களிடம் புத்திசாலிதனமாக தப்பிய 90 வயது மூதாட்டி!
கடத்த வந்த ஹமாஸ் வீரர்களிடம் பிரபல கால்பந்து வீரர் மெஸ்ஸியின் பெயரை சொல்லி இஸ்ரேலில் வசிக்கும் 90 வயது மூதாட்டி தப்பிய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இஸ்ரேல்-ஹமாஸ் போர்
இஸ்ரேல்-பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினர் இடையிலான போர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கி இன்று வரை நடந்து வருகிறது.
இசை நிகழ்ச்சியை குறிவைத்து பாலஸ்தீனத்தின் ஹமாஸ் படையினர் முன்னெடுத்த இந்த தாக்குதலில், நூற்றுக்கணக்கான இஸ்ரேலியர்கள் மற்றும் வெளிநாட்டினரை பிணைக் கைதிகளாக ஹமாஸ் வீரர்கள் பிடித்து சென்றனர்.
தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கவும், பிணைக் கைதிகளை மீட்கவும் இஸ்ரேலிய ராணுவம் காசாவிற்கு புகுந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
மெஸ்ஸி பெயரை சொல்லி தப்பிய மூதாட்டி
இந்நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் 2ம் திகதி இஸ்ரேலியர்களை பிணைக் கைதிகளாக பிடித்து செல்லும் முயற்சியில் ஹமாஸ் வீரர்கள் ஈடுபட்டு இருந்த போது, 90 வயது மூதாட்டி ஒருவரின் வீட்டிற்குள் சென்றுள்ளனர்.
அப்போது அந்த 90 வயது மூதாட்டி, ஹமாஸ் வீரர்களை பார்த்து “நான் அர்ஜென்டினாவை சேர்ந்தவர் என தெரிவித்துள்ளார். அதற்கு “அர்ஜெண்டினா என்றால் என்ன?” என ஹமாஸ் வீரர்களில் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மூதாட்டி உடனடியாக “நீங்கள் கால்பந்து பார்ப்பீர்களா? அதில் வரும் கால்பந்து வீரர் மெஸ்ஸியின்(lionel-messi) ஊர் தான் என்னுடைய ஊரும் என மூதாட்டி கூறியுள்ளார்.
இதையடுத்து அங்கிருந்த ஹமாஸ் வீரர் ஒருவர் தன்னிடம் இருந்த துப்பாக்கியை அவரிடம் கொடுத்துவிட்டு செல்ஃபி ஒன்றையும் எடுத்து விட்டு சென்றுள்ளனர்.
இந்த செய்தி தற்போது இணையத்தில் வெளியாகி வேகமாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.