இன்ஸ்டன்ட் காஃபி உருவான கதை தெரியுமா உங்களுக்கு..?! கேட்டா ஷாக் ஆகிடுவீங்க..!!

1929 ஆம் ஆண்டு உலகின் மிகப் பெரும் பொருளாதார மந்தநிலையை சந்தித்தது. அமெரிக்க பங்குச்சந்தை அதன் பாதி மதிப்பை இழந்தது.

சுமார் 64 பில்லியனில் இருந்து 30 பில்லியனாக பங்குகளின் மதிப்பு குறைந்தது. இதே நேரத்தில் பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்தது.இதன் விளைவாக மக்கள் தங்களது ஆடம்பரச் செலவுகளை பிரீமியம் காபி உள்பட தவிர்த்து வந்தனர்.

உலகின் மிகப் பெரிய காபி ஏற்றுமதியாளரான பிரேசில் நாடு அபரிமிதமான தேக்கத்தை சந்தித்தது.இதனால் விளைச்சலை விற்க முடியாமல் காபி பயிர்களை அந்நாட்டு விவசாயிகள் எரித்தனர். இருப்பினும் இதை சரி செய்வதற்கான நிரந்தரத் தீர்வு பற்றி பிரேசில் ஆய்வு செய்தது.

இதைத் தொடர்ந்து நெஸ்லே நிறுவனத்தை பிரேசில் அரசு அணுகி தங்களது காபியை அதிக காலம் சேமித்து வைக்கும் வழியைக் கண்டறியுமாறு கேட்டுக் கொண்டது.எட்டு ஆண்டுகள் பல்வேறு முயற்சிகள் தோல்வியடைந்தபோதும் நெஸ்லே இறுதியில், முதல் இன்ஸ்டன்ட் பவுடர் காபியை கண்டுபிடித்தது.

இதனால் காபியின் இயற்கை மணம் மாறாமல் பாதுகாக்கப்பட்டது. இப்படித்தான் நெஸ்லே இன்ஸ்டன்ட் காபி உருவானது.அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் நெஸ்லே 30க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இன்ஸ்டன்ட் காபியை ஏற்றுமதி செய்து அதன் உலகளாவிய வர்த்தகத்தை உருவாக்கியது. இந்த இன்ஸ்டன்ட் காஃபி தங்களது விலைக்குக் கட்டுபடியாகும் வகையில்.

இருப்பதை மக்கள் உணர்ந்ததால் பொருளாதார நெருக்கடியிலும் அதை வாங்கி பயன்படுத்தினார். இதனால் நெஸ்லே இன்ஸ்டன்ட் காபி மிகப் பெரிய வெற்றியை அடைந்தது.2023 ஆம் ஆண்டில் உலக இன்ஸ்ட்ன்ட் காபி சந்தை 14.3 பில்லியன் டாலர் அளவுக்கு உயர்ந்தது. இப்போது ஒவ்வொரு நொடியும் 5500 கப் நெஸ்லே.

இன்ஸ்டன்ட் காபி உலகளவில் பயன்படுத்தப்படுகிறது. காபி என்பது டீக்கு அடுத்தபடியாக மக்களது அன்றாட வாழ்க்கையில் நிறைந்துள்ளது. காபிக்கு அடிமையானவர்கள் என்று பார்த்தால் உலகளவில் கோடிக்கணக்கானவர்கள் உள்ளனர்.இந்தியா டீ ராஜ்ஜியம்.

என்றாலும் காபி ரசிகர்கள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். நெஸ்கஃபே, லெவிஸ்டா, ரேஜ் காபி, ப்ரூ, ஹில் புளூ, டேவிட்ஆஃப், டாடா காபி, செவன் பீன்ஸ் காபி, புளூ டோக்காய், ஸ்டார்பக்ஸ், கான்டினென்டல் காபி, கன்ட்ரி பீன் என பல காபி பிராண்டுகள் இருந்தாலும் நெஸ்லே.

இன்ஸ்டன்ட் காபிக்கு உள்ள வரவேற்பு மற்ற பிராண்டுகளுக்கு இல்லை என்றே சொல்லலாம்.எனவே அடுத்த முறை நீங்கள் நெஸ்லே இன்ஸ்டன்ட் காபியை சுவைக்கும்போது அந்த காபி கடந்து வந்த சிறப்பான பயணத்தைப் பார்த்து மகிழ்ச்சி அடையுங்கள்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *