இது தெரியுமா ? தினமும் 10 கருவேப்பிலை இலைகளை காலையில் மட்டும் 3 மாதங்களுக்கு சாப்பிட்டு வந்தால்
சமையலில் கறிவேப்பிலையை பயன்படுத்தினால் உணவு ருசிமிகுந்தாகவும், வாசனை மிகந்ததாகவும் மாறும். கறிவேப்பிலை தென்னிந்தியா மற்றும் இலங்கை உணவு வகைகளில் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றது.
சமையலுக்கு பயன்படும் காய்கறிகளுடன் இந்த கறிவேப்பிலையை சேர்ப்பது மிக பழமையான காலந்தொட்டே நம் நாட்டில் உள்ளது.
இன்று நாம் கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகளையே அதிகம் சாப்பிடுகிறோம். இதனால் இரத்த அழுத்தம், உடல் பருமன், உடல் சோர்வு போன்றவை உருவாகின்றது. இந்த கொழுப்புப் பொருள் பெரும்பாலும் எண்ணெயின் மூலம் அதிகம் உடலில் சேர்கின்றது. ஒரு லிட்டர் எண்ணெயில் 10 கறிவேப்பிலை போட்டு காய்ச்சி வடிகட்டினால் எண்ணெயில் உள்ள கொழுப்புச் சத்துநீங்கும்.
இன்றைய நவீன இரசாயன உணவு வகைகளாலும் பதப்படுத்தப்பட்ட உணவுகளாலும் உடலுக்குத் தேவையான சத்துக்களைக் கொடுக்க முடியவில்லை. இதனால் இளவயதிலேயே தலைமுடி நரைக்க ஆரம்பித்து முதுமையை வெகுவிரைவில் கொண்டு வந்து விடுகின்றது. இவர்கள் தினமும் உணவில் சேர்க்கும் கறிவேப்பிலையை ஒதுக்காமல் சாப்பிட வேண்டும்.
கருவேப்பிலை இளநரையைத் தடுக்கும் ஒரு அற்புதமான மருந்தாகும். இதில் மயிர்கால்களை வலுவூட்டும் சத்து இருக்கிறது. மேலும் இந்த கருவேப்பிலையின் சாறு கண்களைப் பாதுகாத்து ஒளி ஊட்டி, கண்புரை நோய் ஏற்படாமல் தடுக்கிறது. கருவேப்பிலை இலையை சமையலில் அதிகமாகச் சேர்ப்பது நம் நாட்டு வழக்கம். குழம்பு, கூட்டு, மிளகுநீர், கறிவகைகள், கருவேப்பிலைப் பொடி, நீர்மோர், துவையல் முதலியவைகளில் கருவேப்பிலை சேர்க்கப்படுகிறது.
இளநரை மாற : கறிவேப்பிலையை தலையில் தேய்க்கும் எண்ணெயில் போட்டு காய்ச்சி ஆறவைத்து பாட்டிலில் அடைத்து தலையில் தேய்த்து வந்தால் இளநரை மாறும்.
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக மயக்கத்துக்கு ஆளாவார்கள். மேலும் கை,கால் வலி கண்பார்வை குறைபாடு உண்டாகும். இவர்கள் அடிக்கடி கறிவேப்பிலையை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.கறிவேப்பிலையை நிழலில் உலர்த்தி காய வைத்து பொடியாக்கி கஷாயம் செய்து காலை மாலை குடித்து வந்தால் உடலில் சர்க்கரையின் அளவை சீராக வைத்திருக்கும்.