இது தெரியுமா ? ரோஜா இதழ்களை ஒரு கைப்பிடி அளவு எடுத்து காலை, மாலை ஆகிய இருவேளை…
ரோஜா இதழ்களைக்கொண்டு சர்பத் தயார் செய்து வைத்துக்கொண்டால் ருசிக்கு ருசியாகவும் இருக்கும் மருந்துக்காகவும் பயன்படும்.
நாள்தோறும் ரோஜா மலர் இதழ்களைக் கொண்டு செய்த சர்பத் அருந்தி வந்தால் முலச்சூடு தணியும். நீர்கட்டு மலக்கட்டு விலகும்.
உடற்சூடு தணிந்து உடல் இதமான குளிர்ச்சியைப் பெறும். ரோஜா மலர் மொட்டை துவையல் செய்து சாப்பிட்டால் சீதபோதி அகலும்.
ரோஜாப்பூ கஷாயத்துடன் காட்டுச்சீரகத்தை சேர்த்து அரைத்து மெல்லிய துணியால் நனைத்து முகரச் செய்தால் மூக்கடைப்பு, ஜலதோஷத்தினால், ஏற்படக்கூடிய பல்வேறு வகைக்கோளாறுகள் அகலும். சிலருக்கு காரணமின்றி அடிக்கடி தும்மல் தோன்றும். இதற்கு மேற்கண்ட முறையில் நல்ல குணம் பெறலாம்.
1. இன்று, சர்க்கரைநோய் என்கிற நீரிழிவு நோயால் அவதிப்படுபவர்கள் ஏராளம். அவர்கள், ஆவாரம்பூ, ரோஜா மொக்கு, யானை நெருஞ்சில் – இவற்றை சம அளவு எடுத்து உலர்த்தி பொடி செய்து கொள்ள வேண்டும். அந்த பொடியை பாலுடன் கலந்து காய்ச்சி, தினமும் இருவேளை குடித்து வந்தால் போதும். சர்க்கரைநோய் குணமாகிவிடும்.
2. வெற்றிலை பாக்கு போட்டுக் கொள்ளும் பழக்கம் உள்ளவர்களின் வாயில் இருந்து ஒருவித துர்நாற்றம் வீசிக்கொண்டிருக்கும். அவர்களிடம் முகம் கொடுத்து பேச முடியாது. இந்த பிரச்சினையில் இருந்து விடுபட, வெற்றிலை பாக்கு போட்டுக்கொள்ளும்போதே, அதனுடன் சிறிது ரோஜா இதழ்களையும் சேர்த்து மென்றுவர அந்த வாய் துர்நாற்றம் நீங்கிவிடும்.
3. ரோஜா இதழ்களை சேகரித்து நிழலில் உலர்த்தி, நீர்விட்டு காய்ச்சி வடிகட்டி உட்கொள்ள கொடுத்துவர கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் நீர்க்கட்டு சரியாகும். வாய்ப்புண்ணும் குணமாகும்.
4. ரோஜா இதழ்களை ஒரு கைப்பிடி அளவு எடுத்து காலை, மாலை ஆகிய இருவேளை அப்படியே உட்கொண்டுவர சீதபேதி இரண்டொரு நாளில் குணமாகிவிடும்.
5. உலர்ந்த ரோஜா மொக்கு, சதக்குப்பை ஆகியவற்றை சமஅளவு எடுத்து இடித்து வைத்துக் கொள்ளவும். 200 மில்லி லிட்டர் தண்ணீரை நன்றாக காய்ச்சி, அதில் மேற்படி தூளைப் போட்டு மூடி வைக்கவும். 3 மணி நேரம் கழித்து வடிகட்டி அதை குடித்துவர, சூட்டினால் ஏற்படும் வயிற்றுவலி, அல்சர் ஆகியவை குணமாகும்.
6. ரோஜா மொக்கு 3 பங்கு, நிலவாகை இலை ஒன்றரை பங்கு, சுக்கு ஒரு பங்கு, கிராம்பு 1/4 பங்கு எடுத்து உலர்த்தி, ஒன்றிரண்டாக சிதைத்து, 4 பங்கு நீர்விட்டு காய்ச்சி ஒரு பங்காக வற்ற வைக்கவும். இதனை இரவில் செய்து வைத்து, அதிகாலையில் வெறும் வயிற்றில் வடிகட்டி குடித்துவர மலச்சிக்கல் நீங்கும். மேலும், மூலநோய், உடல் களைப்பு ஆகியவையும் நிவர்த்தியாகும்.
7. ரோஜா இதழ்கள் தேவையான அளவு எடுத்து, அதனுடன் சமஅளவு பாசிப்பயிறும், பூலாங்கிழங்கு நான்கைந்தும் சேர்த்து மை போல் அரைத்துக் கொள்ளவும். இதனை, குளிப்பதற்கு முன் உடலில் பூசி, சுமார் 1/2 மணி நேரம் ஊற வைத்த பின்னர் இளவெந்நீரில் குளித்துவர சரும நோய்கள் அனைத்து அகன்றுவிடும். இதனை சோப்பிற்கு பதில் தினமும் பயன்படுத்திவர சருமம் பட்டுபோல் மிருதுவாவதுடன் கவர்ச்சிக்கரமான நிறமும் பெறலாம்.