இது தெரியுமா ? டீ போடும் போது அதில் கிராம்பு, மிளகு மற்றும் ஏலக்காய் சேர்த்து

தொண்டை நோயை ஆரம்பத்திலேயே கவனித்து உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் வாதக்காய்ச்சல் ஏற்படலாம். இதனால் தோள்பட்டை, மூட்டு, இதயம் மற்றும் மூளையும் பாதிக்கப்படலாம். மூட்டு வீக்கம் மற்றும் சிறுநீரக வீக் கம் ஆகியவையும் ஏற்படலாம். அதே போல் தொண்டைப்புண் ஏற்பட்டு நீண்ட காலம் கவனிக்காமல் இருந்தால் அது புற்று நோயாக மாறக் கூடிய அபாயம் இருப்பதாக டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.

காரணங்கள்:

குழந்தைகள், சிறுவர் மற்றும் சில முதியவர்கள் கூட வாயை திறந்தபடி தூங்குவார்கள். இதுவும் தொண்டை வலிக்கு ஒரு கார ணமாக உள்ளது. உள்மூக்கில் சளி ஒழுகும். பிள்ளைகளுக்கு இரவில் இருமும் போது தொண்டை வலி உண்டாகலாம். கூல் டிரிங்ஸ் குடிக்கும்போது அல்லது உணவு உண்ணும்போது வலி ஏற்படும்.

இது போன்ற நேரத்தில் உணவு உண்ணவோ அல்லது பானங்கள் குடிக்கவோ முடியாது. வழக்கத்தை விட சிறியஅளவு சாப்பிடுவது, பிள்ளைகளுக்கு காய்ச்சல், இருமல், மூக்கு ஒழுகுதல், மற்றும் தொண்டைக் கரகரப்பு இருக்கலாம். குமட்டல் மற்றும் வயிற்று வலி இருக்கலாம். அவர்களின் தொண்டை வழக்கத்தை விட அதிகமாக சிவந்து இருக்கலாம். இவை யெல்லாம் தொண்டை அழற்சி நோய்க்கான பொதுவான அறிகுறிகளாகும்.

தொண்டைப் புண், கரகரப்பு (தொண்டை கட்டு Sore throat) தொண்டை அழற்சி போன்றவை தொண்டை கரகரப்பை உண் டாக்கும். இவை டான்சிலைடீஸ் வருவதற்கும் காரணமாக அமைகிறது. இவற்றிற்கு பெரும்பாலும் வைரஸ் தாக்குதல் காரண மாகலாம். சில நேரங்களில் இவை பாக்டீரியாக்களால் ஏற்படும். மேலும் சுற்றுப்புற சூழ்நிலை நச்சுகள், ரசாயன பொருட்கள் கார ணங்களால் கூட ஏற்படுகிறது.

வைரஸ் தாக்குதல் ஏற்படும் போது தொண்டையில் வலி ஏற்படலாம். சுரப்பிகளின் வீக்கமும், ஜுரமும் இருக்கும். ஹெர் பஸ் வைரஸ் தாக்கும் வாய்ப்புகள் ஏற்படும். அம்மை நோய்கள் சில நேரங்களில் தொண்டைப்புண்ணுடன் தொடங்கும். தொண்டை பாதிப்பு, தவறான உணவுப்பழக்கத்தால் உண்டாகிறது என ஆயுர்வேதத்தில் கூறப்படுகிறது. கபதோஷ பாதிப்புகள், ‘ஜில்’ என்று குளிர்ந்த உணவுகள், புளிப்புச் சுவை அதிகம் உள்ள உணவுகள் (புளி, அன்னாசி, தயிர், புளிப்பான மோர், அதிக மாக வறுக்கப்பட்ட உணவுகள் இவை தொண்டையை பாதிக்கும். புகையிலை (குட்கா போன்றவை) தொண்டை பாதிப்புக்கு ஒரு முக்கிய காரணம்.

டான்சிலைடீஸ் பெரும்பாலும் சிறுவர்களை தாக்குகிறது. Pharynx எனும் தொண்டைப்பகுதியில் உள்ள டான்சில்களின் அழற்சி, தொற்று டான்சிலைடீஸ் எனப்படும். இந்த டான்சில்கள் தொற்றுகளை ஏற்றுக்கொண்டு, பெரிதாக பரவாமல் காக்கின்றன. பெரிதாக ஜலதோஷம், ஜுரம் ஏற்படும் முன் தொண்டை பாதிப்புகள் (தொண்டை கட்டுதல், வலி) உண்டாவது டான்சில்கள் முதலில் செயல்படுவது தான் காரணம்.

குழந்தைகளுக்கு வரும் தொண்டை வலி பொதுவாக சளி மற்றும் இருமலுடன் இருக்கும். பெரியவர்களுக்கு தொண்டை வலி பொதுவாக பனிக்காலங்களில் ஏற்படும். இதனுடன் சளி, இருமல், தும்மல், குரல் கரகரத்தல், வறட்சி போன்றவையும் ஏற்படும். இது சிறிது நாட்களிலேயே சரியாகி விடும்.

தொண்டைக் கரகரப்பு:

சளிபிடித்தாலோ, கட்டி ஏற்பட்டாலோ வயிற்றில் சுரக்கும் அமிலத்தால் குரல்வளையின் அமைப்பில் மாறுபாடு ஏற்பட்டு, குரலில் மாற்றம் தோன்றுகிறது. இந்தக்குரல் மாற்றத்தை தொண்டைக்கரகரப்பு என்கிறோம். இதனால் பேசுவதற்குச் சிரமமாக இருக்கும். நம்முடைய குரல்வளை சரிவர இயங்காததால் தான் இது ஏற்படுகிறது. இதற்குப் பல காரணங்கள் உண்டு. இவை பொதுவாக சில நாட்களிலேயே சரியாகிவிடும்.

தவிர்க்கும் முறைகள்

நம்முடைய குரலுக்கு ஓய்வு கொடுத்தல், நிறைய நீர்பானங்கள் குடித்தல், ஓய்வு எடுத்தல், வயிற்று அமிலப் பிரச்னை இருந்தால் அதைச்சரி செய்தல், மது மற்றும் புகைபிடித்தலைத் தவிர்த்தல் போன்றவை மூலம் விரைவாக நிவாரணம் அடையலாம். வலி மாத்திரைகள் மருத்துவரின் ஆலோசனை பேரில் உட்கொள்ளலாம்.

சூப்

மணத்தக்காளி கீரையை சூப் ஆக அருந்தி வந்தால் ஜலதோஷம் நிற்பதோடு… சளி, தொண்டை வலி பிரச்னைகள் தீரும். அகத் திக் கீரையை சூப் செய்து குடித்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண் விலகுவதோடு வீரிய மருந்துகள் சாப்பிடுவதால் ஏற்படக் கூடிய பக்க விளைவுகளையும் சரி செய்யும். தக்காளியை பிழிந்து விட்டு, அதனுடன் நான் கைந்து பூண்டுப் பற்களை நசுக்கிப் போட்டு கொதிக்க வைத்து உப்பு சேர்த்து குடித்தால் ஜலதோஷம், இருமல் நிற்கும். குழந்தைகளும் விரும்பி சாப்பிடக்கூடியது இந்த தக்காளி சூப்.

மசாலா டீ

டீ போடும் போது அதில் கிராம்பு, மிளகு மற்றும் ஏலக்காய் போன்றவற்றை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து குடிக்கவேண்டும். இவ்வாறு குடித்தால், தொண்டையில் இருக்கும் புண் சரியாகிவிடும்.

தொண்டை வலி நீங்க

இருமல், தொண்டை வலி இருப்பவர்கள் சிறிதளவு வசும்பையும், மிளகையும் மென்று தின்னலாம். பால் இல்லாத டீயுடன் கொஞ் சம் எலுமிச்சை சாறு விட்டு குடித்தால் தொண்டை வலி நீங்கும். உப்பு நீரால் வாயை கொப்பளிப்பது நல்லது. சூடான நீராகாரங்களை பருகுவதும் நல்ல பலனைத்தரும். நீராவி பிடிப்பது (தொண் டையில் படும்படி) பிடிக்கலாம்.

சிறிது தண்ணீரை மிதமான சூட்டில் வைத்து கொண்டு அதில் சிறிது உப்பு சேர்த்து, தொண்டை பகுதியில் வைத்து, கர கர என்று செய்தல் வேண்டும். கற்பூரவல்லி இலைசாறு எடுத்து கற்கண்டு சேர்த்து காலை, மாலை குடிக்க தொண்டை வலி குறையும். துளசி இலைகள் போடப்பட்ட தண்ணீரை தினமும் குடித்து வந்தால் தொண்டையில் புண் வராது. தண்ணீரைக் காய்ச்சும் போது, ஒரு பிடி சீரகத்தைப் போட்டு கொதிக்க வைத்து, சிறிது நேரம் கழித்து அருந்தலாம்.

இரவு படுக்கும் போது, பாலில் மஞ்சள் தூள், தேன், பொடித்த மிளகு போட்டு அருந்த, தொண்டை வலி நீங்கி, இதமாக இருக்கும். இஞ்சியை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து குடித்தால், தொண்டையில் உள்ள கரகரப்பு சரியாகி விடுவதோடு, தொண்டை புத்துணர்ச்சியுடன் இருக்கும். எலுமிச்சை சாற்றில் வெதுவெதுப்பான தண்ணீர் மற்றும் சிறிது தேன் கலந்து குடித்தால், தொண்டையில் வைரஸால் ஏற்பட்டி ருக்கும் புண் குணமாகிவிடும்.

வரும் முன் தவிர்க்க

வீட்டில் தினசரி குடிக்கும் தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து குடிக்க வேண்டும். கேன் வாட்டா் நீரையும் கொதிக்க வைத்து குடிக்க வேண்டும். வெயிலில் அலைபவராக இருந்தால் வீட்டில் இருந்தே தண்ணீரை தினசரி எடுத்துச் செல்வது நல்லது. இதனால் தொண்டை வலி, கரகரப்பு போன்ற நோய்களில் இருந்து எளிதாக தப்பிக்கலாம்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *