இது தெரியுமா ? சாப்பிட்டு முடித்தபின் 4 புதினா இலைகளை வாயில் போட்டு மென்று தண்ணீர் குடித்தால்…

புதினா அசைவ உணவு மற்றும் கொழுப்பு பொருட்களை எளிதில் செரிமானமாக்குகிறது. இரத்தம் சுத்தமாக்கவும், மலச்சிக்கல் நீங்கவும், வலி நிவாரணியாகவும் பயன்படுகிறது.மேலும் புதினாவுடன் மிளகு சேரும்போது, நம் உடலிலுள்ள சளி மற்றும் இருமலை விரட்டுகிறது. இதற்கு புதினாவுடன் மிளகு சேர்த்து ரசம் வைத்து சாப்பிட வேண்டும்.

முகப்பரு உள்ளவர்களும், வறண்ட சருமம் உள்ளவர்களும் புதினா சூப்பை இரவு படுக்கைக்கும் முன் குடிப்பது நல்லது.

சாப்பிட்டு முடித்தபின் 4 புதினா இலைகளை வாயில் போட்டு மென்று தண்ணீர் குடித்தால் அஜீரணக் கோளாறு உண்டாகாது.

புதினாவை நிழலில் காயவைத்து பொடி செய்து பனங்கற்கண்டு சேர்த்து கஷாயம் செய்து டீக்குப் பதிலாக அருந்தி வந்தால் இரவில் நல்ல உறக்கம் வரும். உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.

காலை நேரத்தில் சிலர் எழுந்திருக்கும்போதே சோர்வாக இருப்பார்கள். அதிலிருந்து மீண்டு காலை நேரத்தையும் அந்த நாளையும் சுறுசுறுப்பாக மாற்றுவதற்கு காலையில் எழுந்ததும் ஒரு புதினா டீ குடித்தால் போதும்.

புதினா மூக்கடைப்பு, தொண்டை வலி மற்றும் நுரையீரல் ச்பந்தப்பட்ட பிரச்சினைகளைச் சரிசெய்கிறது.குறிப்பாக, புதினாவில் உள்ள ஆன்டி – இன்ப்ளமேட்டரி பண்புகள் கொண்டிருப்பதால் இது நாள்பட்ட சளியையும் வெளியேற்றும் தன்மை கொண்டது.

புதினா வயிற்றில் ஜீரண சக்தியை மேம்படுத்தும் என்சைம்களைத் தூண்டுகின்றன. இது நம்முடைய உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை மட்டும்உடல் கிரகித்துக் கொள்ள உதவுவதோடு மெட்டபாலிசத்தையும் அதிகரிக்கச் செய்கிறது. இது உடலின் எடையைக் குறைக்க உதவுகிறது.

புதினா கீரையை சுத்தம் செய்து சிறிதாக நறுக்கி, தண்ணீரில் கொதிக்க வைக்க வேண்டும். அதனுடன் சின்ன வெங்காயம், மிளகு, பூண்டு, சீரகம் கலந்து கொதிக்க வைத்து அதனுடன் சிறிது எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து அருந்தி வந்தால் வாயுத் தொல்லை, வயிற்றுக் கோளாறுகள், சிறுநீரக கல்லலைப்பு, குழந்தைகளின் மலக்குடலில் உள்ள கீரிப்பூச்சிகிள் எல்லாம் விலகும். சாப்பிட்டவுடன் சிறிது சூப் அருந்தி வந்தால் எளிதில் ஜீரணமாகும்.

சில பெண்கள் கரப்பமாயிருக்கும்போது , குமட்டல் மற்றும் வாந்தி இருக்கும். இதில் இருந்து விடுபட புதினாவை துவையல் செய்து சாப்பிட்டாலே போதுமானது.இதனுடன் இஞ்சி ,லெமன் சால்ட் கலந்து குடித்தால் செரிமாணம் நன்றாக இருக்கும்.

பல் மற்றும் வாய் பிரச்சனைகளை குணப்படுத்த புதினா பெரிதும் உதவுகிறது. புதினா எசன்ஸ் சேர்த்து தயாரிக்கப்பட்ட மிட்டாய் மற்றும் சுவிங்கம் கடைகளில் விற்கின்றன. அப்பப்போது ஓய்வாக இருக்கும்போது புதினா சுவிங்கம் அல்லது வெறுமனே ஃபிரஷ்ஷான புதினா இலைகளை வாயில் போட்டு மென்று வந்தாலே பற்களில் சொத்தை வராது. அதுமட்டுமின்றி பல் வலி ஏற்படாது. இருக்கிற பல் வலியும் குறையும்.

வீசிங் பிரச்சனை உள்ளவர்கள் புதினாவை உணவில் சேர்த்துக் கொண்டால் நல்லது ,அதோடு வறட்டு இருமல் ,முகப்பரு போன்ற உடல் உபாதைகளும் புதினா மூலம் காணாமல் போகும் ஆற்றல் கொண்டது இந்த புதினா என்று கூறினால் அது மிகையாகாது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *