இது தெரியுமா ? மண் பானை சமையலில் நமக்கு இன்னுமொரு பயனும் உண்டு..!

ண் பானையில் சமைக்கும் போது சமைக்க பயன்படுத்தும் உணவு பொருள்கள் அனைத்துமே அதன் சத்துகளை இழக்காமல் நமக்கு தருகிறது.

இன்று நாம் சமைக்கும் அலுமினியம், சில்வர் பாத்திரங்களில் இருக்கும் உலோகத்தன்மை உணவின் தன்மையை மாற்றிவிடுகிறது.

எந்த உணவு பொருளை சமைத்தாலும் அதில் இருக்கும் சத்துகள் ஆவியாகிவிடுகிறது என்று சொல் லலாம். குறிப்பாகா காய்கறிகளிலிருக்கும் குளோரொஃபில் ஆனது சமைக்கும் போது ஆவியாகிவி டுவதால் அந்த சத்து நமக்கு கிடைக்காது. ஆனால் மண்ணால் செய்யப்பட்ட பாத்திரங்களில் சமைக் கும் போது அதனுடைய சத்துகள் வீணாகாமல் அப்படியே நமக்கு கிடைக்கிறது. மண் பானை சமை யலில் நமக்கு இன்னுமொரு பயனும் உண்டு. இவை உணவின் ருசியை அப்படியே கொடுக்கும். ருசியை அதிகரித்துகொடுக்ககூடியவை.

மண் பாத்திரங்களில் செய்யப்படும் உணவு அவ்வளவு எளிதில் கெடாது. காரக்குழம்பும், மீன் குழம் புகளும் ஒரு வாரம் வரை மண் பானையில் அதே வாசத்தோடு மணக்கும். இன்று நாம் சமைக் கும் உணவு பொருள்களை சூடான ஹாட் பாக்ஸில் வைத்தாலும் கூட குறிப்பிட்ட நேரத்துக்கு பிறகு அதன் சுவையும் மாறி கெட்டுவிடவும் செய்கிறது. ஆனால் மண் பாத்திரங்களில் உணவு அப்படியே இருக்கும்.

வேறு பாத்திரங்களில் உணவை எடுத்துவைக்கும் போது அடிக்கடி அதை சூடு படுத்தி வைப்போம். இப்படி சமைத்த உணவை ஃப்ரிட்ஜில் வைத்து மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடும் போது அதன் சத்துகள் குறையவே தொடங்கும். ஒரு நாள் உணவாக இருந்தாலும் இவை பொருந்தும். ஆனால் மண் பானையில் சமைத்த உணவை மீண்டும் சூடுபடுத்த தேவையில்லை.

நீண்ட ஆயுளை தருவதில் ஆரோக்கியமான உணவும் முக்கியபங்கு வகிக்கிறது. சத்தான உணவு பொருள்களை சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்துவதற்கேற்ப திட்டமிட்டு எடுத்து கொள்ளும் போது அந்த சத்தை இழக்காமல் எடுத்துகொள்ளவும் இந்த மண் பானையில் சமைப்பது தான் சிறந்தது.

மண்பானையில் சமைக்கும் போது வெப்பமானது அனைத்து இடங்களிலும் ஒரே மாதிரி சீராக இருக்கும். சமமாக ஊடுருவும். மண் பானையில் சமைக்கும் போது உணவுகள் எல்லாமே ஆவியில் வேக வைத்த உணவுகள் போன்ற நன்மையை தரும். இவை உணவில் இருக்கும் நன்மை செய்யும் பாக்டீரியாக்களையும் அதிகரிக்க செய்யும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *