இது தெரியுமா ? மூட்டுவலியை நிச்சயம் குறைக்கும் முடவாட்டுக்கால் சூப்!
முடவாட்டுக்கால் பெரும்பாலும் மலை பிரதேசங்களில் விளையக்கூடியது. கடல் மட்டத்திலிருந்து 3500 அடி உயரத்திற்கு மேல் உள்ள மலைப்பகுதிகளில் உள்ள பாறைகளின் இடுக்குகளுக்கு இடையே இந்த முடவாட்டுக்கால் வளரும் தன்மை கொண்டது..
தமிழகத்தை பொருத்தவரையில் கொல்லிமலை மற்றும் ஏற்காடு ஆகிய இரண்டு இடங்களில் இந்த கிழங்கு அதிக அளவில் கிடைக்கிறது. முடவாட்டுக்கால் கிழங்கு என்று சொன்னாலே அது கொல்லிமலை தான் என்கிற அளவிற்கு முடவாட்டுக்கால் விளையும் பிரதான இடமாக கொல்லிமலை இருக்கிறது.
முடவாட்டுக்கால் கிழங்கு தளர்ந்த வயதிலும் கால் தடி ஊன்றி நடக்கும் வயதில் உள்ளவர்களுக்கும் எலும்புகளுக்கு பலத்தைக் கொடுத்து கால்களை உறுதியாக்குமாம்.
எலும்பு மூட்டுகளுக்கு இடையே உள்ள மஜ்ஜையை நன்கு உறுதியாக வளர்க்கவும் அதிகரிக்க செய்யவும் இந்த முடவாட்டுக்கால் கிழங்கு பயன்படுகிறது.
மூட்டு வலி போன்ற எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளால் அவதிப்படுபவர்களுக்கு இது மிகச் சிறந்த வழி நிவாரணையாக செயல்படும்..
ஆர்தரைட்டிஸ் போன்ற இன்ஃப்ளமேஷன்களால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்வது முடவாட்டுக்கால் கிழங்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது..
முடவாட்டுக்கால் சூப் எடுத்துகொள்வதன் மூலம் மூட்டு வலி வராமலே தவிர்க்க முடியும்.இந்த முடவாட்டுக்கால் கிழங்குங்கு வேர்கள் கிடையாது. பாறைகளில் விளையக்கூடிய இவை செம்பு, தங்கம், இரும்பு, கால்சியம் மற்றும் பாறைகளில் இருக்கும் சிலிக்காவை உறிஞ்சும் தன்மை கொண்டது.
சித்தர்கள் வாதம், பித்தம், கபம் என்னும் நோயை விரட்டை இதை ஒரு மண்டலம் வீதம் சாப்பிட்டு வர வேண்டும் என்கிறார்கள். இதை ஆறுமாதங்கள் வரை பக்குவமாக வைத்திருந்து பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது. முதலில் முடவாட்டுக்கால் சூப் செய்முறை குறித்து பார்க்கலாம்.
தேவையானவை:
●முடவாட்டுக்கால் – 200 கிராம்
●இஞ்சி பூண்டு விழுது – 5 டீஸ்பூன்
●மிளகு, சீரகம் – தலா 2 டீஸ்பூன்
●கசகசா – 1 டீஸ்பூன் ( தேவையெனில்)
●தேங்காய்த்துருவல் – 3 டீஸ்பூன் ( தேவையெனில்)
●சின்ன வெங்காயம் – பொடியாக நறுக்கியது அரை கப்
●தக்காளி – பொடியாக நறுக்கியது அரை கப்
●இலவங்கப்பட்டை – சிறு துண்டு
●பூண்டு – 3 பல்
●உப்பு, மிளகுத்தூள், நல்லெண்ணெய் – தேவைக்கேற்ப
செய்முறை:
முடவாட்டுக்கால் ஆட்டுக்கால் போன்று இருக்கும். இதை நன்றாக கழுவி மேல் தோலில் இருக்கும் ரோமங்களையும் அதன் புறணியையும் நீக்கி சுத்தம் செய்யவும். பிறகு சிறு துண்டுகளாக வெட்டிகொள்ளவும்.
இஞ்சி, பூண்டு, கசகசா, தேங்காய்த்துருவல் அனைத்தையும் சேர்த்து மைய அரைக்கவும். சின்ன வெங்காயம், தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு இலவங்கப்பட்டை சேர்த்து வதக்க வேண்டும். பிறகு சாம்பார் வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி கொள்ளவும். இவை வதங்கியதும் முடவாட்டுக்கால், அரைத்த மசாலா சேர்த்து ஒரு லிட்டர் நீர்விட்டு கொதிக்க விடவும். இது 20 நிமிடங்கள் வரை கொதிக்க வேண்டும். பிறகு இறக்கி பூண்டு தட்டி போட்டு இதை சூப் போல் டம்ளரில் விட்டு உப்பு, மிளகுத்தூள் தூவி குடிக்கவும்.
தொடர்ந்து 10 முதல் 15 நாட்கள் வரை தினமும் ஒரு டம்ளர் வீதம் குடித்துவந்தால் முடக்குவாதம், மூட்டுவலி பலன் கிடைக்கும்.
குழந்தைகளுக்கு வாதம் தாக்கினால் இந்த கிழங்கு போட்டு கொதிக்க வைத்த நீரில் குளிக்க வைத்தால் வாத நோய் குணமாகும். கழுத்து வலி, தோள்பட்டை வலி, முதுகு வலி போன்றவற்றை குணப்படுத்தும்.
இதன் பெயரே சொல்லும் நோய் தீர்க்கும் தன்மையை . முடவன் ஆட்டும் கால் என்பதாகும். முடக்குவாதம் வந்து முடங்கியவர்கள் இந்த சூப் குடித்துவந்தால் முடக்குவாதம் குணமாகும்.
நாள்பட்ட மூட்டுவலி அது உடலில் எங்கு இருந்தாலும் அதன் வலி மேலும் தீவிரமாகமால் தடுக்க இந்த சூப் உதவும். இது உணவாக எடுத்துகொள்வதால் பக்க விளைவுகள் கிடையாது.
இன்று இளவயதிலேயே மூட்டு வலியை எதிர்கொள்பவர்கள் ஆரம்ப கட்டத்திலேயே கவனித்து முடவாட்டுக்கால் சூப் எடுத்துகொள்வதன் மூலம் மூட்டு வலி வராமலே தவிர்க்க முடியும்.
இந்த சூப் கடுமையான மூட்டுவலி, முழங்கால் வலி, குதிகால் வலி, கெண்டைக்கால் சதை இழுத்தல், உடலில் உண்டாகும் வலி,அசதி, தசைபிடிப்பு போன்ற அனைத்துமே சரியாகும்