இது தெரியுமா ? வாழைத் தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணையில் கலந்து தடவி வர தீப்புண் குணமாகும்..!

முன்னொரு காலத்தில், ஊரில் இருக்கும் பாட்டிகள் தான் மருத்துவர்களாக இருந்திருக்கிறார்கள். அறுவை சிகிச்சையில்லாமல் பிரசவம் பார்த்தல், காய்ச்சல், தலைவலி உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பிரச்னைகளுக்கு எளிய மருந்துகளை இந்த பாட்டிகளிடம் உள்ளது.

இந்த பாட்டி வைத்தியங்களை நாம் பொருட்படுத்தாமல் இருக்கின்றோம். உண்மையில், பாட்டி வைத்தியம் நோய்கள் தீர்க்கும் அருமருந்தாகும். நமக்கு அடிக்கடி உண்டாகும் சில உடல்நல பிரச்சசனைகளுக்கான, தீர்வுகளை காண சில பாட்டி வைத்தியங்கள்…

முகப்பருக்கள் :

உங்களுக்கு முகப்பருக்கள், தீராத பிரச்சனையாக இருக்கலாம். அந்த முகப்பருக்களை மறைப்பதற்கு, முகங்களில் ஏகப்பட்ட மருந்துகளையும், கிரீம்களையும் தடவி வருவதை சிலர் வழக்கமாக கொண்டிருப்பார்கள். அதற்கு பாட்டி வைத்தியமே போதுமானது. உங்கள் முகத்தில், முகப்பருக்கள் இருந்தால், அவற்றில் ஒரு பங்கு வினிகருடன், மூன்று பங்கு தண்ணீர் விட்டு, பஞ்சில் நனைத்து, பருக்கள் மீது, ஒத்தடம் வைக்க வேண்டும். இவ்வாறு செய்யும் பட்சத்தில், முகத்தில் வழியும், அதிகப்படியான எண்ணெயைப் போக்கி, முகப்பருக்களுக்கு முடிவு கட்டி விடுகின்றது.

எலும்புகளுக்கு :

வலிமை இல்லாத எலும்புகளை கொண்டவர்களுக்கு, எளிய பாட்டி மருத்துவம் உள்ளது. சியா விதைகளைத் தயிர் கலந்து, சாப்பிட்டு வர வேண்டும். இவ்வாறு செய்யும் போது, உங்கள் எலும்புகள் வலுவடையும். காரணம், என்னவெனில், சியா விதைகளில், பாலை விட நான்கு மடங்கு அதிகமாக கால்சியம் ஏற்றும் தன்மை இருக்கின்றது.

வறட்சியான கண்கள் :

ஒரு சிலருக்கு, கண்கள் வறண்டு, ஒரு வித எரிச்சலுடன் காணப்படும். இதுபோன்று, கண்களில் நீர் இன்றி, வறண்டு போகின்ற போது, அலட்சியம் காட்டக்கூடாது. அந்த தன்மையானது, கண்சார்ந்த பிற நோய்களுக்கு, வழிகாட்டியாக அமைந்து விடும் அபாயம் உள்ளது. வறட்சியான நிலையில், உங்கள் கண்கள் இருந்தால், ஒன்று அல்லது இரண்டு டீ ஸ்பூன் அளவு, ஆளி விதை எண்ணெய்யை அன்றாடமும், குடித்து வர வேண்டும். இதில், இருக்கும் ஒமேகா -3 எனப்படும் சத்தானது, கண்களில் உள்ள வறட்சியைப் போக்கிவிடுகின்றது.

வயிற்றுப்போக்கு :

சிலருக்கு, அடிக்கடி வயிற்றுப்போக்கு இருக்கும். வயிற்றுப்போக்கு பிரச்சனையிலிருந்து விடுபடுவதற்கு, வெள்ளை அல்லது பிரவுன் அரிசியால் செய்யப்பட்ட, கஞ்சியை குடித்து வரலாம்.

அஜீரணம் :

ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.

குடல்புண் :

மஞ்சளை தணலில் இட்டு சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். மஞ்சள் கரி சாம்பலை தேன் கலந்து சாப்பிட குடல் புண் ஆறும்.

வாயு தொல்லை :

வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.

வயிற்று வலி :

வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.

சீதபேதி

மலை வாழைப்பழத்தை நல்லெண்ணையில் சேர்த்துச் சாப்பிட சீதபேதி குணமாகும்.

தேமல்

வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வர தேமல் குணமாகும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *