இது தெரியுமா ? தினமும் காலையில் வெந்தயத்தை வெறும் வயிற்றில் சாப்பிடுவதன் மூலம்…
வெந்தயத்தைத் தூள் செய்து வைத்துக் கொண்டு ஒரு தேக்கரண்டி அளவு, காலை, மாலை வேளைகளில் 10 நாட்கள் வரை வெந்நீருடன் உட்கொள்ள வெள்ளைப்படுதல் குணமாகும்.
10 கிராம் வெந்தயத்தை நெய்யில் வறுத்து அரை தேக்கரண்டி அளவு பெருஞ்சீரகமும், சிறிதளவு உப்பும் சேர்த்து அரைத்து மோரில் கலந்து சாப்பிட வயிற்றுப்போக்கு கட்டுப்படும்.
வெந்தயத்தை அரைத்து, தீப்பட்ட இடங்களில் தடவ எரிச்சல் தணிந்து ஆறும். குணமாகும் வரை சிகிச்சையைத் தொடரலாம்.
வெந்தயத்தை, தோசை மாவு தயாரிக்கும் போது சேர்த்து அரைத்து, உபயோகப்படுத்திவர (வெந்தய தோசை) உடல் பலம் பெறும்.
இரண்டு டீஸ்பூன் வெந்தயத்தை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் அந்த நீரைக் குடித்து விட்டு அதன் பிறகு வெந்தயத்தை நன்றாக மென்று சாப்பிடலாம். கசப்பு சுவை இருந்தாலும் ஆரோக்கியம் முக்கியமானதாயிற்றே.
வெந்தயத்தைப் மிக்ஸியில் பொடித்து காலையில் நீர் அல்லது மோரில் 2 டீஸ்பூன் சேர்த்து குடிக்கலாம். அல்லது சாப்பிடுவதற்கு அரைமணிநேரம் முன்பு எடுத்துக்கொள்ளலாம்.காய்கறி சாலட் செய்யும்போது ஊறவைத்த வெந்த யத்தைச் சேர்த்தும் சாப்பிடலாம்.
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் வெந்தயத்தை உட்கொள்ளும் போது நீரிழிவுக்கான சிகிச்சையையும் கடை பிடிக்க வேண்டும். தொடர்ந்து வெந்தயம் பயன்படுத்தும் போது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையலாம் என்பதால் மாதம் ஒரு முறை பரிசோதனை செய்து கொள்வது நல்லது.
வெந்தயத்தைப் பொன் வறுவலாக வறுத்து, பொடித்து, சலித்து, தினமும் காலை, மாலை ஒரு டீஸ்பூன் வீதம் வாயில்போட்டு தண்ணீர் குடித்து வர நீரழிவு நோய் கட்டுப்படும்.
வெந்தயத்தில் உள்ள அமினோ ஆசிட், இன்சுலின் உற்பத்தியைத் தூண்டும். எனவே நீரிழிவு நோயாளிகள் தினமும் காலையில் வெந்தயத்தை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வருவது நல்லது.
உடலில் தேக்கியுள்ள் அதிகப்படியான கொழுப்பை குறைக்க செய்வதில் வெந்தயம் முக்கிய பங்காற்றுகிறது என்று ஆய் வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது உடலில் உள்ளதை களைவதோடு இதயம் தொடர்பான குறைபாடுகளின் அபாயத்தையும் குறைக்கிறது. வெந்தயத்தில் இருக்கும் அதிகப்படியான பொட்டாசியம் இதயத்தைப் பாதுகாக்கிறது.
உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள், தினமும் காலையில் வெந்தயத்தை வெறும் வயிற்றில் சாப்பிடுவதன் மூலம், கெட்ட கொலஸ்ட்ரால் கரைந்து, உடல் எடையும் வேகமாக குறையும்.
மாதவிடாய்க் காலங்களில் அடிவயிறு வலியை அதிகமாக உணர்பவர்கள் வெந்தயத்தை மாதவிடாய் நாட்கள் வருவதற்கு முன்பு சாப்பிட்டால் வலியின் தீவிரம் குறைய தொடங்கும். உடல் உஷ்ணத்தைப் போக்குவதோடு அந்த நேரத்தில் உண்டாகும் ஒரு வித எரிச்சலையும் போக்கும்.
வெந்தயத்தில் இருக்கும் நார்ச்சத்து மலச்சிக்கல் பிரச்னையிலிருந்து காப்பாற்றும். சிறுநீரகத்தில் நச்சுக்களை சேர விடாது என்பதால் சிறுநீரக கற்கள் உருவாகும் வாய்ப்பும் குறையும்.
வெந்தயத்தில் உள்ள பாலிஃபீனோலிக் ஃப்ளேவோனாய்டுகள், சிறுநீரகங்களின் செயல்பாட்டை அதிகரித்து, சிறுநீரக நோய்கள் வராமல் தடுக்கும். எனவே சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வெந்தயத்தை தினமும் காலையில் சாப்பிடுங்கள்.
வெந்தயத்தைக் கொண்டு, மெல்பா ரொட்டி என்கிற உணவு எகிப்து நாட்டில் தயாரிக்கப்படுகின்றது. இது ஒரு பாரம்பரியமான, சத்து நிறைந்த உணவாக எகிப்து மன்னர்கள் காலத்திலிருந்தே இருந்து வந்துள்ளது.
மலமிளக்கியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும் பயன்படுகிறது. கல்லீரல் நோய்களைப் போக்கும் நீரிழிவு நோய்க்கு கண்கண்ட மருந்து குடல் சம்பந்தமான நோய்களுக்கு நல்மருந்தாகும். கல்லீரல் முதலில் பாதிக்கப்படுவதற்கு ஆல்கஹால் முக்கிய காரணம். ஆனால் வெந்தயத்தை தினமும் உட்கொண்டு வந்தால், அதில் உள்ள பாலிஃபீனாலிக் உட்பொருட்கள் மதுவினால் கல்லீரல் பாதிக்கப்படுவதைத் தடுக்கும்.
வெந்தயத்தின் பலன்களை இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். ஆரோக்கியத்தையும் அழகையும் இயற்கையான முறையில் அதிகரிக்க கைவசம் வீட்டிலேயே வைத்திருக்கும் வெந்தயத்தைப் பயன்படுத்துங்கள்…