இது தெரியுமா ? செரிமானக் கோளாறுகள் உள்ளவர்கள் போட்டியை சாப்பிடலாமா ?
மட்டன் வெறும் சுவையையும் தாண்டி மனிதர்களுக்கு பல்வேறு மருத்துவ பயன் தருகிறது. ஆட்டின் தலை, கால், கண், குடல் என அனைத்தும் பல்வேறு நன்மைகளை தருகிறது. சூப்பு என்றாலே பலருக்கும் நினைவில் வருவது ஆட்டுக்கால் சூப்புதான். ஆட்டின் கால்களை சூப்பு வைத்து குடிப்பதன் மூலம் நமது எலும்புகள் மேலும் பலம்பெறுகிறது.
ஆட்டிறைச்சி உண்பதால் உடலில் உள்ள நல்ல கொழுப்புக்கள், நம் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புக்களை நீக்கி, கொலஸ்ட்ரால் பிரச்சனை வருவதை தடுக்கும். அதேபோல் பெண்கள் கர்ப்ப காலத்தில் ஆட்டிறைச்சி சாப்பிட்டால் அது ரத்தச்சோகை வராமல் தடுக்கும்.
வாரத்தில் ஒரு முறை ஆட்டிறைச்சியை சாப்பிட்டு வந்தால், அது உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, மூளையின் செயல்பாட்டை மேம்படுத்த செய்யும். மண்ணீரல் சாப்பிடுவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இந்த வெயில் காலங்களில் சிக்கனை தவிர்த்து மட்டன் சாப்பிடுவது உடற்சூட்டை கட்டுப்படுத்தும்.
ஆட்டு மூளையை அடிக்கடி சாப்பிடாமல் மாதம் இரண்டு முறை, அதுவும் அளவாக சாப்பிடலாம். ஆனால் கொலஸ்ட்ரால் மற்றும் பிபி பிரச்சனை உள்ளவர்கள், இதைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இதில் கொலஸ்ட்ரால் அதிகமாக உள்ளது. இப்போது ஆட்டு மூளையை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைக் காண்போம்.
ஆட்டு மூளையில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகமாக உள்ளன. இவை மூளை மற்றும் இதயத்தின் ஆரோக்கியத்தைப் பராமரிக்க தேவையான மிகவும் முக்கியமான சத்தாகும். ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகளை உட்கொண்டால், இதய நோயின் அபாயம் குறையும் மற்றும் இரத்தம் உறைவது தடுக்கப்படும். மேலும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நினைவாற்றலை அதிகரிக்க உதவி புரிகின்றன. எனவே ஆட்டு மூளையை உட்கொண்டால், மூளை மட்டுமின்றி, இதய ஆரோக்கியமும் மேம்படும்.
ஆட்டு மூளையில் ஜிங்க் சத்து அதிகமான அளவில் நிறைந்துள்ளன. ஜிங்க் சத்தானது ஆண்களின் பாலியல் ஆரோக்கியத்திற்கு மிகவும் இன்றியமையாத ஒன்று. இச்சத்து குறைபாடு ஏற்பட்டால், விந்தணுக்களின் உற்பத்தியில் குறைபாடு ஏற்படும். எனவே ஆட்டு மூளையை ஆண்கள் சாப்பிட்டால், அவர்களின் பாலியல் ஆரோக்கியம் மேம்படும். அதோடு, ஜிங்க் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதிலும் முக்கிய பங்கை வகிக்கிறது.
ஆட்டின் கண்களை எடுத்து கொண்டால், நம்முடைய கண்களுக்கு மிகுந்த பலத்தை தந்து பார்வையை கூர்மைப்படுத்தும்.. ஆட்டின் நெஞ்சு பகுதியை சமைத்து சாப்பிடும்போது, நம்முடைய கபம் நீங்கும்.. மார்புக்கு பலத்தை தரக்கூடியது.. அதனால்தான், பலவீனமானமாவர்கள் ஆட்டின் மார்பை, நெஞ்செலும்பாக வாங்கி சூப் வைத்து சாப்பிடுவார்கள். வைட்டமின் A, B, C உள்ளதால், கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது. ஆட்டின் இதயம், மன ஆற்றலை பெருக்கக்கூடியது.. ஆட்டு கால்களை சூப் வைத்து சாப்பிடும்போது, நம்முடைய கால்களுக்கு பலத்தை தருகிறது.. ஆட்டு மூளையில், கெட்ட கொழுப்பு ரொம்ப ரொம்ப குறைவு.. இதிலுள்ள பாஸ்பரஸ், நம்முடைய கிட்னியில் உள்ள கசடுகளை நீக்குவதில் பெரும்பங்கு வகிக்கிறது.
ஆடு இயற்கையாக உடலுக்கு குளிர்ச்சி வழங்கும் உணவை சேர்ந்தது. அந்தவகையில், ஆட்டின் தலைக்கறியை சாப்பிடுவதால், நம்முடைய இதயம் சார்ந்த வலி தீரும்.. இதய கோளாறுகளை நீக்குவதில் தலைக்கறிக்கு முக்கிய இடம் உண்டு என்கிறார்கள்.. இந்த தலைக்கறியை அளவோடு சாப்பிட்டால் இதயநோய் தீரும் என்கிறார்கள்.. குழந்தை பெற்ற பெண்களுக்கு தலைக்கறியை வீட்டில் பெரியவர்கள் அடிக்கடி செய்து தருவார்கள்.. இது அவர்களின் இடுப்பு வலிக்கு நிவாரணமாக அமைகிறது.. பால் சுரப்பும் அதிகமாக இருக்கும்.. பிறந்த குழந்தைக்கும் தலை சீக்கிரமாக நிற்கவேண்டுமென்று, இந்த ஆட்டுத்தலைக்கறியை குழம்பு செய்து தருவார்கள்.
ஆட்டின் குடல் பகுதியை போட்டி என்பார்கள்.. செரிமானக் கோளாறுகள் உள்ளவர்கள், போட்டியை சமைத்து சாப்பிடலாம். இதனால், அல்சர் பிரச்சனையும் தீரும்.. எனவே, கறியை சாப்பிடுவதற்கு பதிலாக, ஆட்டுக்கறியின் ஒவ்வொரு உடல் பாகத்தையும் சாப்பிடும்போது, ஆரோக்கியம் கூடும்.. இவ்வளவு நன்மைகள் இருந்தாலும்கூட, ஆட்டுக்கறியை அளவுடன் எடுத்து கொள்வதே நல்லது. பொதுவாக, சிவப்பு இறைச்சி செரிக்கப்படும்போது, ஒரு மெட்டாபொலிட் வெளியாகிறது என்று சமீபத்திய ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது… சிவப்பு இறைச்சியை அதிக அளவில் உட்கொள்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கு இதுவே காரணம் என்கிறார்கள்.
செம்மறி ஆட்டுக்கறி + வெள்ளாட்டுக்கறி என்று இரண்டு வகையில் வெள்ளாட்டுக்கறியை தேர்வு செய்யலாம். காரணம், மட்டனை எப்படி சமைக்கிறோம் என்பதில்தான் ஆரோக்கியம் அடங்கி உள்ளது. குறைவான எண்ணெய்யில் வேக வைத்தோ அல்லது கிரில் செய்தோ அல்லது கிரேவியாகவோ அல்லது சூப்பாகவே செய்து சாப்பிட்டால், சத்துக்கள் வீணாகாமல் கிடைக்கும்.