இது தெரியுமா ? தேங்காய்ப்பால், ஒரு சிறந்த கண்டிஷனர். பயன்படுத்தும் ஷாம்பூவுடன்…

தேங்காய்ப்பால் நஞ்சு முறிவாகப் பயன்படுத்தப் படுகிறது. குழந்தைகளுக்கு தேவையான எல்லா சத்துக்களும் தேங்காய் பாலில் உள்ளன. சிறுநீரக கற்கள் இருக்கும் நோயாளிகள் கூட பாலை அருந்தலாம்.

தேங்காய் பாலில் கசகசா, பால் தேன் கலந்து சாப்பிட்டால் வறட்டு இருமல் மட்டுப்படும். தேங்காய் பாலை விளக்கெண்ணெய்யில் கலந்து கொடுத்தால் வயிற்றில் உள்ள புழுக்களை அகற்றும். தேங்காய் பாலில் காரத்தன்மை உள்ளதால் அதிக அமிலம் காரணமாக ஏற்படும் வயிற்று புண்களுக்கு தேங்காய் பால் மிகவும் சிறந்தது.

உடலுக்கு தேவையான அமினோ அமிலங்கள் இதில் உள்ளன. இவை உடலின் வளர்ச்சிதை மாற்றத்துக்குப் பெரிதும் உதவுகிறது. மாதவிடாய் நின்றுவிட்ட பெண்கள் கண்டிப்பாக 500 மி.லி. வரைக்கும் பால் கண்டிப்பாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

எலும்புகளின் வலிமைக்கு கால்சியம் மிகவும் முக்கியமானது. இத்தகைய கால்சியம் வயது அதிகரிக்கும் போது குறைய ஆரம்பிக்கும். தேங்காய் பாலில் உள்ள கால்சியம் உங்களின் உடலை பராமரிக்கும்.

இரத்தக் கொதிப்பு கட்டுப்பாட்டிற்கும், உடல் பருமன் குறைவதற்கும், இதய நோயிற்கும், புற்றுநோய், நீரிழிவு நோய் உள்ளவர்களும் பாலை தினமும் எடுத்துக் கொள்ளலாம்.

பாலில் வைட்டமின் பி12 உள்ளது. இந்த வைட்டமின் பி 12 நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமானது

வறண்ட, உடைந்த, நுனி பிளந்த கேசத்திற்கு ஊட்டச்சத்து கிடைத்து ஆரோக்கியம் பெற, தேங்காய்ப்பாலை மயிர்க்காலில் இருந்து நுனி வரை தடவி, ஐந்து நிமிடங்களுக்கு தலையில் மஸாஜ் கொடுத்து, 20 நிமிடங்கள் வைத்திருந்து அலசவும்.

தேங்காய்ப்பால், ஒரு சிறந்த கண்டிஷனர். பயன்படுத்தும் ஷாம்பூவுடன் சரிபாதி அளவு கலந்து ‘ஹெட் பாத்’ எடுக்க, கூந்தல் மினுங்கும்.

வறண்ட, போஷாக்கு குறைந்த சருமம் உள்ளவர்கள் தேங்காய்ப்பாலை உடலில் தடவி, 30 நிமிடங்கள் கழித்துக் குளிக்க, அதன் ஈரப்பதம் சருமத்தால் உறிஞ்சப்பட்டு, வறட்சி நீங்கி பளபளப்பாகும்.

வயதாவதால் ஏற்படும் சரும சுருக்கங்கள், சருமத் தொய்வு போன்றவற்றைத் தவிர்க்க, காப்பர் மற்றும் வைட்டமின் சி அடங்கியுள்ள தேங்காய்ப்பாலை சருமத்தில் தொடர்ந்து அப்ளை செய்து வர, இளமைப் பொலிவு கிடைக்கும்.

சரும எரிச்சல், சோரியாசிஸ், பேக்டீரியா தொற்று போன்ற பிரச்னைகளுக்கு, தேய்காய்ப்பாலை பாதிக்கப்பட்ட இடங்களில் மருந்தாகத் தடவ, நிவாரணம் கிடைக்கும்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *