இது தெரியுமா ? முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து ஒரு கோழிமுட்டை உடைத்து…
ஜாதிக்காயில் உள்ள எண்ணெய் மூட்டு வலி குணமாக உதவுகிறது. வலி, வீக்கம் உள்ள இடத்தில் இந்த எண்ணெயை தடவினால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.பற்களை பாதுகாக்க இது மிகவும் உதவுகிறது. இதில் பாக்டீரியாவை எதிர்க்கும் சக்தி உள்ளது. அதனால் இது பற்பசைகளில் ஒரு பொருளாக பயன்படுத்தப்படுகிறது. இதன் எண்ணெய் பல்வலிக்கு நிவாரணம் அளிக்க உதவுகிறது.
கேரட் சாப்பிட்டால், இரத்தத்தில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறும். இதனால் சருமம் பொலிவாக இருக்கும்… பீட்ரூட் சாப்பிட்டு வந்தால் புதிய இரத்தம் உற்பத்தியாகும்.
செம்பருத்திப் பூவை வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர வெட்டை சூடு தீர்ந்து இரத்தம் விருத்தியாகும்.
முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து ஒரு கோழிமுட்டை உடைத்து விட்டு கிளறி நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வர இரத்தம் விருத்தியாகும்.
இஞ்சிச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது.
வாரத்திற்கு 2-3 முறை ஒரு டம்ளர் முட்டைகோஸ் ஜூஸை குடித்து வந்தால், உடலில் உள்ள இரத்தமானது சுத்தமாகும்.
தக்காளிப் பழம் சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும். ஆனால், வாத நோய் உள்ளவர்கள் தவிர்த்தல் நல்லது.
இலந்தைப் பழம் சாப்பிட்டால் இரத்தத்தை சுத்தம் செய்வது மட்டுமில்லாமல், சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும்.
பச்சை இலைக் காய்கறிகளில் ஒன்றான காலிஃப்ளவரில் குளோரோஃபில் என்னும் இரத்தத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் பொருள் அதிகம் உள்ளது. ஆகவே இந்த உணவுப்பொருளை உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டால், உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
கசப்புத் தன்மையுடைய பாகற்காய் அதிகம் சாப்பிட்டால், இரத்தத்தில் உள்ள நச்சுக்கள் வெளியேறுவதோடு, சர்க்கரையின் அளவையும் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளும். அதிலும், பாகற்காயை வேக வைத்து சாப்பிட்டால் தான், அதன் முழு நன்மையைப் பெற முடியும்.
பூண்டு ஒரு சிறந்த ஆன்டி-பயாடிக் மட்டுமின்றி, இரத்தத்தை சுத்தப்படுத்தும் தன்மையும் கொண்டது. மேலும் இது உடலில் தங்கியுள்ள நச்சுகளை மட்டுமின்றி, தேவையற்ற கொழுப்புக்களையும் கரைத்துவிடும்.
எலுமிச்சையில் உள்ள புளிப்புத்தன்மை இரத்தத்தை சுத்தப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் உள்ள அளவையும் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளும். மேலும் இது உடல் எடையை குறைக்கவும் பெரிதும் உதவியாக இருக்கும்.
நெல்லிக்காயிலும் இரத்தத்தை சுத்திகரிக்கும் பொருள் அதிகம் நிரம்பியுள்ளது. ஆகவே தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு, இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்வதோடு, நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரித்துக் கொள்ளலாம்.
வாரத்திற்கு இரண்டு முறை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் வேப்பிலையை தண்ணீரில் போட்டு கொதிக்கவிட்டு, அந்த நீரை பருகி வந்தால், உடலில் உள்ள நச்சுக்கள் மட்டுமின்றி, கிருமிகளும் அழிந்துவிடும்.
விளாம்பழம் சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள கிருமிகள் அழிந்துபோகும்.
பொதுவாக உடலில் ஏற்படும் நோய்களானது வயிற்றில் தான் உற்பத்தியாகிறன. ஆகவே வயிற்றை சுத்தமாக வைத்துக் கொண்டால், நோய்கள் வராமல் தடுக்கலாம். அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளில் முதன்மையானது குடலானது சுத்தமாகும். அதற்கு தண்ணீர் குடித்தவுடன், சிறிது நேரத்திலேயே மலம் கழிக்கக்கூடும். இப்படி தினமும் தவறாமல் மலம் கழித்தாலேயே, உடலில் உள்ள கழிவுகளானவை முற்றிலும் வெளியேறிவிடும்.
தண்ணீரானது உடலின் மூலைமுடுக்குகளில் தங்கியுள்ள நச்சுக்களை சிறுநீர் மூலமாக வெளியேற்றிவிடும். இதனால் உடலானது நச்சுக்களின் சுத்தமாக இருக்கும்.
தண்ணீரை வெறும் வயிற்றில் குடித்து வந்தால், உடலில் உள்ள கழிவுகள் மற்றும் நச்சுக்கள் வெளியேறி, விரைவில் பசி எடுக்க ஆரம்பித்துவிடும்.
வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால், இரத்தத்திலுள்ள சிவப்பணுக்களின் வளர்ச்சியானது அதிகரித்து, இரத்தமானது அதிகப்படியான ஆக்ஸிஜனை கொண்டிருப்பதால், உடலானது எனர்ஜியுடன் இருக்கும்.
பெரும்பாலானோருக்கு உடலில் நீர்ச்சத்து குறைவாக இருப்பதால் தலைவலி அடிக்கடி ஏற்படும். அத்தகையவர்கள் தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் தாண்ணீர் குடித்து வந்தால், உடலின் நீர்ச்சத்தானது அதிகரித்து தலைவலியானது குறையும்.
காலையில் சாப்பிடாமல் அலுவலகத்திற்கு செல்பவர்கள், தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வந்தால், அல்சர் ஏற்படாமல் தடுக்கலாம்.
எடையை குறைக்க நினைப்பவர்கள், அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வந்தால், உடலில் தங்கியுள்ள நச்சுக்களுடன், உடலின் மெட்டபாலிசம் அதிகரிப்பதால் தேவையற்ற கொழுப்புக்களும் கரைந்து வெளியேறி, உடல் எடை குறைய உதவியாக இருக்கும்.