இது தெரியுமா ? தினமும் வெறும் வயிற்றில் வாழைத்தண்டு சாறு குடித்து வந்தால்…
ஒவ்வொரு உடல் பாகத்திற்கும் ஆரோக்கியம் அளிக்கும் உணவு வகைகளில் வாழைத்தண்டு மிக சிறந்த உணவாகும்.சிறுநீரக கற்களை நீக்கவும், உடல் எடை அதிகரிக்க காரணியாக இருக்கும் கொழுப்பை கரைக்கவும் பெருமளவு வாழைத்தண்டு உதவுகிறது.
இதை, பொரியலாகவும், சாறாகவும் எப்படி வேண்டுமானாலும் உண்ணலாம். இரவு இந்த உணவுகளை பாலில் கலந்து குடித்து வந்தால், விந்து உற்பத்தி அதிகரிக்கும்.
மது, புகை போன்ற தீய பழக்கங்களாலும் மற்றும் நம் வேலைப்பளு காரணமாகவும் தண்ணீர் அதிகம் குடிக்கும் பழக்கத்தைக் குறைத்துக் கொண்டோம். இவற்றினால் சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகின்றன. அதேபோல சரியான நேரத்தில் சிறுநீரை வெளியேற்றாமல் அடக்குவதாலும் சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகின்றன. இதற்கான அருமருந்து என்றால் அது வாழைத்தண்டுதான்.
மருத்துவ நன்மைகள்:
- கொழுப்பைக் குறைக்கும். வயிற்றுப் புண்களைக் குணப்படுத்தும். சிறுநீர் எரிச்சலைப் போக்கும். சிறுநீர் பாதையில் கல் அடைப்பு இருப்பவர்களுக்கு மிகச் சிறந்தது. நமது உடலில் நோய்கள் தோன்றக்கூடிய காரணங்களில் ஒன்று உடல் பருமன். இது அளவுக்கு அதிகமான உணவை உண்பதாலும், உடலுக்குத் தேவையான உழைப்பு இல்லாததாலும் ஏற்படுகிறது.
- நீர்க்கட்டி பிரச்சனை உள்ளவர்கள், தினமும் வெறும் வயிற்றில் வாழைத்தண்டு சாறு குடித்து வந்தால் நல்ல தீர்வுக் காண முடியும்.
- வெப்பம் அதிகமாக காணப்படும் காலங்களில் உணவில் வாழைத்தண்டு சேர்த்துக் கொள்வதால், உடல் வெப்பத்தை குறைக்க முடியும். குறிப்பாக வாழைத்தண்டை சேர்த்துக் கொள்ளும் நாட்களில் மற்ற குளிர்ச்சியான உணவுகளை தவிர்த்துவிடுங்கள்.
- வாழைத் தண்டிலுள்ள நீர்ச்சத்தும் நார்ச்சத்தும் அதிகப் படியான சதையைக் குறைத்து உடலை சீராக மாற்றும். இதிலுள்ள வைட்டமின் பி6, ஹீமோகுளோபின் மற்றும் இன்சுலின் உற்பத்திக்கு பெரிதும் உதவுகிறது. இதிலுள்ள பொட்டாசியம் இதய தசைகளை வலுவடையச் செய்கிறது.
- வைட்டமின் ஏ மற்றும் சி நிறைந்த வாழைத்தண்டு, தோல் நோய்களுக்கு மிகச்சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. இருமல், காது நோய், கர்ப்பப்பை நோய்கள், மஞ்சள் காமாலை, விஷக்கடிகளால் ஏற்படும் வலி மற்றும் இதர நோய்களுக்கு வாழைத்தண்டு மிகச் சிறந்த மருந்தாகத் திகழ்கிறது.