இது தெரியுமா ? தினம் இரண்டு கிராம்பு தூங்கும் முன் சாப்பிட்டால்

ரவில் கிராம்பை உட்கொள்வது இருமல், சளி, வைரஸ் தொற்று, மூச்சுக்குழாய் அழற்சி, சைனஸ் மற்றும் ஆஸ்துமா போன்றவற்றிலிருந்து விடுபட கிராம்பு உதவும்.

 

கிராம்பினை தவறாமல் பயன்படுத்தும் போது, அவை வயிற்று வியாதிகளிலிருந்தும் பல் மற்றும் தொண்டை வலியிலிருந்தும் நிவாரணம் அளிக்க உதவும்.

படுக்கைக்குச் செல்வதற்கு முன் இரண்டு கிராம்புகளை மென்று சாப்பிட்டு பின்னர் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரைக் குடித்து வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு பின்வரும் சிக்கல்களிலிருந்தும் விடுபடலாம்.

1. இரவில் கிராம்பை உட்கொள்வது மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, அமிலத்தன்மை போன்ற வயிற்றுப் பிரச்சினைகளை போக்க உதவும். இது உங்கள் செரிமானத்தையும் மேம்படுத்துகிறது.

2. கிராம்பில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இருப்பது மட்டுமல்லாமல் இவை பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளன. மேலும், இதில் முகப்பருவைத் தடுக்க உதவும் ஒரு வகை சாலிசிலேட் உள்ளது.

3. கிராம்புகளை வெதுவெதுப்பான நீரில் உட்கொள்வதன் மூலம் பல்வலியை தவிர்க்கலாம். அல்லது பல் வலியிருக்கும் இடத்தில் ஒரு கிராம்பை வைக்கலாம். இது வலி நிவாரணியாகவும் செயல்படும்.

4. தொண்டை புண் மற்றும் தொண்டை வலியைப் போக்க கிராம்பு உதவும்.

5. கை, கால்கள் நடுங்கும் பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்கள் படுக்கைக்கு செல்லும் முன் 1 முதல் 2 கிராம்புகளை உட்கொள்ளவதன் மூலம் பிரச்சினையிலிருந்து நிவாரணம் பெறலாம்.

6. தினமும் கிராம்பை உட்கொள்வது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இந்த கொரோனா பெருந்தொற்று காலத்தில் நமக்கு மிகவும் அவசியமான ஒன்று.

7. இருமல், சளி, வைரஸ் தொற்று, மூச்சுக்குழாய் அழற்சி, சைனஸ் மற்றும் ஆஸ்துமா போன்றவற்றிலிருந்து விடுபட கிராம்பு உதவும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *