இது தெரியுமா ? தேள் கொட்டினால் என்ன செய்ய வேண்டும் தெரியுமா ?

வெறிநாய்க்கடி
நாயுருவியின் வேரும் எலுமிச்சைப் பழத்தின் விதையும் சம பாகமாகச் சேர்த்து எலுமிச்சைச்சாறுவிட்டு அரைத்து வைத்துக்கொண்டு அதில் எலுமிச்சைப் பழம் அளவிற்குக் காலையிலும் மாலையிலும் ஒரு உருண்டை வீதம் பத்து நாள் உட்கொண்டால் வெறிநாய்க்கடி குணமாகும்.

நல்ல பாம்பு கடி
வாழைப்பட்டைகளைப் பாய் போல் பரப்பி படுக்க வைத்து, வாழைப்பட்டைச் சாறு கொடுக்கவும்

தேள் கடித்தால் ஏற்படும் அறிகுறிகள்

அந்த இடத்தில் வலி எரிச்சலுடன் இருக்கும்

நடுக்கம் இருக்கும்

வாந்தி உணர்வு இருக்கும்

உடல் முழுவதும் இரத்தம் தோய்ந்த நிறத்தில் நிறம் மாற்றம் இருக்கும்

கடுமையான விஷம் கொண்ட தேளாக இருந்தால் அது உயிரிழப்பை உண்டு செய்துவிடும்.

நீலமாரி இலைகள் என்பது அவுரி இலையை குறிக்கும். இதனுடன் கறிவேப்பிலை சேர்த்து மோரில் கலந்து அரைத்து பேஸ்ட் போல் ஆக்கி இந்த அவுரி இலையை கலந்து கடிபட்ட இடத்தில் தடவி வந்தால் நச்சுத்தன்மை மற்றும் அறிகுறிகளை குறைக்கும்.

தேள் கொட்டியவுடன் நெய்யை உருக்கி அதில் ராக் சால்ட் கலந்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி வந்தால் அந்த இடத்தில் இருக்கும் நச்சை அகற்ற உதவுகிறது.

ராக் சால்ட் என்பது தோல் திசுக்களை சுத்தப்படுத்தவும் வலுப்படுத்தவும் உதவுகிறது. இது இதில் இருக்கும் திரவங்கள் மற்றும் எலக்ட்ரோலைட்டுகள சில வகையான தோல் அழற்சிகளுக்கு உதவலாம்.

தும்பை இலைகளை எடுத்து வந்து அரைத்து நன்றாக மசித்து அதை எடுத்து தேள் கொட்டிய இடத்தில் தடவி வந்தால் உடனடியாக வலி குறையும்.தும்பை தடிப்புக்கு நல்ல பலன் அளிக்கும். இது பூரான் கடிக்கு குணமளிக்கும். விஷப்பூச்சிகளால் ஏற்பட்ட தடிப்பும், அரிப்பும் மறையும் பாம்புக்கடிக்கு முதலுதவியாக தும்பையும் மிளகும் சேர்த்து பயன்படுத்தலாம்.

ஆயுர்வேதத்தில் வில்வாதி குளிகா போன்றவையும் தேள் கொட்டிய இடத்தில் மருந்தாக பயன்படுத்தலாம். இது குறித்து மருத்துவரின் ஆலோசனை பெற்று பயன்படுத்த வேண்டும்.

வண்டு கடி
கார வெற்றிலை எடுத்து, 8 மிளகு சேர்த்துக் உண்ண கொடுக்கவும்.

எலி கடித்து விட்டால்
வெள்ளெருக்கம் பாலைத் தடவினால் அந்த இடம் புண்ணாகிவிடும். பின்னர் ஆறிவிட விஷம் நீங்கும், நாய்க்கடிக்கும் இது உகந்தது.

பூரான் கடி
பனை வெல்லத்தை (கருப்பட்டி) தின்னத் தடிப்பு, அரிப்பு உடனே மாறும்.
குப்பைமேனி இலையையும், உப்பையும் சமமாக வைத்து சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்து பூரான் கடித்த இடத்தில் இதனை பூசி விட்டு நான்கு மணி நேரம் கழித்து கழுவ வேண்டும். உடல்முழுவதும் தடிப்பு காணப்பட்டால் இதனை உடல்முழுவதும் பூசி குளிக்க வேண்டும்.

100 மிலி வெற்றிலை சாற்றில் 35 கிராம் மிளகு சேர்த்து 12 மணி நேரம் நன்றாக ஊற வைத்து உலர்த்தி பொடி செய்து சீசாவில் எடுத்துக்கொள்ள வேண்டும். தினமும் காலை, மாலை என இருவேளை சாப்பிட்டு தண்ணீர் குடித்து வந்தால் பூரான் விஷம் குணமாகும். ஆனால் புளி, நல்லெண்ணெய் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.

தூய்மையாக்கிய குப்பமேனி வேரை அம்மியில் வைத்து, பசும்பால் விட்டு வெண்ணெய் பதமாக அரைத்தெடுத்து காய்ச்சின பசும்பாலில் கரைத்து கொடுக்க வேண்டும், ஒரு வாரம் காலை மாலை கொடுக்கவும்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *