இது தெரியுமா ? கண்கள் எளிதில் வறண்டு விடாமல் இருக்க இந்த பழத்தை சாப்பிடுங்க..!
மக்கள் அதிகம் விரும்பி சாப்பிடும் பழ வகைகளில் ஒன்றுதான் முலாம்பழம். முலாம் பழத்தில் 95% நீர்ச்சத்து உள்ளது. நீர்ச்சத்துக்கள் அதிகம் உள்ளதால், நாக்கின் வறட்சியை நீக்கி, உடலை குளிர்ச்சியாக்கும்.பெரும்பாலானோர் இதை கிர்ணி பழம் என்று அழைக்கிறார்கள். முலாம்பழம் நன்மைகள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
ஊட்டச்சத்து:
உடலில் அனைத்து உறுப்புகளும் சீராக இயங்குவதற்கு தாதுக்கள், இரும்பு சத்து, வைட்டமின் சத்து, சுண்ணாம்பு சத்து, பாஸ்பரஸ், கால்சியம் சத்துக்கள் போன்றவை அத்தியாவசிய தேவையாகும் இவை அனைத்தும் முலாம் பழத்தில் உள்ளது.
இதய ஆரோக்கியம்:
முலாம் பழத்தில் நார்ச்சத்து மற்றும் அடினோசைன் எனப்படும் வேதிப்பொருள் அதிகம் உள்ளது. இது இரத்த செல்கள் உறைவதை தடுத்து,இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி இதயம் சம்பந்தமான நோய்கள், பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது.
வயிறு கோளாறுகள்
முலாம் பழத்தில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் இருப்பதால் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை சரிசெய்யும் தன்மைக்கொண்டது.
தினசரி முலாம் பழத்தை எடுத்துக்கொள்ளும் பொழுது வயிற்றில் ஏற்படும் கோளாறுகள் குறையும். பசியின்மை போன்ற பிரச்சனைகளும் தீரும்.
இந்த முலாம் பழத்தின் விதைகளுடன் தேன் கலந்து சாப்பிட வயிற்றுப்பூச்சிகள் நீங்கும்.
அதுமற்றுமின்றி வயிற்றில் உண்டாகும் அமில பிரச்சனைகளையும், அல்சர் நோயையும் தீர்க்கும் ஆற்றல் கொண்டது.
முலாம் பழத்துடன் சிறிது இஞ்சிச்சாறு, சீரகம் மற்றும் உப்பு கலந்து சாப்பிட்டால் வயிற்றுப்பொருமல், குடல்நோய் மற்றும் எரிச்சல் போன்ற நோய்கள் சரியாகும்.
வாதம், பித்தம் நீங்க
நமது உடலில் உள்ள வாதம் மற்றும் பித்தத்தை சமநிலையில் இருக்கவும், அதிகமான வாதம் மற்றும் பித்தத்தை குறைக்கவும் முலாம் பழம் அற்புதமான ஒன்றாகும்.அதுமற்றுமின்றி உடலின் களைப்பையும் சரி செய்யும் தன்மைக்கொண்டது.
ஆஸ்துமா
இன்றைய காலத்தில் பெரும்பாலான மக்களிடம் ஆஸ்துமா பிரச்சனையானது பரவி வருகிறது. இதற்கு முக்கிய காரணம் காற்று மாசு ஆகும்.முலாம் பழத்தை தொடர்ந்து சாப்பிட ஆஸ்துமாவால் ஏற்படும் அபாயமானது குறையும்.அதுமற்றுமின்றி, அமெரிக்காவில் உள்ள கான்சஸ் பல்கலைக்கழத்தில் 2003-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில், சிகரெட்டால் ஏற்படும் நுரையீரல் பாதிப்பானது, முலாம் பழத்தில் உள்ள வைட்டமின் சி-ஆல் ஓரளவிற்கு குறைகிறது என தெரியவந்தது.
கண்பார்வை:
முலாம் பழத்தில் வைட்டமின் சத்துகள் நிறைந்துள்ளது. கண்ணில் இருக்கும் செல்களின் வளர்ச்சியை ஊக்கப்படுத்தி வயதாவதால் பார்வை மங்குதல் போன்ற பிரச்சனைகளிலிருந்து பாதுகாக்கிறது மற்றும் கண்கள் எளிதில் வறண்டு விடாமல் இருக்க உதவுகிறது.இந்த பழத்தை சாப்பிடுவதால் வயதாகுவதால் ஏற்படும் விழித்திரை சேதமடைவதை தடுக்கும் தன்மை கொண்டது.அதுமட்டுமில்லாமல், இதிலுள்ள பீட்டா கரோட்டின் கண்பார்வை குறைபாடுகளை தடுக்கும் தன்மை கொண்டுள்ளது.
உடல் குளிர்ச்சி:
கோடைகாலங்களில் உடலில் இருகின்ற நீர் சத்துகள் வெளியேறி, உடல் எளிதில் வெப்பமடைகிறது இதனால் நமக்கு உடல் சோர்வு மற்றும் உடலில் அத்தியாவசிய உப்புகள் இழப்பு ஏற்படுகிறது. கோடைகாலங்களில் முலாம் பழ ஜூஸ் குடித்து வந்தால் உடல் உஷ்ணம் தணியும்.
இளமை தோற்றம்:
வயது அதிகரிக்க அதிகரிக்க ஆண், பெண் ஆகிய இருபாலருக்கும் தோல் கடின தன்மை பெறுவதோடு, தோலில் சுருக்கங்கள் ஏற்படுவது, ஈரப்பதம் குறைவது போன்ற சரும பிரச்சனைகள் ஏற்படும். இளமை தோற்றத்துடன் இருக்க விரும்புபவர்கள் அடிக்கடி முலாம் பழ ஜூஸ் குடித்து வந்தால் தோலின் செல்களின் வளர்ச்சியை மேம்படுத்தி பளபளப்பை அதிகரித்து, சுருக்கங்களை போக்கி, இளமை தோற்றத்தை பராமரிக்க உதவும்.
புற்று நோய் தடுப்பு:
முலாம் பழங்களில் கரோட்டினாய்டு வேதிப்பொருள் அதிகம் உள்ளது. எனவே முலாம் பழம் அதிகம் சாப்பிடுபவர்களுக்கு நுரையீரல் புற்று நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவதாக மருத்துவ ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.