இது தெரியுமா ? தேங்காய்ப் பாலை இரவில் சாப்பிடும்போது நெஞ்செரிச்சல் ஏற்படாமல் தவிர்க்க…

தேங்காய்ப் பாலை இரவில் குடிப்பதால் பல்வேறு நன்மைகள் இருக்கின்றன.தேங்காய்ப் பாலை இரவில் சாப்பிடும்போது நெஞ்செரிச்சல் ஏற்படாமல் தவிர்க்க வேண்டுமென்றால், தேங்காய்ப் பாலில் சிறிது சுக்குப் பொடியும் மஞ்சளும் சேர்த்து சாப்பிடுங்கள்.

சமையலில் தேங்காய் வெறும் சுவைக்காக மட்டும் சேர்க்கப்படுவதில்லை. நாம் உண்ணும் உணவுகளில் உள்ள புரதங்களை உடல் உறிஞ்சிக் கொள்வதற்கு தேங்காய்ப்பாலில் உள்ள சத்துக்கள் உதவுகின்றன.உடலில் உள்ள திசுக்களின் வளர்ச்சியைத் தூண்டுகிறது.செரிமானக் கோளாறுகளைச் சரிசெய்து உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கச் செய்கிறது.கல்லீரல் வீக்கம், கல்லீரல் கொழுப்பு போன்ற கல்லீரல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளைத் தீர்க்கும் வலிமை கொண்டது.

மஞ்சள் மற்றும் சுக்கின் மருத்துவ குணங்கள் தேங்காய்ப் பாலில் உள்ள கொழுப்பினால் வயிற்றுக் கோளாறுகள், நெஞ்செரிச்சல் ஆகியவை ஏற்படாமல் தடுக்கும்.

தேங்காய் பாலில் போதுமான அளவு கால்சியம் இல்லாத போதிலும், பாஸ்பரஸ் நிறைந்துள்ளது. குறிப்பாக உடலில் உள்ள எலும்புகளை உறுதியாக்குவதற்கு பாஸ்பரஸ் முக்கிய ஊட்டச்சத்தாக விளங்குகிறது. அதிலும் பாஸ்பரஸை கால்சியத்துடன் சேர்த்து எடுத்துக் கொள்ளவேண்டும்.

போதுமான இரும்புச்சத்து உடம்பில் இல்லாததால், உலகத்தில் உள்ள பலருக்கும் இரும்புச்சத்து குறைபாடு இருக்கிறது. இரும்புச் சத்து குறைபாடு இருப்பதால், உடலானது ஹீமோகுளோபின் அதிகரிப்பதை தடுத்து நிறுத்தும். இதனால் இரத்த அணுக்களில் போதுமான அளவு ஆக்சிஜன் கிடைக்காமல், இரத்த சோகையை உண்டாக்கும். ஒரு கப் தேங்காய் பாலில், உடம்புக்கு அன்றாடம் தேவைப்படும் இரும்புச்சத்தில் 25 சதவீதம் கிடைத்துவிடுகிறது.

எப்போதெல்லாம் தசை பிடிப்பு மற்றும் தசை வலி ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் கொஞ்சம் உணவோடு சேர்த்து தேங்காய் பாலை பருகினால் நல்ல பலன் கிடைக்கும். ஏனெனில் இதில் அதிக அளவு மக்னீசியம் இருப்பதால், தசை வலிகளுக்கு சிறந்த நிவாரணியாக விளங்குகிறது.

தேங்காய் பால் வெகு விரைவிலேயே பசியை அடங்கச் செய்யும். அதற்கு காரணம் தேங்காய் பாலில் அடங்கியுள்ள அதிகப்படியான நார்ச்சத்து தான். செலினியம் என்பது ஒரு முக்கியமான ஆக்சிஜனேற்றத் தடுப்பான். இத்தகைய செலினியம் தேங்காய் பாலில் அதிகம் உள்ளது. ஆகவே கீல்வாதம் இருப்பவர்கள், இதனை சாப்பிட்டால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.

இரத்தக் கொதிப்பை எண்ணி கவலைப்படுபவர்கள், பொட்டாசியம் கலந்த உணவை உண்டால், இந்த பிரச்சனை ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம். ஏனெனில் பொட்டாசியம் உடம்பில் உள்ள இரத்தக் கொதிப்பின் அளவை குறைக்க உதவும். இத்தகைய பொட்டாசியம் தேங்காய் பாலில் அதிகம் உள்ளது.

தேங்காய் பால், உடலில் உள்ள நோய் எதிர்ப்பு ஆற்றலை உறுதியாக வைத்திருப்பதால், அடிக்கடி ஏற்படும் சளி மற்றும் இருமலை விரட்டியடிக்க உதவி புரியும். மேலும் இதில் வைட்டமின் சி நிறைந்திருப்பதால், உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பை வளப்படுத்தும்.

உடம்பில் உள்ள புரோஸ்டேட் சுரப்பியின் ஆரோக்கியத்தை மேம்படுத்த ஜிங்க் முக்கிய பங்கு வகிக்கிறது. இது புற்றுநோய் அணுக்களின் செயல்பாடுகளை குறைக்கும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *