இது தெரியுமா ? அடிக்கடி பச்சையாக கேரட்டை சாப்பிடுவதால்…
கேரட்டை உணவில் எடுத்துக் கொள்பவர்களுக்கு கொழுப்புத் தொல்லையும், ஆண்மையின்மை பிரச்சனையும் இருக்காது. கேரட்டை சமைத்து உண்பதை விட, பச்சையாக சாப்பிடும் போது அதில் பெரும்பான்மையான சத்துக்கள் முழுமையாக நம்மை வந்து சேரும்.
கேரட்டில் கரோட்டின் என்கின்ற உயரிய சத்துக்கள் உள்ளது. இவை நமது உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகப்படுத்துகிறது. மேலும் செரிமானத்தை தூண்டி நல்ல ஜீரண சக்திதியை தருகின்றது.
கேரட்டை உணவுடன் அடிக்கடி சாப்பிடுவதன் மூலம். கண்கள் ஆரோக்கியம் அடையும், மாலைக் கண் நோயை தடுக்கும், நோய் தாக்கி இருந்தால் குணமாக்கும், கண்பார்வை வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு கேரட்டை உணவுடன் கொடுப்பதன் முலம் தீர்வு கிடைக்கும்.
வாய் துர்நாற்றம் உள்ளவர்கள் வாரம் ஐந்து நாட்கள் மட்டும் கேரட் சாறினை சர்க்கரை மற்றும் உப்பு சேர்க்காமல் அருந்தி வந்தால் வாய் துர்நாற்றம் போய்விடும். மேலும் பற்களில் கரை உள்ளவர்கள் அடிக்கடி பச்சையாக கேரட்டினை மென்று சாப்பிட்டால் பற்களின் கரைகள் போய்விடும்.
கேரட்டில் புற்று நோயை வரவிடாமல் செய்கின்ற நோய் தடுப்பு ஆற்றல் மட்டுமே உள்ளது. தினமும் கேரட்டை தவறால் சாப்பிட்டு வர வேண்டும். இதானல் அதில் உள்ள வைட்டமின் சி, எலும்புகளை வலுவாக்கும்
கேரட் மாவுச்சத்து இல்லாத காய்கறி என்பதால் சர்க்கரை நோயாளிகள் இதை சாப்பிடலாம் என்று அமெரிக்க நீரிழிவு சங்கம் தெரிவித்துள்ளது. கேரட்டில் கரோட்டினாய்டுகள் உள்ளன. இது ஒரு வகை நிறமி.
கரொட்டினாய்டுகள் உணவுகளுக்கு நிறமியை கொடுக்கின்றன. ஆரஞ்சு மற்றும் மஞ்சள் பழங்கள் மற்றும் காய்கறிகளில் இவை அதிகம் காணப்படுகின்றன. ஒரு நபரின் கண்களில் உள்ள நிறமி கரோட்டினாய்டுகளையும் கேரட் கொண்டுள்ளது. இதன் ஆக்ஸிஜனேற்ற செயல்பாடு விழித்திரையை சேதத்திலிருந்து பாதுகாக்க செய்கிறது.
நீரிழிவு விழித்திரை நோய்க்கு எதிராக கரோட்டினாய்டுகள் பாதுகாப்பாக இருக்கும் என்கிறது ஆராய்ச்சி.
நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுகளில் பீட்டா- கரோட்டின் என்கின்ற சத்து குறைபாடு ஏற்படுமேயானால், பிற்காலத்தில் கண்பார்வை மங்குதல், கண் புரை போன்ற பல குறைபாடுகள் ஏற்படுவதற்கு வழிவகுக்கிறது. காரட்டை பச்சையாக சாப்பிடுபவர்களுக்கு இந்த பீட்டா – கரோட்டின் சத்து குறையாமல் முழுமையாக கிடைப்பதால் கண்களில் ஈரப்பதம் காக்கப்படுவதோடு, வயதான காலத்திலும் கண் பார்வைத்திறன் தெளிவாக இருக்க உதவுகிறது.
உடலின் முக்கிய உறுப்பான இதயம் பாதிப்புக்கு உள்ளாகாமல் இருக்க உடலில் கொலஸ்ட்ரால் அதிக சேராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கேரட்டில் இயற்கையாகவே உடலில் கொலஸ்ட்ரால் சேர்வதை தடுக்கும் ஆற்றல் அதிகமிருக்கிறது. கேரட்டை அதிகளவில் சாப்பிடுபவர்களுக்கு இதய ரத்த செல்கள் மற்றும் இரத்த நாளங்கள் வலுவடைகிறது. மேலும் உடலில் பித்த சுரப்பை அதிகரிக்கச் செய்து, கொழுப்புகளை கரைத்து, இதய நரம்புகளில் கொழுப்பு படியாமல் தடுத்து, இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்படாமல் காக்கிறது.