இது தெரியுமா ? அதிகமாகப் புளித்த தயிர் சாதம் சாப்பிடுவது நல்லதல்ல..!
நம்முடைய தினசரி வாழ்க்கையில் தயிரை ஏதாவது ஒரு வகையில் பயன்படுத்துவது மிகவும் நல்லதாகும். பாலைத் தயிராக மாற்றும் பாக்டீரியா குடலில் உருவாகும் நோய் கிருமி பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கிறது.
தயிரில் இருக்கும் பாக்டீரியா ஜீரண சக்தியை அதிகரிக்கும் நன்மை செய்யும் பாக்டீரியாவை உருவாக்குகிறது. வயிறு சரியில்லாத பொழுது வெறும் தயிர் கலந்த சாதம் மட்டுமாவது உணவாக உட்கொள்வது நல்லது.
அதிகமாக வயிற்றுபோக்கு ஏற்படும் பொழுது வெந்தயம் மற்றும் தயிர் 1 கப் சாப்பிட்டால் வயிற்று பொருமல் அடங்கும். வெண்ணெய் காய்ச்சி இறக்கும் பொழுது சிறிது தயிர் சேர்த்தால் நெய் வாசமாக இருக்கும்.
மதிய வேளை உணவுடன், தயிரை சாப்பிட்டு வந்தால் இதயத்துக்கு நல்லது. ஆனால், தயிரை இரவில் சாப்பிடுவதை தவிர்க்கலாம்.
மெனோபாஸ் பருவத்தை எட்டும் பெண்களுக்குத் தயிர் மிகவும் தேவையான உணவு. உடலுக்குத் தேவையான கால்சியம் தயிரில் அதிக அளவில் நிறைந்திருக்கிறது.
பொடுகை நீக்க தயிர் சிறந்த தீர்வாக விளங்கும். தலைச்சருமத்தின் மீது கொஞ்சம் தயிரை தடவினால் போதும், பொடுகு தொல்லை நீங்கும். பூஞ்சை எதிர்ப்பியாக தயிர் செயல்படுவதால், பொடுகை நீக்க இது உதவிடும்.
புளித்த தயிரை தலையில் தேய்த்து சுத்தம் செய்தால் தலைமுடி மிருதுவாக இருக்கும். தயிர் புளிக்காமல் 2-3 நாள் இருக்க தேங்காய் சிறிய துண்டாக்கி சேர்த்தால் புளிக்காது.
நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதில் தயிர் முக்கிய பங்கு வகிக்கிறது. ஈஸ்ட் தொற்றுக்களால் பாதிக்கப்பட்டுள்ள பெண்கள், இதனை உட்கொண்டால் அதிலிருந்து விடுபடலாம்.
தயிரில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் இருப்பது, நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. அதனால், அது பற்களுக்கும், எலும்புகளுக்கும் நல்லதாகும். எலும்புத்துளை நோய் போன்ற சில பிரச்சனைகளை தவிர்க்க வேண்டுமானால், சீரான முறையில் தயிரை உட்கொள்வது நல்லது.
மூல நோயால் அவதிப்படுபவர்கள் தயிரை பயன்படுத்தலாம். தயிர் சாதத்துடன் இஞ்சியை சேர்த்து சாப்பிட்டால் நல்ல பயனை அளிக்கும்.
தயிரில் நோய் எதிர்ப்பு சக்தி அதிக அளவில் இருப்பதால், கர்ப்பிணிப் பெண்கள் தயிரைத் தங்களின் உணவில் அடிக்கடி எடுத்துக்கொள்வது நல்லது.
கடுமையான அல்சரால் அவதிப்படுபவர்கள் தயிரை உட்கொண்டால், அல்சரில் இருந்து விரைவில் தப்பலாம். அல்சருக்குக் காரணமான கிருமிகள், தயிரில் உள்ள லேக்டிக் அமிலத்தால் அழிக்கப்படுகின்றன.
வயிற்றுப்போக்கை உண்டாக்கும் கெட்ட பாக்டீரியாவை அழிக்கும் ஆற்றல், தயிரில் உள்ள நல்ல பாக்டீரியாவுக்கு இருக்கிறது.
மலம் கழிக்கும்போது கடுமையான எரிச்சலை உணர்பவர்கள், தங்களின் அன்றாட உணவில் தயிரைச் சேர்த்துக்கொண்டால், உடனடி நிவாரணம் கிடைக்கும்.
தயிரில் நல்ல கொழுப்பு நிறைந்துள்ளது. இதனால், சர்க்கரை, ரத்த அழுத்தம், உடல் பருமன் போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும் கெட்ட கொழுப்பைக் கட்டுப்படுத்தி, உடல் நலத்தை மேம்படுத்தும்.
தயிரில் புரதங்கள், கால்சியம், வைட்டமின் பி6, பி12 போன்ற ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன என்பதால் இதை அனைவருமே சாப்பிடலாம்.
தயிரை இரவில் சாப்பிடக் கூடாது. தயிரை சுடவைத்து சாப்பிடக் கூடாது. சாப்பிட்டால் ஜ்வரம், தலைசுற்றல், சோகை, தோல் வியாதிகள், காமாலை ஏற்படும்..
தயிர் குளிர்ச்சி என்று சிலர் நினைக்கின்றனர். தயிரின் சுவை புளிப்பாக இருப்பதால் அது உடல் சூட்டை அதிகரிக்கச் செய்யும். பசி ஜீரண சக்தி இவைகளை வளர்க்கும் சக்தி உஷ்ணமான பொருளுக்குத்தான் இருக்கும்..முன்னிரவு கபத்தின் காலம். அப்போது தயிரைச் சாப்பிட்டால் கபதோஷம் அதிகரித்து அதனால் செரிமானக் குறைவு, மூச்சுத் திணறல், இருமல் முதலியவை ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
புளித்த தயிர் சாதத்தை நீங்கள் இரவில் சாப்பிடவேண்டாம்..அதையும் மீறி நீங்கள் இரவில் தயிரை சாப்பிட விரும்பினால் வரட்சியுள்ள, துவர்ப்புச் சுவைமிக்க, வாயுவை அதிகப்படுத்தாத பயத்தம் பருப்புக் கஞ்சி, சீரகம், பெருங்காயம், இந்துப்பு சேர்த்துச் சாப்பிட நல்லது..தயிருடன் தேன் சேர்த்துச் சாப்பிடுவது மிகவும் நல்லது. உட்புறக் குழாய்களில் அடைபட்டுப் போகும் நிலைமை இதன்மூலம் நீங்கலாம். நெல்லிக்காய் புளிப்பாக இருந்தாலும், அதிலுள்ள துவர்ப்பு, ரத்தத்தை புஷ்டியாக்குகிறது. தனித் தயிரால் ஏற்படும் பித்த சீற்றத்தை நெல்லிக்காயைச் சேர்ப்பதன் மூலம் தவிர்க்கலாம்.
சர்க்கரை தயிரின் புளிப்பை மாற்றி அதனுடைய சூட்டையும் குறைத்து விடுகிறது. அதனால் இச்சரக்குகளின் சேர்க்கையை தயிருடன் உணவாக ஏற்க நம் முன்னோர் வற்புறுத்தியுள்ளனர்..நீங்கள் காலை வேளையில் தயிர் சாதத்துடன் சிறிது தேன் கலந்து சாப்பிட கபம் வளராமல் கட்டுப்படுத்தலாம். உணவின் முடிவில் தயிர்சாதம் சாப்பிட்டால் நெல்லிக்காய் சேர்த்துச் சாப்பிடவும்..இனிப்பான தயிர் லஸ்ஸி வடிவில் விற்கப்படுகிறது. இதைப் பெருவாரியான மக்கள் விரும்பிச் சாப்பிடுகின்றனர். பசி உள்ள வேளையில் இதைச் சாப்பிடுவதே நல்லது. அதிகமாகப் புளித்த தயிர் சாதம் சாப்பிட நல்லதல்ல. ஜீரணம் தாமதமாகும். இரைப்பையில் புளிப்பு அதிகமாகி குடல் வேக்காளம், ஸ்தம்பித்த நிலை, தலைசுற்றல் போன்ற தொல்லைகள் ஏற்படலாம். அதனால் புளித்த தயிரை ஊறுகாய்களில் சேர்த்தோ, மோர்க்குழம்பு போன்றதாகக் காய்ச்சியோ அதிலுள்ள புளிப்பையும் பிசுபிசுப்பையும் குறைத்து உபயோகிப்பது நல்லது..