இது தெரியுமா ? பற்களின் ஈறு பிரச்னைக்கு 1ஸ்பூன் உப்பு, அரை ஸ்பூன் கடுகெண்ணெய் கலந்து…

விஷத்தை கட்டுப்படுத்தும் தற்கொலை எண்ணத்தோடு விஷம், பூச்சிமருந்து, அருந்தியவர்களுக்கு இரண்டுகிராம் கடுகை நீர்விட்டு அரைத்து கொடுத்தால் உடனடியாக வாந்தி ஏற்படும்.இதனால் விஷத்தின் தாக்கம் கட்டுப்படும்.

ஜீரணம் ஏற்படும்

கடுகு ஜீரணத்திற்கு உதவுகிறது. தினமும் காலையில் கடுகு, மிளகு, உப்பு ஆகிய மூன்றையும் சேர்த்து உட்கொள்ளவேண்டும். பின்னர் ஒருடம்ளர் வெந்நீர் அருந்த பித்தம், கபம் போன்றவற்றால் ஏற்படும் உபாதைகள் நீங்கும்.

மூட்டுவலி நீங்கும்

அடிபட்டு ரத்தம் ஏற்பட்ட இடத்தில் கடுகை அரைத்து பற்றுபோட ரத்தக்கட்டு மறையும். கை, கால் மூட்டுக்களில் வலி ஏற்பட்டால் கடுகு பற்று நிவாரணம் தரும். கை, கால்களில் சில்லிட்டு விரைத்து போனால் அந்த இடங்களில் கடுகை அரைத்து பற்று போட வெப்பம் உண்டாகி இயல்பு நிலை ஏற்படும்.

ஆஸ்துமா, தலைவலி நீங்கும்

தேனில் கடுகை அரைத்து கொடுக்க ஆஸ்துமா, கபம் குணமடையும். கடுகு, மஞ்சள் சம அளவு எடுத்து நல்லெண்ணெயில் காய்ச்சி வடிகட்டிக் காதில் சில சொட்டுக்கள் விட தலைவலிக்கு நிவாரணம் கிடைக்கும். வெந்நீரில் கடுகை ஊறவைத்து வடிகட்டி அருந்தினால் விக்கல் நீங்கும்.

ரத்த அழுத்தம் கட்டுப்படும்

கடுகில் உள்ள பி-காம்ளக்ஸ் வைட்டமின் போலேட்ஸ், நியாசின், தையாமின், ரிபோப்ளோவின், வைட்டமின் பி – 6 போன்றவை அதிகம் காணப்படுகின்றன. கடுகில் உள்ள ப்ளேவனாய்டுகள் உடலுக்கு அதிக நன்மை தருகிறது. கடுகு விதையில் இருந்து எடுக்கப்படும் சமையல் எண்ணெய் கொழுப்பை கட்டுப்படுத்துகிறது. இதனால் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது.

  • சுத்தமான கடுகு எண்ணெய் இருமல், சளிக்கு சிறந்தது. கொதிக்கும் நீரில் சில துளிகள் கடுகு எண்ணெய் விட்டு நீராவியை உள்ளுக்கு இழுக்க அதாவது ஆவி பிடிக்க இருமல், சளியை குறைக்கிறது.
  • சிறிது கற்பூரம் கலந்து மார்பில் தடவி மெதுவாக மசாஜ் செய்ய வெப்பத்தன்மை கொண்ட கடுகு எண்ணெயால் சளி வெளிவர ஆரம்பிக்கும்.
  • கடுகு எண்ணெய் பயன்படுத்துவதால் உடலில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். தலைமுடி நன்கு வளரும். சிறிது சூடு செய்து உடம்பில் தடவி மசாஜ் செய்ய உடலில் உள்ள தேவையில்லாத டாக்ஸின்ஸ் வியர்வையில் வெளியேறிவிடும்.
  • வறண்ட சருமம் உள்ளவர்கள் முகத்திற்கு ஃபேஸ் பேக் போடும்போது இதனை இரண்டு சொட்டு எடுத்து ஃபேஸ்பேக்கில் கலந்து போட, முகம் நன்கு பளபளப்பாக மின்னும்.
  • பற்களின் ஈறு பிரச்னைக்கு ஒரு ஸ்பூன் பொடி உப்பு, கடுகெண்ணெய் அரை ஸ்பூன் கலந்து பல் தேய்த்த பிறகு பற்களில் தடவி வர ஈறுகளில் இருந்து இரத்தம் வடிதல் போன்ற ஈறு பிரச்னைகள் சரியாகும்.
  • ஆயுர்வேதத்தில் கடுகு எண்ணெய் கபம் மற்றும் வாதத்தை குறைக்க பயன்படுகிறது. இது ஒரு இயற்கை வலி நிவாரணி.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *