இது தெரியுமா ? இந்த கீரையை பக்குவம் செய்து சாப்பிட்டு வருபவர்களுக்கு…
நமது உடலில் இருக்கும் முக்கியமான ஒரு உள்ளுறுப்பான ஈரல் பல்வேறு விதமான நச்சுக்கள் நமது உடலில் நுழைந்து தீங்கு ஏற்படுத்துவதை தடுக்கிறது. மூக்கிரட்டை கீரையை பக்குவம் செய்து சாப்பிட்டு வருபவர்களுக்கு அவர்களின் ஈரல் நன்கு பலம் பெறும். ஈரலில் ஏற்பட்டிருக்கும் எப்படிப்பட்ட குறைபாடுகளையும் போக்கும். பித்தநீர் சுரப்பை ஊக்குவிக்கும். உடலை பல்வேறு விதமான நோய்கள் தாக்குவதிலிருந்தது நம்மை பாதுகாக்கும்.
சிறுநீரகம்
ஒருவரின் உடலுக்கு இதயத்தின் நலம் எவ்வளவு முக்கியமானதோ அதே அளவுக்கு அந்த நபரின் சிறுநீரகங்களின் நலமும் முக்கியமானது. சிறுநீரகம் ஆரோக்கியமாக இருக்க மூக்கிரட்டை கீரை மற்றும் அதன் தண்டுகளையும் அடிக்கடி சாப்பிட்டு வருவது நல்லது. சிறுநீரகங்களில் கற்கள் உருவாவது, சிறுநீரக தொற்று நோய்கள் போன்றவற்றிற்கு சிறந்த நிவாரணமாக மூக்கிரட்டை கீரை விளங்குகிறது.
கண்கள்
எல்லோருக்கும் தெளிவான கண்பார்வை இருக்க வேண்டியது அவசியம். ஆனால் உண்மை நிலை அப்படி இருப்பதில்லை. பல்வேறு காரணங்களால் சிலருக்கு கண்பார்வையில் தெளிவின்மை மற்றும் இன்ன பிற குறைகள் ஏற்படுகின்றன. மூக்கிரட்டை கீரை செடியின் வேர்களை நன்கு காயவைத்து, அரைத்து பொடியாக்கி அதை இளம் சூடான நீரில் கலந்து, பருகி வந்தால் கண்கள் சம்பந்தமான அத்தனை குறைகளையும் நீக்கும்.
மலச்சிக்கல்
தினந்தோறும் மலம் கழிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. ஆனால் சிலருக்கு காலையில் மலம் கழிப்பதில் பிரச்சனை ஏற்படுகிறது. தினமும் மூக்கிரட்டை கீரையை கூட்டு போன்று செய்யும் போது அதில் மஞ்சள், சீரகம் போன்ற பொருட்களையும் சேர்த்து, பக்குவம் செய்து சாப்பிட்டு வருவதால் வயிற்றின் செரிமான சக்தியை மேம்படுத்தும். மலச்சிக்கல் பிரச்சனையையும் போக்கும்.
ரத்தம்
இன்றைய காலங்களில் நாம் சாப்பிடும் எந்த வகையான உணவு பொருட்களிலும் உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடிய ஏதேனும் ஒரு வகை நச்சு பொருள் இருக்கவே செய்கிறது. இத்தகைய உணவுகளை நாம் சாப்பிட பிறகு இந்த நச்சுகள் அனைத்தும் நமது ரத்தத்தில் சென்று சேர்ந்து விடுகிறது. மாதம் ஒருமுறை மூக்கிரட்டை கீரை மற்றும் அதன் வேர்களை காயவைத்து, பொடி செய்து நீரில் வேகவைத்து ஆற்றி குடித்து வந்தால் ரத்தத்தில் உள்ள நச்சுகள், கழிவுகள் எல்லாம் நீங்கி ரத்தம் சுத்தமாகும்.
மலட்டு தன்மை
மலட்டு தன்மை என்பது வயது வந்த ஆண் மற்றும் பெண் உடல்நலம் நன்றாக இருந்தும் சில காரணங்களால் குழந்தை பெற்று கொள்ள முடியாத நிலையே மலட்டு தன்மை என கருதப்படுகிறது. மூக்கிரட்டை கீரையை குறைந்த பட்சம் வாரத்திற்கு ஒரு முறையாவது பக்குவம் செய்து சாப்பிட்டு வந்தால் ஆண், பெண் இருபாலருக்கும் மலட்டு தன்மை நீங்கும்.
உடல் பருமன்
கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகம் உண்பதாலும், சாப்பிட உணவிற்கேற்ற உடலுழைப்பு இல்லாமையாலும் உடலின் தசைகளில் கொழுப்பு அதிகம் படிந்து உடல் பருமன் ஏற்படுகிறது. மூக்கிரட்டை கீரை மற்றும் தண்டுகளில் கொழுப்பை கரைக்கும் தன்மை அதிகம் உள்ளது. இவற்றை அடிக்கடி பக்குவம் செய்து சாப்பிடுவதால் உடல் பருமன் ஏற்படுவதை தடுக்க முடியும்.
சுவாச நோய்கள்
ஒருவகை கிருமியால் ஏற்படுவது தான் காச நோய். இது நமது நுரையீரலை பாதிக்கிறது. அதுபோல் ஒவ்வாமை மற்றும் காற்று மாசுபாடுகளால் ஏற்படும் ஆஸ்தமா நோயும் நுரையீரல்களை பாதித்து சுவாசிக்கும் போது சிரமத்தை கொடுக்கிறது. இந்த இரண்டு நோய்களுக்கும் மூக்கிரட்டை கீரை மற்றும் அதன் தண்டு, வேர்களை பக்குவம் செய்து சாப்பிட்டு வருவதன் மூலம் சிறந்த நிவாரணம் கிடைக்கும்.
புற்று நோய்
உடலில் இருக்கும் செல்களில் ஏற்படும் சில வகையான மாற்றங்களால் புற்று நோய் ஏற்படுகிறது. நவீன மருந்துகளை புற்று நோயை குணப்படுத்த சாப்பிட்டு வரும் காலங்களில், மூக்கிரட்டை கீரைகளையும் சாப்பிட்டு வருவது புற்று நோய் பாதிப்பு சீக்கிரம் குணமாக உதவும். இந்த கீரையில் புற்று நோய் செல்களை அளிக்கும் வேதிப்பொருள் அதிகம் உள்ளது.