இது தெரியுமா ? இலவச சோலார் மின்சார திட்டத்தில் முழு மானியம் கிடையாதாம்… 60 சதவீதம் மட்டுமே..!
அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு அன்று பிரதமர் மோடி ஓர் திட்டத்தை அறிவித்தார். அதன்படி, ரூ.75 ஆயிரம் கோடி மதிப்பில் பிரதம மந்திரி ரூப்டாப் சோலார் திட்டம்-இலவ மின்சாரத் திட்டம் என்று அறிவத்தார்.
இந்தத் திட்டத்தின் கீழ் 1-3 கிலோவாட் வரையுள்ள சோலார் சிஸ்டம் ஒரு கோடி வீடுகளுக்கு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனங்களுடன் இணைந்து இலவசமாக பொருத்தித் தரப்படும். இந்தத் திட்டத்தில் மத்திய அரசு ஒரு கோடி வீடுகளுக்கும் முழுமையாக மானியம் வழங்கும் என்று அறிவித்தார்.
திடீரென இந்தத் திட்டத்தில் மத்திய அரசு முழுமானியத்தை விலக்கி, 60 சதவீதமாகக் குறைத்துவிட்டது. அதாவது 60 சதவீதத்தை மத்திய அரசு செலுத்தும், மீதமுள்ள 40 சதவீதத் தொகையை சோலார் பேனல் பொருத்தும் வீடுகளின் உரிமையாளர்கள் செலுத்த வேண்டும்.
விருப்பமுள்ள பயனாளிகள், சொந்தவீடு வைத்திருப்போர் அல்லது வாடகை வீட்டில் குடியிருப்போர், இந்தத் திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம். மின்உற்பத்தி திறனைப் பொறுத்து, குறைந்தபட்சம் ரூ.20ஆயிரம்வரை செலுத்த வேண்டும். இந்தத் திட்டத்தின் கீழ் சோலார் பேனல் அமைக்கும் பயனாளிகளுக்கு வங்கிகள் சார்பில் வட்டியில்லாக் கடன், பிணையம் இல்லாக் கடனும் வழங்குகின்றன.
வீடுகளின் மாடியில் அல்லது மேற்கூரையில் சோலார் பேனல் அமைக்க தகுதியுடைய வீடுகள் மட்டுமே இந்தத் திட்டத்தில் சேர முடியும். ஏற்கெனவே மின் இணைப்பு பெற்றவர்களும் இதில் சேரலாம். நுகர்வோர் சோலார் மின்சாரத்தை பயன்படுத்தினாலும், நிகர மின் சப்ளைவுக்காக மின்சார வாரியத்துக்கு தனியாக கட்டணம் செலுத்த வேண்டும்.
மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையின் செயலாளர் பூபேந்திர பல்லா கூறுகையில் “ நுகர்வோரின் சக்திக்கு ஏற்ப, பொருளாதார வசதிக்கு ஏற்ப சோலார் உற்பத்தி திறன் கருவிகளை அமைக்கலாம். முதலீட்டுச் செலவு என்னவாக இருந்தாலும், அதை 3 முதல் 7 ஆண்டுகளில் எடுத்துவிடலாம். அதன்பின் லாபம்தான். இந்தத் திட்டத்தில் சேரும் பயனாளிகளின் வீடுகளில் ஸ்மார் மீட்டர் பொருத்தப்படும், சோலார் மூலம் மின்உற்பத்தி செய்யப்பட்டால் அது கணக்கில் சேரும்,
பயன்படுத்தப்படாத மின்சாரம் கிரிட்டுக்கு சென்று, மின்கட்டணம் குறையும். நுகர்வோரின் மின்நுகர்வைப் பொருத்து அவர்கள் காலப்போக்கில் பணமும் ஈட்ட முடியும், மின்கட்டணத்தை காலப்போக்கில் குறைக்க முடியும்” எனத் தெரிவித்தார்