இது தெரியுமா ? ஏழு ஜென்ம பாவம் விலக… ஒரு வில்வம் போதும்..!

ல்வத்தில், மகா வில்வம், கொடி வில்வம், கற்பூர வில்வம், சித்த வில்வம் என பல வகைகள் உள்ளன.குறிப்பாக, *மூன்று இதழ் கொண்ட வில்வ தளங்களையே பூஜைக்குப் பயன்படுத்து கிறோம்.

*ஐந்து மற்றும் ஏழு இதழ்கள் உள்ள வில்வ தளங்களும் உள்ளன.

 

பூஜைக்குப் பயன்படுத்துகிற வில்வத்தை, சூரியோதயத்துக்கு முன்னதாகவே பறித்து வைத்துக் கொள்வது உத்தமம்.வில்வத்துக்கு நிர்மால்யம் கிடையாது என்பதால், சிறிது தண்ணீரை வில்வத்தில் தெளித்துவிட்டு, பூஜைக்குப் பயன்படுத்தலாம்..

*தினமும் சிவனாருக்கு வில்வம் சார்த்தி வழிபடுவது சிறப்பு..*

மகா சிவராத்திரி நாளில், வில்வாஷ்டகம் பாராயணம் செய்து, வில்வம் சார்த்தி சிவனாரைத் தரிசித்தால்,ஏழேழு ஜென்மத்துப் பாவங்களும் விலகும் என்பது ஐதீகம்!

வில்வ வழிபாடும் பயன்களும் :::!!!*

 

சிவபெருமானுக்கு பிரியமான பத்திரம் வில்வமாகும். ஒரு வில்வத்தினால் பூசை செய்தால் அது லட்சம் ஸ்வர்ண புஷ;பத்துக்குச் சமமாகும்.

*வில்வத்தில் லக்ஷமி வசம் செய்கிறாள்.*

வடமொழியில் வில்வம் ஸ்ரீபலம். சிரேஷட, வில்வம். கந்தபல எனப் பல பெயர்களால் சுட்டப்படுகிறது.

மண்ணலகில் உள்ள ஆன்மாக்களின் பாவங்களைப் போக்கவென ஈசனின் இச்சா, கிரியா, ஞான வடிவமாய் ஈசனின் அருளால் பூமியில் தோன்றியது வில்வம்.

வில்வத்தின் பெருமையை சாஸ்திரங்கள் விளக்கமாகக் கூறுகின்றன.

*வில்வத்தின் மூன்று இலைகளும் சிவன் ஏந்தியுள்ள திரிசூலத்தின் வடிவத்தையும் இறைவனின் முக்குணங்களையும் குறிப்பனவாகவும் விளங்குகின்றன…!!

ஊழிக்காலத்தில் அனைத்தும் அழியும் என உணர்ந்த வேதங்கள் தாங்கள் அழியாதிருக்க என்னவழி என ஈசனிடம் கேட்க ஈசனும் திருவைகாவூர் திருத்தலத்தில் வில்வ மரத்தின் வடிவில் நின்று தவம் செய்யமாறு அருளினார்.

அதன்படி வேதங்களும் வில்வமரங்களாகத் தவமியற்றியதால் #திருவைகாவூர் என்ற ஊர் வில்வராண்யம் எனச் சிறப்புப் பெற்றது.

#சிவன் திருவாதிரை நட்சத்திரம்.

அது எரி நட்சத்திரங்களாக விளங்குவதால் சிவனின் சூட்டினைத் தணிக்க முன்னோர்கள் குளிர்மை பொருந்திய வில்வத்தை சாத்தி வழிபட்டுள்ளனர்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *