இது தெரியுமா ? பாலைத் தானமாகக் கொடுத்தால்…

கோவில்களுக்கு சில நிதி உதவி செய்து வந்தால், நீண்ட ஆயுள் ஆரோக்கியம் மற்றும் நல்ல மனைவி அழகு மற்றும் அறிவு உள்ள பிள்ளைகள் அமைவார்கள்.

 

தங்கத்தினை தானமாக கொடுப்பதால் நீண்ட நாளும் ஒரு போதும் குறைவு இல்லாத பொருளாதாரம் அதாவது லக்ஷ்மி கடாக்ஷம் கிட்டும்.

வெள்ளியைத் தானமாகக் கொடுத்தால், மனக் கவலைகள் அனைத்தும் விலகும். மனதில் தைரியமும், தன்னம்பிக்கையும் பெருகும்.

கருப்பு எள்ளினை தானமாக கொடுப்பதால் இறந்தவர்கள் என்று கூறப்படும் பித்ரு ஆசீர்வாதம், குழந்தை பேறு ஆகியவை உண்டாகும்.

நவ தானியத்தினை தானமாக கொடுத்தால், குறைவே இல்லாத உணவு கிடைக்கும்.

கோமாதா தானம் கொடுத்தால் தாயின் அன்பு நேர்மை தவறாத குடும்பம் என்ற பெரும் புகழும் கிடைக்கும்.

நீர் தானம் எனப்படுவது மனிதர்கள் மட்டும் அல்லது விலங்குகளின் தாகம், அதனுடைய பசியை தீர்த்ததால் நோய் நொடி இல்லாத வாழ்வு அமையும்.

நெய் தானமாக செய்தால் பிணி, பேய் போன்றவை நம்மை விட்டு அகலும்.

அரிசியை தானம் செய்தால் சகல பாவங்கள் போகும்.

தேங்காயை தானமாக கொடுத்தால் எடுத்த காரியத்தில் வெற்றி கிட்டும்.

ஆடையைத் தானமாகக் கொடுத்தால், நீண்ட ஆயுள் உடல் ஆரோக்கியத்துடன், நோய் நொடி இல்லாத வாழ்க்கை அமையும்.

தேனைத் தானமாகக் கொடுத்தால், புத்திர பாக்கியம் கிடைக்கம். பிள்ளைகளால், பேரும் புகழும் கிடைக்கும்.

தீபத்தைத் தானமாகக் கொடுத்தால், கண் பார்வைத் தெளிவாகும். பார்வை சார்ந்த கோளாறுகள் அனைத்தும் விலகும்.

பாலைத் தானமாகக் கொடுத்தால், துன்பங்கள் அனைத்தும் விலகி, இன்பமான வாழ்க்கை அமையும்.

தயிரைத் தானமாகக் கொடுத்தால், மகிழ்ச்சியான, வளமான வாழ்க்கை அமையும். வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைக்கும்.

பழங்களைத் தானமாகக் கொடுத்தால், சிறந்த கல்வி ஞானமும், கேள்வி ஞானமும் கிடைக்கும். அரசாங்கப் பதவிகள் கிடைக்கும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *