இது தெரியுமா ? நாயுருவி இலையை பருப்பு சேர்த்து சமைத்து சாதத்துடன் சாப்பிட்டு வந்தால்..

செடி, தரிசு நிலம், வேலியோரங்கள், காடு மலைகள் என எல்லா இடங்களிலுமே நாயுருவி வளரக்கூடும். இதன் இலை பார்க்க முட்டை வடிவம் போல் இருக்கும் தண்டிலிருந்து கதிர் போல் செல்லும் . அதில் அரிசி போல் முட்கள் ஒட்டிக்கொண்டிருக்கும்.

விதை ஒட்டும் தன்மை கொண்டதால் விலங்குகள், மனிதர்கள், சாதாரணமாக நமது ஆடை கூட அதன் மேல் படு போது ஒட்டிக்கொள்வதோடு அது விழும் இடங்களிலும் முளைத்து வளரும். இது பாறைகளிலும் துளித்து வளரும் என்பதால் இதை கல்லுருவி என்றும் அழைக்கப்படும்.

பல் பிரச்சனைகளும் நீங்கி பற்களும் பளிச் என்று இருக்க நாயுருவி இலைகள் பெரிதும் பயன்படும்.பற்களில் இருக்கும் நுண்கிருமிகள் நீங்கவும் பற்சொத்தை, பற்கூச்சம், ஈறுகளில் வலி, ஈறுகளில் வீக்கம் போன்றவற்றை போக்கி பற்களை வெண்மையாக ஆக்க உதவும் மூலிகையில் நாயுருவியும் முக்கியமானது.நாயுருவி வேரை எடுத்து சிறு குச்சிகளாக வெட்டி பல் துலக்க பயன்படுத்தலாம்.

பல் வலி இருக்கும் போது நாயுருவி வேருடன் கடுகு எண்ணெய் உப்பு சேர்த்து தேய்த்துவந்தால் வலி இருக்காது.

நாயுருவிச் செடியின் இலையையும், காராமணிப் பயிரையும் சம அளவு எடுத்து மைய அரைத்து நீர்க்கட்டு உள்ளவர்களிடையே தொப்புள் மீது பற்றுப் போட நீர் கட்டு நீங்கி குணமாகும். நாயுருவிச்செடியின் இலைகளை இடுத்துச் சாறு எடுத்து இரண்டு சொட்டு காதில் விட்டால் காதில் சீழ் வடிதல் நிற்கும்.

நாயுருவி இலையை அரைத்து நெல்லிக்காய் அளவு எருமைத் தயிரில் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் இரத்தமூலம் குணமாகும். மேக நோய், சிறுநீரில் வெள்ளை ஒழுக்கு, பேதி குணமாகும்.

சிறுநீர்த்தாரையில் எரிச்சல், சிறுநீர் தடை போன்ற பிரச்சனைகள் இருப்பவர்கள் நாயுருவி சமுல விழுதை அரைத்து சிறு நெல்லிக்காய் அளவு எடுத்து பாலுடன் கலந்து குடிக்க வேண்டும். 5 நாட்களில் நல்ல பலன் கிடைக்கும்.

மூலநோயால் அவதிப்படுபவர்கள் அதிலும் ரத்த மூலம் பிரச்சனை கொண்டிருப்பவர்கள் நாயுருவி இலையை பயன்படுத்தலாம். நாயுருவி இலையை அரைத்து பசையாக்கி சம அளவு நல்லெண்ணெய் கலந்து குழைத்து சாப்பிட வேண்டும். ஒரு வாரம் வரை தொடர்ந்து காலை மாலை வேளைகளில் சாப்பிட்டால் பலன் கிடைக்கும். 10 மில்லி அளவு எடுத்துகொண்டால் போதுமானது.

நாயுருவி இலையை பருப்பு சேர்த்து சமைத்து சாதத்துடன் கலந்து சாப்பிட்டு வந்தால் நுரையீரலில் இருக்கும் சளி வெளியேறும். இருமல் இருந்தாலும் அவை குறைய தொடங்கும். நாயுருவி வேரை உலர்த்தி பொடித்து சிட்டிகை அளவு பொடியுடன் சிட்டிகை அளவு மிளகுத்தூள் கலந்து தேனில் குழைத்து கொடுத்தால் இருமல் குணமாகும்.

காய்ச்சல் இருக்கும் போது நாயுருவி இலையோடு பனைவெல்லம், மிளகு, பூண்டு சேர்த்து அரைத்து சிறு நெல்லிக்காய் அளவு உள்ளுக்கு கொடுத்தால் காய்ச்சல் குறையும். வளரும் பிள்ளைகளுக்கு இதை கஷாயமாக காய்ச்சியும் வடிகட்டி கொடுக்கலாம்.

சரும பிரச்சனைகளை தீர்ப்பதில் நாயுருவி சிறப்பாக செயல்படும். நாயுருவி இலையை அம்மியில் வைத்து அரைத்து சொரி, சிரங்கு, படை போன்ற இடங்களில் தடவ வேண்டும். இரவு நேரத்தில் இதை தடவி, காலை வேளையில் கிருமி நாசினி சோப்பு கொண்டு கழுவி விட வேண்டும். பிறகு தேங்காயெண்ணெய் தடவி வர வேண்டும். தொடர்ந்து இதை செய்து வந்தால் சொரி,சிரங்கு மறையும்.

நாயுருவி வேர் எடுத்து நன்றாக நீரில் அலசி சுத்தம் செய்து பால்விட்டு இட்லி பானையில் அவிக்கவும். பிறகு அதை உலர்த்தி பொடியாக்கி வைக்கவும். தினமும் ஒரு கிராம் அளவு பசும்பாலில் கலந்து குடித்து வந்தால் மன நோய்கள் குறையும். மன அழுத்தத்தால் தூக்கமின்மை பிரச்சனை உண்டாகும். இந்த தூக்கமின்மையை விரட்டி ஆழ்ந்த தூக்கத்தை உண்டாக்கும். மனதில் படபடப்பு இருப்பவர்கள் அமைதி கொடுக்கும்.

நாயுருவி மிக்ச்சிறந்த மூலிகை,. ஆனால் மருத்துவத்துக்காக பயன்படுத்தும் போது இயற்கை மருத்துவர் அல்லது சித்த மருத்துவரின் ஆலோசனையோடு எடுத்துகொள்ள வேண்டும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *