இது தெரியுமா ? மதிய உணவில் கம்புடன் அரிசி சேர்த்து கொண்டால்…
கிராமப்புற மக்களின் வாழ்வாதார உணவு கம்பங்கூழ். சிறுதானிய உணவு வகைகளில் சிறப்பான கம்பங்களியை விருந்தோம்பல் நிகழ்வில் பந்தியில் இணை உணவாக பரிமாறப்படுகிறது. கம்பு என்று கூறினாலே நினைவுக்கு வருவது கம்பஞ்சோறும் கருவாட்டுக்குழம்பும்.
#பயன்கள்.
- கம்பு பல அத்தியாவசிய சத்துகள் நிறைந்தது.இதை தினந்தோறும் காலையில் கூழ் அல்லது களியாக சாப்பிட்டு வந்தால் உடலில் கெட்ட கொழுப்புகள் தங்குவதை தடுத்து, தசைகளுக்கு நல்ல இறுக்கத்தை தந்து, உடல் பலத்தை பெருக்குகிறது.
- நீரிழிவு நோயாளிகள் அரிசிக்கு மாற்றாக தினமும் கம்பு கூழ், களி, தோசை போன்றவற்றை செய்து சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு சிறந்தது. கம்பு இழந்த உடல்சக்திகளை மீட்டுத் தரும்.
- கம்பு நார்சத்து அதிகம் கொண்டதால் செரிமான கோளாறுகள் நீங்கி புண்கள் குணமாகும் வயிறு சம்பந்தமான குறைபாடுகளையும் இது நீக்கும்.
- உடல் பருமனால் அவதிப்படுபவர்கள் கம்மங்கூழ் மற்றும் கம்பங்களி உண்பதால் பசியை சரியான நேரத்தில் எடுக்கச் செய்து, உடல் எடையை குறைத்து விடும். குடல் புற்று ஏற்படுவது தடுக்கப்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை ஆரோக்கியமாக காக்கிறது.
- கம்பங்களி, ரத்தத்தில் உள்ள செல்களின் பிராண வாயு உபயோகிப்பை அதிகப்படுத்தி தோலில் சுருக்கங்கள் ஏற்படுவதை தடுத்து, தோல் பளப்பளபையும் இளமை தோற்றத்தையும் தருகிறது. மேலும் முதுமை அடைவதை தாமதப் படுத்துகிறது
- கம்பில் உள்ள நார்ச்சத்து வயிறு சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளையும் நீக்கும். கெட்ட கொழுப்புகளையும் கரைக்கிறது.
- தாய்மார்கள் தினமும் கம்பு கூழ் அல்லது களி உண்பதால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.
- பருவமடைந்த பெண்களுக்கு மாதவிடாய் சமயங்களில் அதிக ரத்த போக்கும், அடிவயிற்று வலியும் ஏற்படுகின்றன. இதற்கு இளம் சூடாக கம்பு கூழ் பருகிவர பிரச்சனைகள் தீரும்.
- கம்பு ரத்தத்தில் இறுக்கத்தன்மையை தளர்த்தி பிராணவாயு கிரகிப்பை அதிகப்படுத்துவதால் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதை தடுத்து, ரத்த ஓட்டத்தை சீராக்கும்.
- கம்பு ரத்தத்தில் இருக்கும் கழிவுகளை நீக்கி, ரத்தத்தை தூய்மைப்படுத்துகிறது.
- கெராட்டீன் எனும் புரதம் கம்பில் அதிகம் நிறைந்துள்ளதால் முடி கொட்டுவது குறைந்து நன்கு வளரும். தினமும் காலை வேளைகளில் கம்பு கூழை பருகி வந்தால் உடல் அதிகம் உஷ்ணம் குறையும்.
- கம்புடன் அரிசி சேர்த்து நன்கு குழையும்படி சோறாக்கி மதிய உணவில் சேர்த்துக் கொண்டால் குடல்புண், வயிற்றுப்புண், வாய்ப்புண் குணமாகும்.கண் நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுத்து பார்வையை தெளிவாகும் இதயத்தை வலுவாக்கும். சிறுநீரைப் பெருக்கும். நரம்புகளுக்கு புத்துணர்வைக் கொடுக்கும். உடலில் தேவையற்ற நீரை வெளியேற்றும். நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும். தாதுவை விருத்தி செய்யும். இளநரையைப் போக்கும்.