இது தெரியுமா ? தினமும் சிறிது சீரகத்தை மென்று அதனுடன் சிறிது வெண்ணீரை அருந்தினால்…

பலருக்கும் சமயங்களில் சாப்பிட்ட உடன் நெஞ்செரிச்சல் ஏற்படுகிறது. மேலும் சிறு குழந்தைகளுக்கு வாயு தொல்லை, வயிறு உப்பிபோதல் போன்ற பிரச்சனைகளும் உருவாகிறது.

இப்படியான சமயங்களில் பெருஞ்சீரகத்தை சிறிதளவு நீரில் போட்டு அதை நன்கு காய்ச்சி, சற்று இதமான சூட்டில் அந்நீரை வயிற்று கோளாறுகள் உள்ளவர்கள் பருகினால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.

குளிர்காலங்களில் சிலருக்கு ஜலதோஷம் பீடித்து கொண்டு சுவாசிப்பதில் பிரச்சனை ஏற்படுகிறது. ஆஸ்துமா நோய் உள்ளவர்கள் வானிலை மாறுபடும் போது சுவாசிப்பதில் சற்று சிரமத்தை உணர்கின்றனர். தினமும் சிறிது பெருஞ்சீரகத்தை மென்று தின்று, சிறிது வெண்ணீரை அருந்தினால் மேற்கண்ட சுவாச சம்பந்தமான பிரச்சனைகள் உடனடியாக தீரும்.

மாமிச உணவுகள் சாப்பிட்ட போதும், வேறு பல உடல்நல குறைபாடுகளாலும் சிலருக்கு வாய் துர்நாற்றம் ஏற்படுகிறது. இந்த பிரச்சனை இருப்பவர்கள் ஒவ்வொரு முறை உணவு சாப்பிட்டு முடித்த பின்பும் சிறிது பெருஞ்சீரகத்தை வாயில் போட்டு நன்கு மென்று சாப்பிட்டால் வாய் துர்நாற்றம் நீங்கும். பற்களில் கிருமிகளால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கும்.

சர்க்கரை வியாதி கொண்டவர்களுக்கு சிறந்த இயற்கை மருத்துவ உணவுப்பொருளாக பெருஞ்சீரகம் இருப்பதாக பல மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பெருஞ்சீரகங்களில் வைட்டமின் சி சக்தி அதிகம் உள்ளது. இது உடலின் ரத்த சர்க்கரை அளவை சரியான விகிதத்தில் இருக்கச் செய்வதில் பேருதவி புரிகிறது. எனவே நோயாளிகள் பெருஞ்சீரகத்தை அவ்வப்போது சாப்பிட்டு வருவது நல்லது.

நீர்கோர்ப்பு அல்லது நீர்கோர்த்துக்கொள்ளுதல் என்பது சிலருக்கு உடலில் இருக்கும் திசுக்களில் நீர் அதிகம் சேர்ந்து மிகுந்த துன்பத்தை கொடுக்கும். பெருஞ்சீரகம் உடனடி பலன் தராது என்றாலும், இந்த நீர்கோர்ப்பு பிரச்சனை உள்ளவர்கள், அவ்வப்போது பெருஞ்சீரகத்தை சாப்பிட்டு வந்தால் உடலில் சேர்ந்திருக்கும் அதிகளவு நீரை சிறுநீர் மூலமாக வெளியேற்றும் சக்தி கொண்டதாக பெருஞ்சீரகம் இருக்கிறது.

எளிதில் செரிமானம் ஆகாத உணவுகளைக் கூட செரிக்கச் செய்யும் தன்மை சோம்பிற்கு உண்டு. உணவுக்குப்பின் சிறிதளவு சோம்பை வாயில் போட்டு மென்று சாறை கொஞ்சம் கொஞ்சமாக இறக்கி வந்தால் உண்ட உணவு எளிதில் சீரணமாகும்.

உடலை பல வித நச்சுக்களின் பாதிப்பிலிருந்து நீக்கும் வேலையை நமது கல்லீரல் தொடர்ந்து செய்து வருகிறது. ஒரு நாளைக்கு ஒரு முறையாவது சிறிதளவு பெருஞ்சீரகங்களை நன்கு மென்று சாப்பிட்டு வருவதால் கல்லீரல் பலம் பெரும். அதில் இருக்கும் நச்சுகள் அனைத்தும் நீங்கி கல்லீரல், கணையம் போன்றவை தூய்மையாகும். கல்லீரல் புற்று ஏற்படுவதையும் தடுக்கும்.

சாப்பிட்ட உணவினால் குடலில் அலர்ஜி ஏற்பட்டு வாய்வுக்கள் சீற்றமடைகின்றன. இதனால் குடல் சுவர்கள் பாதிக்கப்பட்டு குடலில் புண்கள் ஏற்படுகின்றன. இந்தப் புண்கள் ஆற சோம்பை தினமும் உணவில் சேர்த்து வந்தால் குடல்புண் நாளடைவில் குணமடையும்.

பெண்களை மாதந்தோறும் பாடுபடுத்தும் ஒரு இயற்கை அமைப்பு மாதவிடாய் ஆகும். இக்காலத்தில் சில பெண்களுக்கு அடிவயிற்றில் வலி மற்றும் ரத்த போக்கும் அதிகரிக்கிறது. இக்காலங்களில் பெருஞ்சீரகத்தை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால், பெண்களின் ஈஸ்டரோஜென் ஹார்மோன்கள் நன்கு தூண்டப்பெற்று மாதவிடாய் கால வலி மற்றும் இதர குறைபாடுகளை நிவர்த்தி செய்கிறது.

சோம்பை இளம் வறுவலாக வறுத்து பொடிசெய்து அதனுடன் தேன் கலந்து காலை மாலை 1 டீஸ்பூன் அளவு சாப்பிட்டு வந்தால் ஈரல் நோய் குணமாகும்.

நரம்புகள் பாதிக்கப்பட்டவர்கள் பலருக்கும் ஆழ்ந்த தூக்கம் ஏற்படுவதில் பிரச்சனை உண்டாகிறது. பெருஞ்சீரகத்தில் மெக்னீசியம் சத்து அதிகம் நிரம்பி உள்ளது. இது நரம்புகளை வலுவாக்கி, ஆழ்ந்த தூக்கம் ஏற்பட செய்கிறது. ஒரு சிலருக்கு இருக்கும் தூக்கத்தில் நடக்கும் வியாதியையும் பெருஞ்சீரகம் குணப்படுத்துகிறது.

நாள்பட்ட வறண்ட இருமல், இரைப்பு இவைகளால் அவதிப்படுபவர்கள் சோம்பை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி அந்த நீரைப் பருகி வந்தால் நாள்பட்ட இரைப்பு, மூக்கில் நீர் வடிதல் குணமாகும்.

அதிக குளிர் சுரம் இருந்தால் சோம்பை நீரில் கொதிக்க வைத்து கொடுத்தால் குளிர் சுரம் கொஞ்சம் கொஞ்சமாக குறையும்.

பசியில்லாமல் அவதிப்படுபவர்கள் சோம்பை தனியாக மென்று சாப்பிட்டு வந்தால் நன்கு பசியெடுக்கும்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *