இது தெரியுமா ? 1.5 ஸ்பூன் அளவுக்கு முருங்கை இலை பவுடரை தொடர்ந்து மூன்று மாதங்கள் சாப்பிட்டு வந்தால்…
1. முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் நீங்கும்.
2.நோய் தொற்று பாதிப்புகளிலிருந்து உடலை பாதுகாப்பதில் முருங்கையிலை முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு ஆய்வில் 1.5 ஸ்பூன் அளவுக்கு முருங்கை இலை பவுடரை தொடர்ந்து மூன்று மாதங்கள் சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதை கண்டறிந்துள்ளனர். அதோடு நீரிழிவு நோய், இதய பாதிப்பு , அல்சைமர் போன்ற பிரச்னைகளும் இருக்காது என்கின்றனர்.
3. முருங்கையை சமைத்து சாப்பிட்டால் உடல் வலுப்பெரும்.
4. இரத்தம் சுத்தமாகும். முருங்கை கீரையில் அதிகமாக இரும்பு சத்து மற்றும் கால்சியம் உள்ளது.
5. உடல் மெலிவாக இருப்பவர்கள் வாரம் இரண்டு முறை முருங்கை கீரையை உண்டு வந்தால் உடல் தேறும்.
6. முருங்கை இலையில் விட்டமின் கிஙிசி கால்ஷியம், இரும்புச்சத்து நிறைந்துள்ளது.
7.முருங்கையிலையில் கால்சியம் சத்து நிறைவாக இருப்பதால் எலும்புகளின் உறுதித்தன்மை அதிகரிக்கிறது. அதோடு பாஸ்பரஸ்சும் இருப்பதால் கூடுதல் உறுதி அளிக்கிறது. தொடர்ந்து முருங்கை இலை சாப்பிட்டு வர எலும்பு புரை பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம்.
8. ஒரு கிண்ணம் முருங்கை சாறில் 9 முட்டை அல்லது அரைக்கிலோ வெண்ணை அல்லது 8 டம்ளர் பாலில் அடங்கி இருக்கும் விட்டமின் கி உள்ளது.
9.இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்தாலோ அல்லது அதிகரித்தாலோ நீரிழிவு நோய் உண்டாகிறது. இதனை சரி செய்ய முருங்கை இலையில் ஐசோதியோசயனேடுகள் (isothiocyanates) என்னும் பண்பு உள்ளது. இது இரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக்கி நீரிழிவு நோயிலிருந்து உங்களை பாதுகாக்கிறது.
10. வயிற்று புண்ணை ஆற்றும். அஜீரண கோளாறுகளை போக்கி மலச்சிக்கலை நீக்கும்.
11.முருங்கையிலையில் நார்ச்சத்தும் நிறைவாக இருப்பதால் ஜீரண சக்தியை அதிகரிக்கிறது. இதனால் வாயுத்தொல்லை இருக்காது. மலச்சிக்கல் இருக்காது. நெஞ்சு எரிச்சல், வயிற்று மந்தம், அல்சர் போன்ற பாதிப்புகளிலிருந்து உங்களை பாதுகாக்கும்.
12. இரத்தத்தில் கலந்து இருக்கும் தேவையில்லாத நீர்களை பிரித்து வெளியேற்றும்.
13. சிறுநீரை பெருக்குவதால் உயர் ரத்த அழுத்த நோய் இருப்பவர்கள் பக்க விளைவு ஏற்படுத்தும் மாத்திரைகளை தினமும் எடுத்து கொள்வதிலிருந்து தப்பிக்கலாம்.
14.உடல் பருமனால் பலரும் அவதிப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு முருங்கை இலை கைக்கொடுக்கும். கொழுப்பு அதிகரிப்பால் இதய நோய்களும் வரும் எனவே உங்கள் டயட் பட்டியலில் முருங்கை இலையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
15.கல்லீரல் இரத்ததை சுத்தீகரித்து மெட்டாபாலிசத்தை அளிக்கிறது. இந்த வேலையை சிறப்பாக செய்ய கல்லீரலில் நொதிகள் உருவாகும். அந்த நொதி உருவாக்கத்திற்கு முருங்கை இலை பெரிதும் உதவுகிறது. எனவே முருங்கை இலையை தினமும் சாப்பிடுங்கள்.
16. உடல் சூட்டை குறைக்கும், கண் பார்வை நரம்புகள் வலுப்பெறும். பித்தத்தை குறைக்கும்.
17. இளநரையை நீக்கும், உடல் சருமத்தை பளபளக்க செய்யும்.
18. தாய்ப்பாலை அதிகமாக ஊறவைப்பதால், குழந்தை பெற்றெடுத்த தாய்மார்கள் கண்டிப்பாக உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
முருங்கைக் கீரையை 1 கப் தண்ணீர் ஊற்றி, நன்றாக அரைத்து, வடிக்கட்டி வைத்து கொள்ள வேண்டும்.. அதில், அரை ஸ்பூன் எலுமிச்சம் சாறு + தேன் கலந்து வெறும்வயிற்றில் காலையில் குடித்து வந்தால், அவ்வளவும் உடல் எடை குறைக்க உதவும்.. குடலை சுத்தம் செய்து, ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. கலோரிகளை வேகமாக கரைத்து, உடல் பருமனை குறைக்க உதவுகிறது. ஒரு கைப்பிடி கீரையை, 1 டீஸ்பூன் நெய் விட்டு, வதக்கி, 5 பல் பூண்டு, 5 மிளகு, ஒரு ஸ்பூன் சீரகம் போன்றவற்றை பொடித்து, தினமும் மதிய உணவில் சேர்த்து சாப்பிட்டால், ஏகப்பட்ட உடல்பிரச்சனைகள் தீரும் என்கிறார்கள்.
முருங்கைக்கீரை பொரியலை நம் விருப்பம்போல் செய்யலாம்.. சிலர் பருப்பு சேர்த்து முருங்கை கீரை பொரியல் செய்வார்கள். சிலர் தேங்காய் துருவி சேர்ப்பார்கள்.. சிலர் தேங்காய்க்கு பதில் வேர்க்கடலையை உடைத்து தூவுவார்கள்.. சிலர் முட்டை ஊற்றி கிளறி இறக்குவார்கள்.. ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவையை தரும். ஒவ்வொன்றும் சத்துக்கள்தான்.