இது தெரியுமா ? வாரம் ஒருமுறை குழந்தைகளுக்கு வல்லாரை கீரையை சமைத்து கொடுத்தால்…

வல்லாரை கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நமைகளை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

நினைவாற்றல் அதிகரிக்கும்:
வல்லாரை கீரையை இந்தியாவில் பல ஆண்டுகளாக நாட்டு மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. நாட்டு மருந்துக்கடைகளில் வல்லாரை மாத்திரைகளும் கிடைக்கும். வல்லாரை கீரை என்றாலே அனைவர்க்கும் நினைவிற்கு வருவது ஞாபக சக்தியை அதிகரிக்கும் என்பதுதான். வாரம் ஒருமுறை வல்லாரை கீரையை சாப்பிடுவதால் மூளை செல்களின் வளர்ச்சி தூண்டி நினைவாற்றல் மற்றும் சிந்தனை திறனை அதிகரிக்க உதவுகிறது.

வயிற்று பிரச்சனை:
வல்லாரை கீரை வயிற்று பிரச்சனைகளை குணப்படுத்த உதவுவதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. செரிமான அமிலத்தை சீராக சுரக்கவும் உதவுகிறது. வல்லாரை கீரையை சாறாக பிழிந்து குடித்து வந்தால் வயிற்றில் புண்களை உண்டாக்கும் நுண்ணுயிரிகளை அழித்து வயிற்றுபுண் அதிகமாகாமல் தடுக்கிறது. வல்லாரை பொடியுடன் நாட்டுசர்க்கரை சேர்த்து தேனில் குழைத்து சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு, வயிறு வலி, வயிற்று கடுப்பு போன்ற பிரச்சனைகளுக்கு நிவாரணம் கிடைக்கும்.

பற்கள்:
பற்களில் ஏற்படும் கறையை போக்க வல்லாரை உதவுகிறது. வல்லாரை கீரையை நிழலில் காயவைத்து அரைத்து பொடியாக்கி தினமும் காலை, இரவு என இருவேளையும் பற்களை தேய்த்து வந்தால் பற்களில் இருக்கும் கறைகளை போக்கும். பற்கள் மற்றும் ஈறுகள் வலுப்படும்.

கண் பார்வை:
வல்லாரை கீரை கண் பார்வைத்திறன் பிரச்சனையை குணப்படுத்தும் திறன் கொண்டது. வாரம் ஒருமுறை குழந்தைகளுக்கு வல்லாரை கீரையை சமைத்து கொடுத்தால் கண்பார்வைத்திறன் மேம்படும். மேலும் பார்வைகுறைபாடு பிரச்சனை வராமல் தவிர்க்க முடியும்.

ஜுரம், காய்ச்சல்:
நமது உடலின் நோய் எதிர்ப்பு திறன் வலுவிழக்கும் போது ஜுரம், காய்ச்சல் போன்றவை ஏற்படுகின்றன. வல்லாரை இலையுடன் மிளகு, துளசி இலை, ஆகியவற்றை சம அளவு எடுத்து அரைத்து குண்டுமணி அளவு மாத்திரைகளாக உருட்டி நிழலில் காய வைத்து வெந்நீரில் கலந்து பருகி வந்தால் காய்ச்சல் குணமாகும்.

வல்லாரை சாப்பிடும் முறை:
வல்லாரைகீரையை சமைத்து சாப்பிடலாம் அல்லது வல்லாரைகீரையை பிழிந்து சாறு எடுத்து அதனுடன் தேன் சேர்த்து குடிக்கலாம் அல்லது வல்லாரை கீரையை சுத்தம் செய்து நிழலில் உலர்த்தி தினமும் காலையில் தேனுடன் கலந்து சாப்பிடலாம். சிறுவர்களுக்கு பாலில் கலந்து கொடுக்கலாம்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *