இது தெரியுமா ? தினமும் இளநீர் குடித்து வந்தால் உடலின்
இளநீர் குடிப்பது உடலில் உள்ள நீர்ச்சத்தை தக்க வைத்துக் கொள்ளவும், உடல் எடையை பராமரிக்கவும், செரிமானம் மற்றும் சரும ஆரோக்கியத்தை பராமரிக்கவும் பயன் உள்ளதாக இருக்கும்.இளநீர் தீமைகள் : உடலுக்கு புத்துணர்ச்சி தரும் இயற்கை பானங்களை பற்றி பேசுகையில், நம் நினைவுக்கு முதலில் வருவது இளநீர் தான். இதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உடலுக்கு தேவையான ஆற்றலை கொடுப்பதுடன், ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கின்றன.
தினமும் இளநீர் குடித்து வந்தால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி வலுப்பெறும். மேலும் சிறுநீரக கற்கள் உருவாவதற்கான வாய்ப்பையும் குறைக்கலாம். இளநீர் குடல் இயக்கத்தை எளிதாக்கி, ஆரோக்கியத்திற்கு பல அற்புத நன்மைகளை தருகிறது. இருப்பினும் ஒரு சிலருக்கு இளநீர் ஆபத்தாக மாறலாம். இளநீர் குடிப்பதால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க, அதன் பக்க விளைவுகளை பற்றியும் நாம் நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டும்.
உடல் சூட்டைக் குறைப்பதில் முக்கியப் பங்காற்றுவது இளநீர், பல தாதுச்சத்துகளையும் ஊட்டச்சத்துகளையும் கொண்டிருப்பதாக மருத்துவம் கூறுகிறது. இளநீர், கொழுப்பைக் கரைத்து உடல் பருமனைக் குறைக்கும்
இரண்டாம் உலகப் போரின்போது காயம்பட்டவர்களுக்கு சலைனுக்குப் பதில் இளநீர் செலுத்தினார்கள் என்பது வரலாறு. அந்தளவுக்கு அற்புதமான இளநீர், தாய்ப்பாலைப்போல மிகவும் சுத்தமானது.
பதப்படுத்தப்பட்ட குளிர்பானங்களில் நார்ச்சத்து கிடையாது. ஆனால், ஒரு டம்ளர் இளநீரில் சுமார் மூன்று கிராம் நார்ச்சத்து இருக்கிறது. இந்த நார்ச்சத்து, உணவு சட்டென்று குடலில் உறிஞ்சப்படுவதைத் தவிர்த்து, உணவு மிக மெதுவாகச் செரிமானமாகி உறிஞ்ச உதவும்.எனவே, குறைந்த இடைவெளியில் பசி ஏற்படுவதையும் தவிர்க்கும். வயிற்றில் உப்புசத்தை ஏற்படுத்தாமல், வயிற்றை நிரப்புவதில் இளநீருக்கு நிகர் ஏதுமில்லை.
இளநீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்:
இளநீரில் உள்ள வழுக்கை, உடலின் வறட்சித் தன்மையைப் போக்கும். அல்சர் பாதிப்புள்ளவர்களுக்கு மருந்தாகப் பயன்படும். நாக்கில் ஏற்படும் வறட்சியைச் சரி செய்யும். உடல்சூட்டைக் கட்டுப்படுத்தி மலச்சிக்கல், வயிற்றுப்புண், வாய்ப்புண் போன்ற பாதிப்புகளைச் சரி செய்யும்.
இளநீர் உங்கள் உடலில் உள்ள பிஎச் அளவை சமன் செய்கிறது மற்றும் அமிலத்தன்மை மற்றும் நெஞ்செரிச்சலுக்கு உதவுகிறது.
இளநீரில் அமினோ அமிலங்கள், என்சைம்கள், நார்சத்துக்கள் ,வைட்டமின் சி மற்றும் பொட்டாசியம் போன்ற கனிமங்கள் அதிக அளவு இருப்பதால், வயிற்றுப் போக்கினால் ஏற்படும் எலெக்ட்ரோலைட் குறைபாட்டை நீக்க உதவும்.
குழந்தைகளுக்கு கொடுத்தால் இதிலுள்ள சத்துக்கள் எலும்புகளுக்கும், உறுப்புகளுக்கும் வலுகொடுக்கும். உடல் வளர்ச்சி சீராக இருக்கும். குழந்தைகளுக்கு உண்டாகும் நோய்களைத் தடுத்து உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
அம்மை நோயின் தாக்கம் கண்டவர்கள் இளநீர் அருந்தினால் நோயின் வீரியம் குறையும். நாவறட்சி, தொண்டைவலி நீங்கும். சிறுநீர் பெருக்கியாகவும், சிறுநீரகம் சீராக இயங்கவும், இளநீர் உதவுகிறது. சிறுநீரக கல்லடைப்பு ஏற்படாமல் தடுக்கிறது.
இளநீரில் குறைந்த அளவே கொழுப்பு இருக்கிறது. எனவே அதனை பருகும் போது வயிறு நிறைந்து போகும். இதனால் அதிக அளவு தேவையில்லாத உணவுகளை எடுத்துக்கொள்வது தவிர்க்கப்பட்டு உடல் எடையை குறைக்க உதவுகிறது.
சர்க்கரை நோயாளிகளுக்கு தேவையான ஊட்டச் சத்துக்கள் இளநீரில் அதிகம் உள்ளது. இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைக்க இது உதவுகிறது.
உடல் வறட்சி பிரச்சனைக்கு இளநீரை நரம்பின் வழியாக உடலுக்குள் செலுத்தலாம். எந்த மருத்துவ வசதியும் இல்லாத இடத்தில் வசிக்கும் நோயளிகளுக்குப் இப் பிரச்சினை ஏற்பட்டால் தற்காலிகமாக இந்த முறையைக் பயன்படுத்தலாம்.
இளநீரில் வளமான அளவு பொட்டாசியம் இருப்பதால் அது கூடுதல் இரத்த அழுத்தம் மற்றும் வாதத்திற்கு நல்ல மருந்தாகும்.
பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற கனிமங்கள் இளநீரில் அதிகம் இருப்பதால், சிறுநீரகத்தில் கற்கள் வளர்வதை தடுக்கிறது.
பருக்கள்,புள்ளிகள்,சுருக்கங்கள் மற்றும் படை ஏற்பட்ட சருமங்களில் இரவில் இளநீரை தடவி காலையில் நன்கு கழுவ வேண்டும்.இதை தொடர்ச்சியாக மூன்று வாரங்கள் செய்தால் தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
நீரிழப்பு மற்றும் தலைவலி போன்றவற்றுக்கு இளநீர் சிறந்த நிவாரணிகளில் ஒன்றாகும். இது உங்கள் உடலில் இழந்த ஊட்டச்சத்துக்களை நிரப்புகிறது.
இளநீரில் பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்துள்ளன. இதை அதிகமாக எடுத்துக் கொள்ளும் பொழுது இரத்தத்தில் பொட்டாசியம் அளவுகள் அதிகரிக்கலாம். சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் அல்லது ஏதேனும் மருத்துவ சிகிச்சையை எடுத்துக் கொள்பவர்கள் இளநீரை உணவு முறையில் சேர்த்துக் கொள்வதற்கு முன் மருத்துவரின் ஆலோசனையை பெறுவது நல்லது.