இது தெரியுமா ? வெண்டைக்காயை ஊற வைத்த தண்ணிய குடித்து வந்தால்…
வெண்டைக்காய் நீர் என்பது வெண்டைக்காயை வேக வைத்தோ அல்லது அரைத்து எடுக்கும் நீரோ கிடையாது. வெண்டைக்காயை ஊற வைத்திடும் நீர் தான் அது.
முதலில் நான்கு வெண்டைக்காய்களை எடுத்துக்கொள்ளுங்கள், அதனை சுத்தமாக கழுவி தலைப்பகுதியையும் வால் பகுதியையும் வெட்டிவிடுங்கள். பின்னர் அதனை நீள வாக்கில் வெட்டி, சற்று பெரிய பாத்திரத்தில் போட்டு வெண்டைக்காய் முழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்ற வேண்டும்.
குறைந்தது எட்டு மணி நேரம் வரை ஊற வேண்டும் என்பதால் முந்தைய நாள் இரவு ஊறவைத்துவிட்டு மறுநாள் காலையில் அந்த நீரை குடிக்கலாம்.
ரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த நீர் மிகச்சிறந்த பலன்களை தரும். இந்த நீரை குடிப்பதனால் ரத்த செல்கள் வேகமாக உற்பத்தி ஆக உதவுகிறது. இதனால் ரத்த சோகை கட்டுப்படும்.தொடர் இருமல், வறட்டு இருமல் இருப்பவர்கள் தொடர்ந்து வெண்டைக்காய் ஊற வைத்த நீரை குடித்து வர நல்ல பலன் கிடைக்கும்.
வெண்டைக்காயில் நிறைய இன்ஸுலின் இருக்கிறது. இது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. அதோடு வெண்டைக்காய் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையை கட்டுப்படுத்தவும் செய்கிறது.
வயிற்றுப்போக்கினால் உடலில் இருந்து அதிகப்படியான மினரல்கள் வெளியாகிடும். அதனை சரிகட்டவும் வயிற்றுப்போக்கினை நிறுத்தவும் வெண்டைக்காய் சாறினை குடிக்கலாம்.
வெண்டைக்காய் ஊற வைத்த தண்ணீரை தொடர்ந்து எடுத்து வர அது நம் உடலில் உள்ள கொலஸ்ட்ராலை குறைத்திடும். அதோடு நம் இதயத்தையும் பாதுகாக்கும்
வெண்டைக்காயில் அதிகப்படியான விட்டமின் சி மற்றும் பல்வேறு ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் இருக்கிறது. இதனை தொடர்ந்து எடுத்து வர நம் உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்திடும்.
வெண்டைக்காய் ஊற வைத்த நீரை தினமும் காலையில் பருகுவதால் ஆரோக்கியமான சருமத்தை பெறலாம்.
வெண்டைக்காய் சாறினை குடித்து வர பசியுணர்வு கட்டுப்படுத்தப்படும். இதில் இருக்கும் நார்ச்சத்து நிறைவான உணர்வைத்தரும்.
வெண்டைக்காய் நீரை தொடர்ந்து குடித்து வர புற்று நோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கும். வெண்டைக்காயில் இருக்கும் லெக்டீன் புற்று நோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கிறது.