இது தெரியுமா ? தூதுவளைக் கீரை சமையல் 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால்…
தூதுவளைக் கீரையை சமையல் செய்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு வலு கொடுப்பதுடன் ஆண்மை சக்தியையும் அதிகரிக்கும்.
தூதுவளையில் கால்சியம் சத்து அதிகம் நிறைந்துள்ளதால் எலும்பையும், பற்களையும் பலப்படுத்தும். அதனால் தூதுவளை கீரையை பருப்புடன் சேர்த்து சமைத்து நெய் சேர்த்து 48 நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும்.
உணவில் அடிக்கடி தூதுவளையை சேர்த்துவந்தால் தொண்டை புற்றுநோய், கருப்பை வாய்புற்றுநோய் வராமல் தடுக்கும். அதிகம் மதுகுடிப்பவர்களும் புகைப்பிடிப்பவர்களும் அதன் பாதிப்புகளை வராமல் தற்காத்துகொள்ள தூதுவளையை அடிக்கடி உணவில் சேர்த்துவரவேண்டும்.
நெஞ்சு சளி, இருமல் விடாமல் இருந்தால் தூதுவளைக்கீரையுடன் சின்ன வெங்காயம் சேர்த்து நசுக்கி அதன் சாறை கொதிக்கவைத்து மிளகுத்தூள், உப்பு சேர்த்து அருந்தினால் சட்டென்று இருமல் நிற்கும். நெஞ்சு சளி கரையும். சாறுக்கு பதிலாக தூதுவளைக்கீரையை காயவைத்து பொடித்து தினமும் இரவு தூங்குவதற்கு முன்பு சூடான பாலில் ஒரு டீஸ்பூன் பாலை கலந்து குடித்துவந்தால் தொண்டை கரகரப்பு, தொண்டை எரிச்சல், மார்பு சளி, மூக்கடைப்பு போன்றவை நிவாரணமடையும்.
வாத, பித்தத்தால் ஏற்படும் நோய்களை குணப்படுத்த மிளகு கற்பம் 48 நாட்கள்சாப்பிட்டபின், தூதுவளைக் கீரை சமையல் 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் வாத,பித்த நோய் தீரும்.
வயிறு மந்தம் வயிற்று கோளாறுகள் இருப்பவர்கள் வாயுப்பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் தினமும் காலை அரை டம்ளர் வெந்நீரில் ஒரு டீஸ்பூன் தூதுவளைப்பொடி கலந்து குடித்துவந்தால் வயிறு பிரச்சனை குணமாகும்.
தூதுவளையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி வைத்துக்கொண்டு காலை, மாலை எனஇருவேளையும் தேனில் கலந்து கற்ப முறையாக பத்தியம் கொண்டு ஒரு மண்டலம்சாப்பிட்டு வந்தால் இருமல், இளைப்பு நீங்கி உடல் வலுவடையும். உடலுக்குநோய் எதிர்ப்பு சக்தி கொடுக்கும். ஜீரண சக்தியைத் தூண்டும். தாதுவைபலப்படுத்தும்.
தூதுவளை கீரையை நிழலில் உலர்த்தி பொடித்து வைத்துகொண்டு தினமும் இரண்டு முறை தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் இருமல், இளைப்பு பிரச்சனைகள் நீங்கும். உடல் பலவீனமாக இருப்பவர்கள் உடலில் எதிர்ப்புசக்தி குறைந்தவர்கள் தூதுவளை கீரை பொடியை ஒரு மண்டலம் எடுத்துவந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
தூதுவளையை நன்கு அரைத்து அடை போல் செய்து சாப்பிட்டு வந்தால் தலையில் உள்ள கபம் குறையும். இந்திரியம் அதிகமாகி ஆண்மையைக் கூட்டும்.
தொண்டையில் சதை டான்சில்ஸ் என்னும் பிரச்சனை கொண்டிருப்பவர்கள் ஆரம்பகட்டத்தில் இதை கண்டறிந்தால் எளிதில் குணப்படுத்தலாம். கையளவு தூதுவளை இலையை பறித்து இதனுடன் அதிமதுரம், சித்தரத்தை, சுக்கு எடுத்து அனைத்தையும் பொடித்து நீர்விட்டு காய்ச்சவும். நீர் 3 பங்காக சுண்டிய பிறகு அதை எடுத்து கண்ணாடி பாட்டிலில் ஊற்றி வைக்கவும். இதை தினம்மூன்று வேளை 50 மிலி அளவு குடித்துவந்தால் தொண்டைச்சதை நிச்சயமாக குறையும். படிப்படியாக கரைந்துவரும்.
மூக்கில் நீர் வடிதல், வாயில் அதிக நீர் சுரப்பு, பல் ஈறுகளில் நீர்சுரத்தல், சூலை நீர், போன்றவற்றிற்கு தூதுவளை கீரை சிறந்த மருந்து.
தூதுவளை காயை சமைத்தோ, அல்லது வற்றல், ஊறுகாய் செய்து ஒருமண்டலம் கற்பமுறைப்படி உண்டு வந்தால் கண்ணில் உண்டான பித்த நீர் அதிகரிப்பு, கண் நோய்நீங்கும்.
கல்லீரல் மற்றும் நுரையீரல் கோளாறு உள்ளவர்கள் தூதுவளை பூக்களை தனியாக பிரித்து நிழலில் உலர்த்தி பொடித்துவைத்துகொள்ள வேண்டும். தினமும் காலையில் ஒரு டீஸ்பூன் பொடியை தேனில் குழைத்து சாப்பிட்டுவந்தால் கல்லீரல் மற்றும் நுரையீரல் நோய்களின் தாக்கம் குறையும். படிப்படியாக அவை பலம் பெறும். மருந்துதயாரிப்பிலும் கூட தூதுவளைக்கீரையின் பூக்களும் விதைகளும் பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மூச்சுப்பாதையில் இருக்கும் தொற்றுகளை அழித்து சுவாசத்தை சீராக்க தூதுவளை பயன்படுகிறது.
தூதுவளைக்கீரையில் பழங்கள் சிவப்பு நிறத்தில் இருக்கும். பழங்கள் அதிகம் கிடைக்கும் போது அதை நிழலில் உலர்த்தி பொடித்துவைத்துகொள்ள வேண்டும். குழந்தைகள் மலம் கழிப்பதில் பிரச்சனை இருந்தால் கால் டீஸ்பூன் அளவு எடுத்து பாலில் குழைத்து கொடுக்கலாம். பெரியவர்கள் அப்படியே தண்ணீரில் கலந்து குடிக்கலாம். ஒரு வயது குழந்தை முதல் இதை கொடுக்கலாம். இப்படி உணவாக செய்தும் அல்லது பொடியாக்கியும் உள்ளுக்குள் எடுத்துகொண்டால் பலவித நன்மைகளை உடல் பெற்றுவிடும்.
தூதுவளை இலையை அப்படியே சாறு பிழிந்து சாப்பிட முடியாதவர்கள். பொடியை பயன்படுத்த பிடிக்காதவர்கள் சமைத்து சாப்பிடலாம். கீரையை போன்ற ருசியை கொடுக்கவல்லது இது. இப்போதுதான் இதை மருந்தாக்கி எடுத்துகொள்கிறோம். முன்னோர்கள் காலத்தில் சளி, இருமல் காய்ச்சல் வந்தால் தூதுவளையை ரசம் செய்து குடிப்பார்கள். உடலில் கபத்தை கரைக்க தூதுவளையை துவையலாக்கி சாப்பிடுவார்கள். வளரும் குழந்தைகளுக்கு சிறுவயது முதல் தூதுவளையை கொடுத்து வந்தால் நினைவாற்றல் அதிகமாகும். தூதுவளையை அரைத்து தோசைமாவில் கலந்து தோசையாகவும் செய்யலாம்.