இது தெரியுமா ? மதிய உணவுக்கு ஒன்றரை மணி நேரம் கழித்து கொய்யாப்பழத்தை சாப்பிட்டு வந்தால்…
கொய்யாவின் பயன்பாடு பல வகையான உடல்நலப் பிரச்சனைகளை நீக்குவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது, குறிப்பாக வயிறு தொடர்பான பிரச்சனைகளை நீக்குவதில் கொய்யா நல்ல பங்கு வகிக்கிறது.
கொய்யாவில் நார்ச்சத்து நிறைவாக உள்ளது. இதனால் செரிமானம், வயிற்றுக்கோளாறு பிரச்சனைகளுக்கு கொய்யாவை சாப்பிடலாம். சிலருக்கு கொய்யாவை விதையுடன் சாப்பிட்டால் வயிறு வலி வரலாம். அவர்கள் விதையை எடுத்துவிட்டு சாப்பிட வேண்டும். அதேசமயம் அளவுக்கு அதிகமாக கொய்யா சாப்பிட்டாலும் வயிறு வலி வரலாம்.
நார்ச்சத்து நிறைந்த கொய்யா மலச்சிக்கல் பிரச்சனையை நீக்க உதவுகிறது. அதோடு செரிமானமும் மேம்படும். எனவேதான் மலச்சிக்கல் இருக்கும் போது கொய்யாவை சாப்பிட பல மருத்துவர்களும் பரிந்துரைக்கின்றனர்.
கொய்யாவை சாப்பிட்டால் வாயு மற்றும் அசிடிட்டி பிரச்சனை தீரும். ஏனெனில் கொய்யாவும் அமில தன்மை கொண்ட பழம். எனவே, கொய்யாவை உண்பதன் மூலம் வாயுவை வெளியேற்றுவது எளிது.
கொய்யாப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் மூலத்திற்கு நல்லது. உண்மையில், மூலத்திற்கு மிகப்பெரிய காரணம் மலச்சிக்கல். கொய்யா சாப்பிடுவதால் மலச்சிக்கலும் நீங்கும். அதோடு மூலமும் சரியாகலாம்.
1. முகத்திற்குப் பொலிவையும், அழகையும் தருகிறது.
2. முதுமைத் தோற்றத்தைப் போக்கி, இளமைத் தோற்றத்தைத் தருகிறது.
3. கல்லீரல், மண்ணீரல் போன்றவற்றில் ஏற்படும் புண்ணை ஆற்றிவிடுகிறது.
4. புகைப்பழக்கம் உடையவர்களின் நுரை யீரல் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கும். இவர்கள் கொய்யாப்பழத்தைச் சாப்பிட்டால் நுரையீரல் கோளாறு நீங்கி சுகவாழ்வு பெறலாம்.
5. இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பு, ரத்த ஓட்டம் போன்றவற்றை கொய்யாப் பழம் சீர்படுத்துகிறது. (இரத்தக் குழாயில் 80% சதவிகிதம் , 70% சதவிகிதம் அடைப்பு இருந்தால் அவைகளைப் போக்கிவிடும் என்று கூறமுடியாது. 5 லிருந்து 10% வரை அடைப்புகளைப் போக்கலாம்.
6. கொய்யாப்பழம் நோய் எதிர்ப்பு சக்தியைத் தருகிறது.
7. ஜீரணக் கோளாறுகளைக் குணப்படுத்து கிறது.
8. மதுப் பழக்கமுடையோர், தொடர்ச்சியாகக் கொய்யாப்பழம் சாப்பிட்டு வந்தால் மது அருந்தும் ஆசை அக ன்றுவிடும்.
9. அல்சரைக் கொய்யாப்பழம் குணப்படுத்திவிடும்.
10. கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் இருமல், தொண்டை மற்றும் இதய சம்பந்தமான நோய்களுக்குத் தீர்வு தருகிறது
மாலை அல்லது இரவில் கொய்யா சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்கின்றனர். கொய்யாவை இரவில் சாப்பிடுவதால், அதன் செரிமானமும் சரியாக நடைபெறாது. கொய்யாவை பகல் மற்றும் மதியம் மட்டுமே உட்கொள்ள வேண்டும். மதிய உணவுக்கு ஒன்றரை மணி நேரம் கழித்து கொய்யாப்பழத்தை உட்கொள்வதால் அனைத்து வயிற்றுப் பிரச்சனைகளிலிருந்தும் நிவாரணம் கிடைக்கும்.
கொய்யாவிற்கு அலர்ஜி இருக்கும் நபர்கள், கர்ப்பமாக இருப்பவர்கள். தாய்ப்பால் கொடுப்பவர்கள் அல்லது கீழ்காணும் உடல்நல குறைபாடுகள் இருப்பவர் கொய்யா சாப்பிடுவதை தவிர்த்து கொள்ள வேண்டும்.
கொய்யாவிற்கு அலர்ஜி இருக்கும் நபர்கள், கர்ப்பமாக இருப்பவர்கள். தாய்ப்பால் கொடுப்பவர்கள் அல்லது கீழ்காணும் உடல்நல குறைபாடுகள் இருப்பவர் கொய்யா சாப்பிடுவதை தவிர்த்து கொள்ள வேண்டும்.
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் விரும்பும் பழங்களில் கொய்யாவும் ஒன்று. ஆனால் இதனை டயட்டில் சேர்த்துக் கொண்டால், ரத்த சர்க்கரை அளவை தவறாமல் கண்காணிக்க வேண்டும். சுமார் 100 கிராம் கொய்யாவில் 9 கிராம் இயற்கை சர்க்கரை உள்ளது. எனவே, இதனை அதிகமாக சாப்பிடுவது ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கலாம். அதே போல் நீரிழிவிற்காக மருந்து எடுத்து கொள்பவர்கள் கொய்யா இலைச்சாற்றை எச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டும்.
ஒருவர் ஏதேனும் அறுவை சிகிச்சை செய்து கொள்ள திட்டமிட்டிருந்தால் குறைந்தது அதற்கு 2 வாரங்களுக்கு முன் கொய்யாவை மருந்தாக அல்லது சப்ளிமென்ட்டாக சாப்பிடுவதை தவிர்த்து கொள்ள வேண்டும். ஏனெனில் கொய்யா ரத்த சர்க்கரை அளவை குறைக்கும் என்பதோடு ரத்தப்போக்கு அபாயத்தை அதிகரிக்கும்.