இது தெரியுமா ? கோடைக்காலத்தில் நாவல் பழம் சாப்பிட்டு வந்தால்…

நாவல் பழம் பயன்கள் :

நாவல்பழம் அதிகம் கால்சியம் உள்ளது தினமும் நாவல்பழத்தை சாப்பிட்டால் எலும்பு பலமாக இருக்கும்.

வைட்டமின் பி1, பி2, பி5 ஆகிய சத்துக்கள் அதிகமாக இருக்கிறது ஆகையால் உடலுக்கு அதிக ஊட்டச்சத்தை அளிக்கிறது.

தோள்களில் ஏற்படும் சுருக்கங்களைத் தடுக்கும்.

வாய் முதல் குடல் வரை உள்ள புண்களை குணப்படுத்தும்.

பசியைத் தூண்டக்கூடியது.

கல்லீரல் மற்றும் மண்ணீரல் நோய்களை தடுக்கும் அரும் மருந்து.

நாவல்பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடென்ட் அதிகமாக உள்ளது.

நாவல்பழத்தை சாப்பிடுவதால் ரத்தம் விருத்தி அடைகிறது.

வெண்புள்ளி, அரிப்பு நோய்களை விரைவாக சரிசெய்யும் தன்மை நாவல்பழத்திற்கு உள்ளது.

மலச்சிக்கல் பிரச்சனையா? அப்படியானால் நாவல் பழத்தினால் செய்யப்பட்ட வினிகரை சரிசமமாக நீரில் கலந்து கொண்டு, தினமும் இரண்டு முறை குடியுங்கள். இல்லாவிட்டால் நாவல் பழத்தினை உட்கொள்ளுங்கள். மலச்சிக்கல் பிரச்சனை உடனே சரியாகும்.

அசிடிட்டி பிரச்சனை உள்ளவர்கள், நாவல் பழத்தில் ப்ளாக் சால்ட் மற்றும் சீரகப் பொடி சேர்த்து சாப்பிட அசிடிட்டி பிரச்சனை உடனே சரியாகும்.

பெண்களின் மலட்டுத் தன்மை குணமாக, வைட்டமின் ஈ தேவை. நாவல் மரத்தின் இலையின் சாற்றை கஷாயமாக்கித் தேன் அல்லது வெண்ணெய் கலந்து சாப்பிட்டால் மலட்டுத் தன்மை அகலும்.

நாவல் பழத்தினை (naval palam benefits) அளவாக சாப்பிட்டு வந்தால், இவை தமனிகளில் ஏற்படும் பிரச்சனைகளை குறைத்து, மாரடைப்பு வருவதைக் குறைக்கும்.

கோடை சீசனில் பல்வேறு இடங்களிலும் கிடைக்கும் நாவல் பழமானது மூட்டுவலி, நீரிழிவு நோய் மற்றும் செரிமான பிரச்சனைகளுக்கு சிறந்த இயற்கை தீர்வு தரும் ஒன்றாக உள்ளது. நாவல் பழம் மட்டுமின்றி அதன் இலைகள் மற்றும் கொட்டைகளிலும் பல மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. வயிற்று வலி, வயிற்றுப்போக்கு மற்றும் வாயு சிக்கல் உள்ளிட்டவற்றுக்கான சிறந்த வீட்டு வைத்தியங்களில் ஒன்றாக நாவல்பழம் கருதப்படுகிறது.

நாவல் பழத்தில் வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது, இவை நமது ஹீமோகுளோபின் லெவலை அதிகரிக்க உதவும் முக்கிய மினரல்ஸ் ஆகும். இந்த பழத்தை சாப்பிடுவதன் காரணமாக நம்முடைய ஹீமோகுளோபின் லெவல் அதிகரிப்பதால், ரத்தம் அதிக ஆக்ஸிஜனை உறுப்புகளுக்கு எடுத்துச் செல்லவும், நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவுகிறது. மேலும் இதில் உள்ள இரும்புச்சத்து நம் ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது.

நாவல்பழத்தில் இருக்கும் Astringent தன்மையானது சருமத்தை முகப்பருக்கள் இல்லாமல் வைத்திருக்க உதவுகிறது. உங்களுக்கு எண்ணெய் பசை மிக்க சருமம் இருந்தால் நாவல்பழத்தை எடுத்து கொள்ள வேண்டும். இந்த பழத்தை சாப்பிடுவதால் உங்கள் சருமம் புத்துணர்ச்சியாகவும், தெளிவாகவும் இருக்கும்.

ஏற்கனவே குறிப்பிடப்படி இந்த பழம் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை மேம்படுத்துவதோடு, இதில் உள்ள இரும்புச்சத்து பிளட்-ப்யூரிஃபையிங் ஏஜென்ட்டாக செயல்படுகிறது. நாவல்பழம் ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ், இரும்புச்சத்து போன்ற பல மினரல்ஸ் மற்றும் வைட்டமின் ஏ, சி உள்ளிட்டவற்றின் பவர் ஹவுஸாக இருக்கிறது. இதனால் இந்த பழம் முன்கூட்டியே முதுமை ஏற்படுவதை தடுப்பதோடு கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நினைப்பவர்கள் தினமும் அதிகளவு நாவல் பழத்தை உட்கொள்வது மிகவும் நல்லது. நாவல் பழத்தில் வைட்டமின் சி மற்றும் பலவித வைட்டமின் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. எனவே தினமும் உட்கொண்டு வந்தால் உங்களின் நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவடையும். மேலும் உங்களுக்கு நோய் வராமல் காக்க உதவும்.

தினமும் நாவல் பழம் உண்பவர்களுக்கு 30 சதவீதம் புற்று ஏற்படுவது குறைவு என பலவித ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

நாவல் பழத்தில் அதிக அளவு கால்சியம் மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் நிறைந்துள்ளது. உங்கள் உணவுகளில் உள்ள கால்சியம் சத்தினை உறிஞ்சுவதற்கு மெக்னீசியம் மிகவும் உதவியாக இருக்கும். எனவே எலும்புகளின் வலிமையினை அதிகரிக்க தினமும் நாவல் பழத்தினை உண்டு வாருங்கள்

நாவல் பழத்தை சாப்பிடுவது ஈறுகள் மற்றும் பற்களை வலுவாக்குகிறது. இவற்றில் உள்ள இயற்கை அமிலங்கள் பாக்டீரியாவை எதிர்த்துப் போராடவும், வாய்வழி சுகாதாரத்தை பராமரிக்கவும் உதவுகின்றன. இந்த பழத்தின் இலைகளில் இருக்கும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் ஈறுகளில் ரத்தப்போக்கு ஏற்படுவதை தடுக்க உதவுகின்றன. இதன் இலையை காய வைத்து பிறகு பவுடர் செய்து பற்பொடியாக பயன்படுத்தலாம். நாவல்பழ மரத்தின் பட்டையில் அஸ்ட்ரிஜென்ட் குணங்கள் உள்ளன. எனவே நீங்கள் இந்த மரத்தின் பட்டைகளை கொண்டு தயாரிக்கப்பட்ட கஷாயத்தைக் கொண்டு உங்கள் வாயை கொப்பளிப்பது வாய் புண்களை குணப்படுத்தலாம்.

சர்க்கரை நோயாளிகளுக்கு நாவல்பழம் சிறந்ததாக கருதப்படுகிறது, ஏனெனில் இது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கிறது. அதிகமாக சிறுநீர் கழிப்பது மற்றும் தாகம் உள்ளிட்ட நீரிழிவு நோயின் அறிகுறிகளை இந்த பழம் குணப்படுத்துகிறது. மேலும் இந்த பழம் லோ கிளைசெமிக் இன்டெக்ஸை கொண்டுள்ளது. நேவ் இந்த பழம் ரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்கும். இந்த மரத்தின் விதைகள், பட்டை மற்றும் இலைகளை சர்க்கரை நோய் சிகிச்சைக்கு பயன்படுத்தலாம்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *