இது தெரியுமா ? வாரம் இருமுறை மத்தி மீன் சாப்பிட்டு வந்தால்…

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மத்தி மீன் என்பார்கள்.. கேரளத்தில் இதை, சாளை, பேசாளை என்பார்கள்.

உடல் எடையை குறைக்க நினைப்பவர்களும் சாப்பிடக்கூடிய மீன் இது. புரதமும், அதிகப்படியான கொழுப்பும், நாம் சாப்பிட்ட பிறகு பல மணி நேரங்கள் வரை பசி உணர்வை தூண்டாது.. இதனால், எடை குறைப்பு பிரச்சனைக்கு நல்ல தீர்வாக இருக்கும். பசியை கட்டுப்படுத்தி உடல் எடையையும் குறைக்கும்.

முன்பெல்லாம் இந்த மீன் அவ்வளவு பிரபலமாக இல்லை. அப்போது மிகவும் விலைக் குறைவில் கிடைக்கும். ஆனால் தற்போது இந்த மத்தி மீன் மக்களிடையே பிரபலமாக உள்ளது. நிறைய பேர் இந்த மீனை அலைந்து திரிந்து வாங்கி சாப்பிட நினைக்கிறார்கள். இதற்கு காரணம் மற்ற மீன்களை விட மத்தி மீனில் ஏராளமான சத்துக்கள் இருப்பது தான்.

மத்தி மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிகம் உள்ளதால் ட்ரை கிளிசரைடுகள் அளவை குறைத்து இதய நோய் ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது.

தோல் நோய், மூளை மற்றும் நரம்பு நோய்கள், வயதானவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம், ஆஸ்துமா, முடி உதிர்தல் ஆகிய நோய்கள் வரும் வாய்ப்பை குறைக்கும்.

மத்தி மீனில் வைட்டமின் டி என்ற உயிர்ச்சத்து உள்ளது. இந்த சத்து செல்களின் செயல்பாட்டிற்கு உதவுகிறது. மத்தி மீன் பல்வேறு புற்று நோய்கள் ஏற்படும் வாய்ப்பையும் குறைக்கிறது.

மத்தி மீனை உண்பதால் கண், இதயம், நீரிழிவு, எலும்பு மற்றும் உடலில் உள்ள அனைத்து பாகங்களும் நன்மை அடையும்.

வாரம் இருமுறை மத்தி மீன் சாப்பிட்டு வந்தால் நாம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

சர்க்கரை நோய் உள்ளவர்கள், மத்தி மீன் சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு திறன் அதிகரித்து ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தலாம்.

மத்தி மீன்களில் கால்சியம் அதிகம் இருப்பதால் எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது.

கூடுதலாக மத்தி மீனில் இருக்கும் வைட்டமின் பி 12 நாம் உடலில் இருக்கும் ஹோமோசைஸ்டீன் அளவை கட்டுபடுத்தி இதய பாதிப்பில் இருந்து நம்மை காப்பற்றி இதயம் பலப்பட உதவும்.

மத்தி மீனில் அயோடின் கலந்த தாதுச்சத்து உள்ளதால் அதை நாம் உணவில் சேந்த்து சாப்பிட்டு வந்தால் முன் கழுத்துகழலை நோய் ஏற்படுவதை தடுக்கலாம்.

மத்தி மீனின் செல்களில் இருந்து தான் கால்சியம் மாத்திரைகள் தயாரிக்கப்படுகிறது. இந்த மாத்திரைகளை சாப்பிடுவதால் சருமத்தை பளபளப்பாக வைத்து கொள்ள உதவுகிறது.

கண்பார்வை குறைபாடு உள்ளவர்கள் மத்திமீனை உணவில் சேர்த்துக் கொள்வதால் கண் குறைபாடு நீங்கி பார்வை திறன் அதிகரிக்கும்.

உடற்பயிற்சி செய்பவர்கள் டயட்டில் உள்ளவர்கள் வாரம் இரு முறை மத்தி மீனை உணவில் சேர்த்து கொண்டால் நாம் உடலை கட்டு கோப்பாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

100 கிராம் மத்தி மீனில் 400 மிலி பாலில் உள்ள கால்சியம் உள்ளது. எனவே பால் பிடிக்காதவர்கள் வாரத்திற்கு 1-2 முறை மத்தி மீனை உட்கொண்டு வந்தால், உடலுக்கு போதுமான கால்சியம் கிடைத்து, எலும்புகள் தொடர்பான பிரச்சனைகள் தடுக்கப்பட்டு, எலும்புகள் வலுபெறும்.

மத்தி மீன்கள் உடலில் நல்ல கொலஸ்ட்ரால் அளவை மேம்படுத்த உதவுவதாக ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளன. உடலில் நல்ல கொலஸ்ட்ரால் போதுமான அளவில் இருந்தால், இதயத்தின் செயல்பாடு சிறப்பாக இருக்கும் மற்றும் இதய நோயின் அபாயமும் குறையும்.

மத்தி மீன் மூளையின் செயல்பாட்டையும், நினைவாற்றலையும் அதிகரிக்க உதவுகிறது. இதற்கு அதில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் தான் காரணம். இந்த அமினோ அமிலங்கள் நரம்பு இழைகள் மற்றும் மூளையில் உள்ள செல்களுக்கு இடையேயான தகவல்தொடர்புகளைப் பாதுகாக்கின்றன. மேலும் இது டோபமைன் உற்பத்தியை அதிகரித்து, மனதை எப்போதும் ரிலாக்ஸாக வைத்துக் கொள்ள உதவுகின்றன.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *