இது தெரியுமா ? மோருடன் உப்பு கலந்து தினசரி குடித்து வந்தால்…
மோர் குடிப்பதால் என்ன நன்மை கிடைக்கும் என்று பலரும் அதன் நன்மை தெரியாமலேயே இதனை நல்லது என்று நினைத்து வாங்கிக் குடிப்பார்கள். காரசாரமான உணவை உட்கொண்ட பின்னர் வயிறு எரிய ஆரம்பமாகும். அப்படி வயிறு எரியும் போது, ஒரு டம்ளர் மோர் குடித்து வந்தால், வயிறு குளிர்ச்சியடையும்.
மோர் இதனை அமிர்தம் என்றே சொல்ல வேண்டும். அடிக்கடி நெஞ்செரிச்சலால் அவதியுறுபவர்கள் இதனை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதிலும் இதில் இஞ்சி சாறு சேர்க்கும் பொழுது இது வயிற்றுக்குள் சிறந்த உணவு.
* காரசார உணவு சாப்பிட்டால் அதன்பின் ஒரு கிளாஸ் மோர் சாப்பிட்டால் உணவின் கடுமையினை நீக்கி விடும்.
*தயிரினை நாம் உண்ணும் மதிய உணவில் கடைசியாக சாப்பிடுவது காலம் காலமாக கடைப்பிடித்து வரும் ஒரு பழக்கம். இதற்கு ஒரு முக்கியமான காரணம் தயிரில் செரிமானத்திற்கு தேவையான புரோபயோடிக்ஸ் என்ற பாக்டீரியாக்கள் உள்ளன. தயிரை மோர் ஆக்கும் போதும் அந்த நன்மைகள் கிடைக்கின்றன. மோருடன் சிறிது, இஞ்சி, சீரகம் சேர்த்து குடித்து வந்தால் செரிமானம் சீராக்கப்படும். வயிறு உப்புசம், அசௌகரியமும் சரியாகிவிடும்.
* ஜீரணத்திற்கு அதிகம் உதவுவது. அதிக ஏப்பம் ஏற்படுவதினை தடுப்பது.
* கால்சியம் சத்து அளிப்பது நாள் ஒன்றுக்கு ஒருவருக்கு 1000, 1200 மி.கி. கால்சியம் தேவைப்படுகின்றது. 1 கப் பாலில் 300 மி.கி. கால்சியம் சத்து உள்ளது. 1 கப் தயிரில் 420 மி.கி. கால்சியம் உள்ளது. 1 கப் மோரில் 250 மி.கி. கால்சியம் உள்ளது.
* உணவு உண்டபின் மோர் குடிக்கும்பொழுது நெய், வெண்ணெய், ஆலிவ் எண்ணெய் இவற்றினை உணவு குழாயில் இருந்து கழுவி எடுத்து விடுகின்றது.
* பொட்டாசியம், வைட்டமின் ’பி’ சத்து, மற்ற வைட்டமின்கள் தாது உப்புகள் கொண்டது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தியினை கூடுகின்றது. தூக்கம் நன்கு வரும். ஹார்மோன்கள் சீராக வேலை செய்யும்.
* கொழுப்பினை குறைக்கின்றது. இரத்த அழுத்தம் சீராய் இருக்க உதவுகின்றது.
* புற்று நோயை தவிர்க்கின்றது. உடலில் நீர் வற்றாமல் இருக்கச் செய்கின்றது.
* லக்டோஸ் ஒவ்வாமை இருப்பவர்களுக்கு மோர் மிகவும் சிறந்தது. அதிக கொழுப்பில்லாத பாலில் தயாரிக்கப்பட்ட தயிரில் உப்பு சேர்க்காமல் மோர் தயாரித்து அருந்துவது மிகவும் சிறந்தது
*நாம் உண்ணும் உணவின் சக்தியை நம் உடலுக்கு முழுமையாக பெற்றுத்தர வைட்டமின் பி2 அவசியமாக தேவைப்படுகிறது. இந்த சத்தானது மோரில் அதிகம் இருக்கிறது. இது நம் வயிற்றில் உள்ள கல்லீரல் நன்றாக செயல்பட உதவி புரிகிறது. உடலில் தேவையற்ற நச்சுப் பொருட்களையும் வெளியேற்றி உள் உறுப்புகளை தூய்மைப்படுத்துகிறது. நம்மை அறியாமல் சாப்பிடும் உணவுப்பொருட்களில் ஏதாவது, நம் உடலுக்கு சேராத விஷத்தன்மை இருந்தாலும் கூட அதனை மோர் நீக்கிவிடுகிறது. இது தவிர தினமும் ஒரு டம்ளர் மோர் குடித்து வருவதன் மூலம் வைட்டமின் குறைபாடு சரி செய்யப்படுகிறது.
*உடலில் உள்ள நச்சுப்பொருட்கள் வெளியேறி விட்டாலே நம் முகத்திற்கு தனி பொலிவு ஏற்பட்டுவிடும். முகத்தை அழகுபடுத்தும் ரசாயனப் பொருட்கள் கலக்கப்பட்ட அழகு சாதனங்களை விட்டுவிட்டு மோர், தயிர் இவற்றை கொண்டு நம் முகத்தை மசாஜ் செய்து கொள்ளலாம். இது சருமத்திலுள்ள சுருக்கங்களை நீக்கும். சருமத்தை மென்மையாகவும் மாற்றும்.
*மோருடன் உப்பு கலந்து தினசரி குடித்து வந்தால் நீர்ச்சத்து குறைபாடு நம் உடலில் ஏற்படாது. மோரில் உள்ள எலக்ட்ரோலைட்ஸ் மற்றும் நீர் சத்து அதிகமாக இருப்பதால் கோடை காலங்களில் உடலை வறட்சி நிலையிலிருந்து காக்கும்.
*நார்ச்சத்து உள்ள பொருட்களை நாம் அதிகம் சாப்பிடும் சமயத்தில் மலச்சிக்கல் ஏற்படும். மலச்சிக்கல் உள்ளவர்கள் தொடர்ந்து மோர் குடித்து வர இந்த பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
*மோரில் பயோ ஆக்டிவ், புரோட்டின், ஆன்டி-வைரல், ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-கேன்சர் இந்த பொருட்கள் நிறைந்துள்ளது. இதனால் தினமும் ஒரு டம்ளர் மோர் குடித்து வர நமக்கு ஏற்படும் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரலாம் என்கிறது மருத்துவம்.
*நம்மில் பலபேர் அசிடிட்டி வந்துவிட்டால் அசிடிட்டி டானிக்கை தான் தேடுவோம். ஆனால் நம் வீட்டிலேயே உள்ள வைத்தியம் தான் மோர் அசிடிட்டியை குணப்படுத்த மோர் தவிர, சிறந்த மருந்து வேறு எதுவும் இல்லை. ஒரு டம்ளர் மோருடன் மிளகு, சீரகம், இஞ்சி, கருவேப்பிலை, கொத்தமல்லி, பச்சை மிளகாய் இவற்றை சேர்த்து அரைத்து அந்த விருதினை சிறிது, மோரில் கலந்து குடித்தால் போதுமானது. அசிடிட்டி பிரச்சினை தீர்ந்துவிடும்.
*மூல நோய்க்கு ஒரு சிறந்த மருந்தாக மோர் பயன்படுத்தப்படுகிறது. எந்தவித மசாலாக்களும் சேர்க்கப்படாமல் மோரில் சிறிது உப்பு மட்டும் கலந்து குடித்து வர மூலநோய் குணமாகும். குழந்தைகளுக்கு ஏற்படும் சாதாரண வயிற்றுப் போக்கினை மோர் கொடுத்து சரி செய்யலாம். சளி பிடிக்கும் என்று நினைப்பவர்கள் லேசாக சூடுபடுத்தி சிறிது மஞ்சள் தூள் கலந்து கொடுத்தால் சளி பிரச்சனை வராது.
*பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில் ஏற்படும் வயிற்று வலி, இரத்தப்போக்கிற்கு ஒரு டம்ளர் மோருடன் வெந்தயம் சேர்த்து குடித்தால் போதுமானது. வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகள் நீங்கும்.