இது தெரியுமா ? எண்ணெய் குளியலின் போதெல்லாம் சீயக்காய்க்கு பதில் வெட்டிவேரின் பவுடரை பயன்படுத்தி வந்தால்…
வெட்டி வேரானது கரிசல், வண்டல், செம்மண் மற்றும் ஆற்று மண் என அனைத்து வகை மண்ணிலும் குளிர், மழை. வெயில் உட்பட பனிக்காலத்திலும் வளரக்கூடியதாகும். தமிழ்நாடு உட்பட, ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களில் இந்த தாவரம் குறிப்பிட்ட அளவில் பயிரிடப்படுகிறது.
வெட்டிவேரை நிலத்தில் இருந்து எடுத்த பின்னர், மேற்பகுதியான புல்லையும், அடிப்பகுதியான வேரையும் தனியாக வெட்டி எடுத்துவிட்டு, நடுவில் உள்ள சிறு துண்டை மீண்டும் புதிதாக நட்டுப் பயிரிடும் காரணத்தால்தான் இம்மூலிகை வெட்டிவேர் என்று அழைக்கப்படுகிறது.
தலைமுடி தொடங்கி, அடிப்பாதம் வரை பாதுகாத்திடும் தன்மை கொண்ட இவ்வேரை தண்ணீரில் ஊறவைத்து, 30 மி.லி – 60 மி.லி வரை உணவுக்குப்பின் அருந்தி வர காய்ச்சல், செரிமான குறைபாடு, வயிற்றுப்போக்கு போன்ற வயிறு தொடர்பான பிரச்னைகளும் சிறுநீரக எரிச்சலும் குணமாகும். குழந்தைகளுக்கு 10 மி.லி. முதல் 20 மி.லி. தரலாம். வெயில் காலத்தில் நம்மைப் பயமுறுத்துகிற வியர்குரு, முகப்பரு ஆகியவை குணமாக, வெட்டி வேர், விலாமிச்சை, பாசிப்பயிறு, சந்தனம் ஆகியவற்றை தூளாக அரைத்து, அதனுடன் பன்னீர் கலந்து தடவி வர, எதிர்பார்த்த பலன் கிடைக்கும்.
சுத்தமான தேங்காய் எண்ணெயில் வெட்டிவேரை ஊற வைத்து தலைமுடியின் வேர்க்கால்களில் படும்படி, தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது குறைந்து கருமையாக முடி வளரும். கண்களும் குளிர்ச்சியடையும்.
வெட்டிவேரினால் செய்யப்படும் நாற்காலிகள், மூலநோயின் தீவிரத்தைக் குறைத்து அந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்மை பயக்கிறது.
மண் பானை தண்ணீரில் வெட்டி வேரை சேர்க்கும் போது கிருமிகள் அழிந்து நீர் சுத்தமாகும். நல்ல மணம் கிடைக்கும். உடல் சூட்டை குறைக்கும் தன்மை வெட்டி வேருக்கு உண்டு.
காய்ச்சல் மற்றும்வயிற்றில் ஏற்படும் நோய்களைக் கட்டுப்படுத்தும். நாவறட்சி, தாகம் நீக்குவதுடன் மன மகிழ்ச்சி உண்டாகும். வாந்தி பேதிக்கும் இது நல்ல மருந்தாகும். மேலும் சளி தொந்தரவு ஏற்படாமல் இந்த வேர் பாதுகாக்கும். வெட்டிவேர் கவலையை நீக்கி மனதை அமைதிப்படுத்தும், மன அழுத்தத்தை நீக்கவும் பெரிதும் உதவுகிறது. வெட்டிவேரில் தயாரிக்கப்படும் எண்ணெய் முக அழகை கூட்டுவதோடு தோலில் ஏற்படும் காயங்களை குணப்படுத்துகிறது.
நீண்ட நாட்களாக ஆறாமல் வடுக்கள் இருப்பின் அவற்றின் மேல் வெட்டிவேர் எண்ணெய் தடவி வந்தால் தழும்பு மறைந்து விடும். இதன் எண்ணெய்யை உடல் முழுவதும் தடவினால் உடலுக்கு நோய் எதிர்ப்பு மண்டலத்தை உருவாக்கி பாதுகாக்கிறது. வெட்டிவேரின் எண்ணெய் பாலுணர்வு செய்யும் மூளையின் லிபிடோ பகுதிகளை தூண்டுகிறது. மஜாஜ் செய்வதற்கு வெட்டிவேரின் எண்ணெய்யை பயன்படுத்துகின்றனர். நமது உடலில் உள்ள போதை நீக்க பணிகளை செய்து நிணநீர்க்குரிய வடிகாலை தூண்டுகிறது.
எண்ணெய் தேய்த்து குளிக்கும் போதெல்லாம் சீயக்காய்க்குப் பதில் வெட்டிவேரின் பவுடரை பயன்படுத்துங்கள். இதை தொடர்ந்து செய்தால் முகத்தில் எண்ணெய் வழியாது. முகம் கூடுதல் அழகுடன் காணப்படும். வெட்டிவேரை வாங்கி பயன்படுத்துங்க ஆரோக்கியத்துக்கும் அழகுக்கும் சிறந்தது.
கோடைகாலத்தில் நீர் கடுப்பு, தேக எரிச்சல், வயிற்றுக் கடுப்பு, போன்றவற்றால் அவதிப் படுபவர்கள் வெட்டிவேரை சுத்தம் செய்து உலர்த்திப் பொடிசெய்து கொண்டு அதனுடன் பெருஞ்சீரகம் பொடி செர்த்து சம அளவு எடுத்து வெந்நீரில் 200 மி.கி. அருந்தினால் தீர்வு கிடைக்கும்..முகம் முழுக்க அடிக்கடி பருக்கள் தோன்றி அவதிப்படுகிறவர்களுக்கு, நல்ல மருந்தாக இருக்கிறது இந்த வெட்டிவேர் விழுது…
வெட்டிவேரைக் கொண்டு செய்யப்படும் விசிறிகள் உடல் எரிச்சல், தேக சூட்டினை நீக்கி, மனம் புத்துணர்வு அடைய செய்கின்றன.
கோடைக்காலத்தில் வெட்டிவேரைக்கொண்டு செய்யப்படும் தட்டிகளை ஜன்னல்களில் கட்டிவர, அறையின் வெப்பத்தைக்குறைத்து நறுமணத்தையும் குளிர்ச்சியையும் தரும்.
இதன் வேரிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் மற்றும் தைலம் நறுமணம்கொண்டது. இத்தைலத்தைத் தேய்த்துவர, பிரசவ தழும்புகள் குறையும் தசைவலி மற்றும் மூட்டுவலி நீங்கும். இவ்வேரை, மணமூட்டியாக தைலங்களிலும். குளியல்சோப்புகளிலும், பயன்படுத்துவதுண்டு.
குளிர்பானம் மருத்துவ குணம் நிறைந்த மூலிகையாக மட்டும் இல்லாமல், இந்த வேர், தாகம் தணிக்கும் சர்பத் தயாரிக்கவும் உதவுகின்றது. வெட்டிவேரினை மண்பானை நீரில் ஊறவைத்து, பனைவெல்லத்தினைக் கலந்து சர்பத் செய்து அருந்தி மகிழலாம். இதனால், உடல் சோர்வு நீங்கி, தெம்பு உண்டாகும்.