இது தெரியுமா ? செம்புப் பாத்திரத்தில் தண்ணீர் வைத்துக் குடித்தால்.
நவீனமாய் மாறிப்போய்விட்ட உலகில் அலுமினியம், சில்வர், மைக்ரோஓவன் போன்றவற்றில் மக்கள் மூழ்கிவிட்டார்கள்.
ஆனால், இவற்றில் சமைத்து உண்ணும் உணவினை விட மண்பானை சமையல் உடலிற்கு ஆரோக்கியத்தை வழங்கும். இதனால் தான் அந்த காலத்தில் எல்லாம் நம் முன்னோர்கள் அதிக வயது உயிர் வாழ்ந்தனர்.
மண்பானைகளில் சமைக்கும் போது உணவின் மீது வெப்பம் சீராக, மெதுவாக பரவுகிறது. இது உணவை சரியான முறையில் சமைக்க உதவுகிறது. மேலும் மண்பானைகளில் உள்ள நுண்துளைகள் மூலம் நீராவி, காற்று உணவில் ஒரே சீராக ஊடுருவி உணவை சமைக்க உதவுகிறது. இதனால் மண்பானைகளில் சமைக்கும் உணவு ஆவியில் வேக வைத்த உணவைப்போன்ற தன்மையை பெறுகிறது. இது உடல் நலனுக்கு உகந்தது. இதனால் உணவில் உள்ள சத்துகள் பாதுகாக்கப்பட்டு, எளிதில் செரிமானமாகக் கூடிய தரமான உணவு கிடைக்கிறது. மண் பாத்திரங்கள் உணவில் உள்ள அமிலத் தன்மையை சமப்படுத்தும் தன்மை கொண்டவை.
உப்பு, புளிப்பு சுவையுடைய உணவுகள் சமைக்கும் போது, மண்பானை தீங்கான விளைவுகள் எதையும் ஏற்படுத்துவதில்லை. ஆனால் உலோக பாத்திரங்கள் உணவுடன் வினைபுரியும் நிலை உள்ளது. மண்பானையில் சமைக்கும் போது, அதிக எண்ணெய் பயன்படுத்தவும் தேவையில்லை. எனவே மண்பானையில் சமைக்கும் உணவு மிகவும் ஆரோக்கியமானதாகும்.
மண்பானையின் மகிமை
மண் பாண்ட சமையல், ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் தரக்கூடியது. உணவில் சுவையைக் கூட்டக்கூடியது. நீண்ட நேரத்துக்குக் கெடாமலும் சுவை மாறாமலும் இருக்கும். உணவும் எளிதில் செரிமானம் ஆகும். மண் பாத்திரத்தில் தயிரை ஊற்றிவைத்தால் புளிக்காமல் இருக்கும். தண்ணீர் குளிர்ச்சியாகவும், சுவையாகவும் இருக்கும். இவ்வளவு அருமை பெருமைகள் இருந்தும், இன்று பெரும்பான்மையான வீடுகளில் இது பயன்பாட்டில் இல்லை.
மண்பாண்டம் தவிர்த்து அந்தக் காலத்தில் தங்கம், வெள்ளி, செம்பு, பித்தளை, வெண்கலம் என ஐந்து வகையான உலோகங்களை நம் முன்னோர்கள் பயன்படுத்தினர்.