இது தெரியுமா ? வாகனங்களில் பயணிக்கும்போது தலைசுற்றல், வாந்தி, மயக்கம் ஏற்பட்டால்
1.5 கிராம் ஏலக்காய் வீதம் ஒரு நாளைக்கு இரண்டு முறை என 12 வாரங்களுக்கு ஏலக்காயை எந்த விதத்திலாவது உணவில் சேருங்கள்.
உயர் ரத்த அழுத்தம் சராசரிக்கு வந்துவிடும் என்கிறது 2009&ம் ஆண்டு வெளியான இந்தியன் ஜர்னல் ஆஃப் பயோகெமிஸ்ட்ரி அண்ட் பயோஃபிசிக்ஸ். உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கக் கொடுக்கப்படும் மாத்திரை எப்படி செயல்படுகிறதோ, அந்தச் செயலை ஏலக்காய் செய்கிறது.
வாகனங்களில் பயணிக்கும்போது தலைசுற்றல், வாந்தி, மயக்கம் போன்றவை ஏற்படுபவர்கள் இரண்டு ஏலக்காயை வாயில் போட்டு மென்று கொண்டிருந்தால் இந்த தொல்லை ஏதும் ஏற்படாது.
சளி மற்றும் காய்ச்சலைத் தடுத்துவிடக்கூடியது. ஒரு ஏலக்காய் டீ குடித்தால் சளி, காய்ச்சல் பறந்துவிடும்.
ஏலக்காய் வாய் சுகாதாரத்திற்கும், வாய் ஆரோக்கியத்திற்கும் ஏற்றது. பல் வலி, ஈறுகளில் ஏற்படும் வீக்கத்தை கட்டுப்படுத்தலாம்.
ஏலக்காய் அதிக விலைமதிப்பு கொண்ட மசாலா பொருளாக விளங்குகிறது.
வாய் துர்நாற்றத்தையும் சரிசெய்யக்கூடியது இது. வாய்ப்புண்ணையும் சரிசெய்யும். இரண்டு ஏலக்காய் விதைகளை வாயில் போட்டு மென்றாலே துர்நாற்றம் நீங்கிவிடும்.
சிறிது ஏலக்காய்த் தூளை உணவில் சேர்த்தாலோ, விதைகளை மென்றுவந்தாலோ அது நன்கு பசியைத் தூண்டும்.
ஏலக்காயில் பல மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது. பழங்காலம் தொட்டு இது சமையலில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, கால்சியம், சோடியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, காப்பர், மாங்கனீஸ் உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன.
இதனை ஒரு சில பொருட்களுடன் சேர்த்து சாப்பிடும் போது இன்னும் பல நன்மைகளை தருகின்றது. தற்போது அவை என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
உயர் ரத்த அழுத்தம் இருக்கும் நோயாளிகள் தினமும் இதைச் சிறிது சாப்பிட்டு வந்தால், நுரையீரலுக்குச் செல்லும் ரத்தம் சீராகும். இதனால் ரத்த அழுத்தம் விரைவில் குறையும்.
ஏலக்காய் விதைகளை தொடர்ந்து உட்கொள்வதன் மூலமாக மலச்சிக்கல், அமிலத்தன்மை, வாயு, வயிறு வீக்கம், வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகளை தடுக்கலாம்.
ஏலக்காய் சாற்றில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது, இது இரத்த நச்சுத்தன்மையை குறைக்க உதவுகிறது மற்றும் அடிக்கடி சிறுநீர் கழிப்பதை ஊக்குவிக்கிறது.
ஏலக்காய்த்தூள், டீ தூள் இரண்டையும் சேர்த்து டீ தயாரித்து அத்துடன் தேன் சேர்த்து, தினம் இருவேளை பருகி வர, நரம்புகள் வலுப்படும்.
தேனுடன், ஏலக்காய்த்தூள் கலந்து, சாப்பிட்டு வர, நரம்புத் தளர்ச்சி நீங்கி, நரம்புகள் நன்கு வலிமை அடையும்.
சிறிது ஏலக்காய், சுக்கு இவைகளுடன் பால் தெளித்து விழுதாக அரைத்து, நெற்றியில் பற்றிட தலைவலி சரியாகும்.
ஏலக்காய் விதைகளை வாயிலிட்டு அடக்கிக் கொண்டு, உமிழ்நீரை விழுங்கிவர, வாய்நாற்றம் மாறும். வாயில் புண் இருந்தாலும் குணமடையும்.