இது தெரியுமா ? கிராமப்புரங்களில் ஒரு சில வியாதிகளுக்கும் இதை பயன்படுத்துகிறார்கள்..!
நாம் சமையலுக்கு மட்டுமே பயன்படுத்தும் இஞ்சியை கிராமப்புரங்களில் ஒரு சில வியாதிகளுக்கும் இதை பயன்படுத்துகிறார்கள். ஆனால் நகரத்தில் வாழும் மககள் இதன் அருமை புரியாமல் கண்ட சிகிச்சையை எடுத்துக்கொண்டு உடலை கெடுத்துக் கொள்கின்றனர்.
எனவே இஞ்சியின் பயன்களை புரிந்துக்கொண்டு ஒரு சில நோய்களுக்கு பயன்படுத்துவதன் மூலம் அவற்றை குணப்படுத்தலாம்.
* பிரசவத்தின் போது உண்டாகும் பொதுவான பிரச்சனைகளான குமட்டல், வாந்தி போன்றவைகளுக்கு இஞ்சி சாறினை குடித்து வந்தால், அவை எளிதில் குணமாகும்.
* கர்ப்பக்காலத்தில் பெண்களுக்கு உணவு என்பது மருந்தாக தோன்றும். இது போன்ற நேரங்களில் இஞ்சியால் தயாரிக்கப்பட்ட ஊறுகாய், துவையல் போன்ற பொருட்கள் பசியினை தூண்டி, பசியின்மையைப் போக்குகிறது.
* கீமோதெரபி போன்ற சர்ஜரியின்போது உண்டாகும் குமட்டலை சரிசெய்கிறது.
* மூட்டுவலி, சதைப்பிடிப்புப் போன்ற வலிகளைக் குறைக்கும் மருந்தாகவும் இது பயன்படுகிறது.
* கடுமையான போதையையும் முறிக்கும் சக்தி இஞ்சிக்கு இருப்பதாக அறிஞர்கள் பலரும் கண்டறிந்துள்ளனர்.
* இஞ்சிச் சாற்றை வாள சம்பந்தப்பட்டபேதிமாத்திரையுடன் அனுபானமாககச் சேர்த்துக் கொடுப்பர்.
* இது மருந்தின் குணத்தை அதிகப்படுத்துவதோடு குடல் இரைப்பை முதலிய உறுப்புகளிலுள்ள மாசை வெளியாக்கும்.
* ஒரு தோலா எடையுள்ள இஞ்சியை அரைத்துப் பிழிந்தெடுத்த சாற்றுடன் ஒரு கோழிமுட்டையின் மஞ்சள் கருவைக்கூட்டிநன்றாக அடித்து, கரண்டியிலிட்டு சிறிது நெய் விட்டு, நீர் சுண்டி வெந்த பதத்தில் உட்கொள்ளலாம்.
* தீனிப்பை, ஈரல் ஆகியவைகளுக்குப் பலத்தை கொடுக்கும்
* நினைவாற்றலை அதிகப்படுத்தும்.
* ஒரு இஞ்சித் துண்டை வாயிலிட்டு அடக்கி வைத்து கொண்டிருந்தால் தாகம் அடங்கும்…
* வேறு பலப் பிணிகளுக்கு இஞ்சியுடன் மற்றும் சில மருந்துப் பொருட்களைக்கூட்டி இஞ்சி லேகியம், இஞ்சித் தைலம் ஆகியவைகளைச் செய்து உபயோகித்துப் பயன் பெறுவர். எனவே, இஞ்சியை நம் அன்றாட உணவில் எடுத்துக்கொள்வதன் மூலம் பல நோய்களை நாம் எதிர்க்கலாம்.
இஞ்சியால் உண்டாகும் 10 மருத்துவ பலன்கள்
இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு, வெங்காய சாறு மூன்றையும் கலந்து ஒருவேளை அரை அவுன்ஸ் வீதம் சாப்பிட்டுவர ஆரம்ப கால ஆஸ்துமா, இரைப்பு, இருமல் குணமாகும்.
இஞ்சி சாறை பாலில் கலந்து பருகுவதன் மூலம் வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள் குணமடைவதோடு உடம்பும் இளைக்கும். மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி என்பன நீங்க இஞ்சியை துவையல், பச்சடி செய்து சாப்பிட வேண்டும்
ஒற்றைத் தலைவலி பிரச்சனை உள்ளவர்கள் சிறிது இஞ்சியை அரைத்து பேஸ்ட் செய்து, நீரில் கலந்து நெற்றியில் தடவ நல்ல பலன் கிடைக்கும்.
சிறிது இஞ்சியை நீரில் தட்டிப் போட்டு கொதிக்க வைத்து இறக்கி, அதில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து குடித்து வந்தால், நெஞ்சுப் பகுதியில் தேங்கியுள்ள சளி பிரச்சனைக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும்.
இஞ்சி சாறை பாலில் கலந்து பருகுவதன் மூலம் வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள் குணமடைவதோடு உடம்பும் இளைக்கும். மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி என்பன நீங்க இஞ்சியை துவையல், பச்சடி செய்து சாப்பிட வேண்டும்.
பல்வலி ஏற்படும் போது, இஞ்சி துண்டை ஈறுகளில் மசாஜ் செய்யலாம் அல்லது இஞ்சியை நீரில் தட்டிப் போட்டு கொதிக்க வைத்து, அந்த நீரினால் வாயைக் கொப்பளிக்க வேண்டும்.
இஞ்சியை அரைத்து நீரில் கலந்து தெளிந்த பின், நீரை எடுத்து, துளசி இலை சாறை சேர்த்து ஒரு கரண்டி வீதம் ஒரு வாரம் சாப்பிட வாய்வுத் தொல்லை நீங்கும்.
இஞ்சி குமட்டல் மற்றும் வாந்தி மற்றும் காலையில் ஏற்படும் சோர்வை போக்க இஞ்சியை வெரும் வயிற்றில் ஒரு துண்டு சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.
இஞ்சியைத் தட்டி நீரில் போட்டு கொதிக்க வைத்து இறக்கி, அதில் தேன் கலந்து குடித்தால் செரிமானப் பிரச்சனைகள் நீங்கும். அதுவும் இதை காலையில் குடித்தால் செரிமான மண்டலம் சுத்தமாகி, அதன் செயல்பாடு அதிகரிக்கும்.
இஞ்சியின் எதிர்மறை விளைவுகளில் இதய படபடப்பு ஒன்றாகும். இஞ்சியை அளவுக்கு அதிகமாக எடுத்து கொள்ளும் போது இதய படபடப்பு, மங்கலான கண்பார்வை மற்றும் தூக்கமின்மை ஆகியவற்றை இஞ்சி ஏற்படுத்துவதாக அறியப்படுகிறது. மேலும் இப்பழக்கம் குறைந்த ரத்த அழுத்தத்தையும் ஏற்படுத்தும், மாரடைப்புக்கும் வழிவகுக்கும். எனவே இஞ்சியை குறைந்த அளவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது.
பெண்கள் தங்கள் கர்ப்ப காலத்தில் இஞ்சியை உட்கொள்வதை தவிர்க்கவும் அல்லது குறைக்கவும் நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். அதிகப்படியான இஞ்சி நுகர்வு கர்ப்ப காலத்தில் கடும் நெஞ்செரிச்சல் மற்றும் ஆசிட் ரிஃப்ளக்ஸை ஏற்படுத்தும். கருவிலிருக்கும் குழந்தைக்கு இஞ்சியின் விளைவுகள் இன்னும் நிரூபிக்கப்படவில்லை என்பதால் அதை தவிர்ப்பது நல்லது.
அதிகமாக இஞ்சியை உட்கொள்வது நீரிழிவு நோயாளிகளுக்கு தீங்கு விளைவிக்கும். அதிக இஞ்சி நுகர்வு நீரிழிவு நோயாளிகளுக்கு தலைச்சுற்றல் மற்றும் சோர்வை ஏற்படுத்தும். உடலில் ரத்த அழுத்தத்தை குறைக்க கூடும். அதிக இஞ்சி பயன்படுத்துவது இன்சுலின் அளவை பாதிக்கும். நோயாளிகள் பயன்படுத்தும் சில நீரிழிவு மருந்துகளுடன் வினை புரிந்து ரத்தச் சர்க்கரைக் குறைவை ஏற்படுத்த கூடும். எனவே நீரிழிவு நோயாளிகள் இஞ்சியை எடுத்து கொள்ளும் முன், எப்போதும் மருத்துவ ஆலோசனையை பெறுவது நல்லது.
இஞ்சி பித்த உற்பத்தியை அதிகரிக்கிறது மற்றும் செரிமானத்தை மேம்படுத்துகிறது. ஆனால் வயிறு காலியாக உள்ள போது இது அதிகப்படியான இரைப்பை தூண்டுதலுக்கு வழிவகுக்கலாம், இதனால் செரிமானக் கோளாறு, எரிச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படலாம்.
சில நேரங்களில் அதிக இஞ்சி நுகர்வு, அலர்ஜிகளை ஏற்படுத்தும். தோலில் தடிப்புகள், கண் சிவத்தல், மூச்சுத் திணறல், அரிப்பு, உதடு வீக்கம், கண்களில் அரிப்பு மற்றும் தொண்டையில் அசௌகரிய உணர்வு உள்ளிட்ட சில பொதுவான அலர்ஜிகள் ஏற்படலாம்.